ஆபிரகாமோடு தேவனுடைய உடன்படிக்கை GOD'S COVENANT WITH ABRAHAM 56-04-28 உமக்கு நன்றி, ஐயா. நாம் உட்காருவதற்கு முன்பாக சற்று ஜெபிப்போமா? எங்களுடைய பரலோகப் பிதாவே, "விசுவாசிப்பாய் (Only Believe) என்ற அந்தப் பாடலானது அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கையில், பரலோகப் பிதாவே, இன்றிரவு அநேகர் உம்மிடம் விசுவாசம் கொள்ளுகிற ஒரு மிக சிறப்பான இரவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இதை அருளும். எங்கள் எல்லார் மேலும் உம்முடைய ஐஸ்வரியமான ஆசீர்வாதங்கள் வந்து தங்குவதாக. நாங்கள் வேண்டிக்கொள்கிற காரியங்களுக்கு தகுதியற்றவர்களாய் இருக்கிறோம், ஆனால் நாங்கள் கேட்கும்படி நீர் கூறியிருப்பதினாலும், நாங்கள் வேண்டிக்கொள்கிற எதையும் நீர் எங்களுக்கு அருளுவீர் என்ற வாக்குத்தத்தத்தை நீர் எங்களுக்குக் கொடுத்திருப்பதினாலும் நாங்கள் கேட்கிறோம். ஆகவே, நீர் ஒவ்வொரு இழக்கப்பட்ட ஆத்துமாவையும் இன்றிரவு இரட்சிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நேரானதும் குறுகலானதுமான பாதையை விட்டு விலகி அலைந்து திரிகிற ஒவ்வொருவரையும் திரும்பக் கொண்டு வாரும். வியாதியிலும் உபத்திரவத்திலும் இருக்கிற அனைவரையும் சுகமாக்கும். பரிசுத்தவான்களின் இருதயங் களைக் களிகூரப்பண்ணும். நாங்கள் தேவனுடைய மகிமைக்காக அவருடைய குமாரனின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 2. இங்கே இருப்பது மிகவும் சந்தோஷமாயுள்ளது. அநேகர் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக வருந்துகிறோம், ஆனால் நாங்கள்.... எங்களால் உதவி செய்ய முடியவில்லை. இந்த சிறு கூடுகையினுடைய கடைசி ஆராதனை நாளை இருக்கப் போகிறது, ஏன், தேவனுக்குச் சித்தமானால், ஏதோவொரு நாளில் ஒரு கூடாரத்திற்கு- ஒரு பெரிய கூடாரத்திற்குத் திரும்பி வருவோம் என்று நம்புகிறோம், ஏனெனில் நாம் நீண்ட காலம் தரித்திருந்து உங்களோடு இருக்க முடியும். இன்று காலையில், நான் உங்களுடைய கிறிஸ்தவ வியாபார் புருஷர்களைச் சந்தித்த போது, ஒரு தருணத்தைக் கொண்டிருந்தேன், இங்கே முழு சுவிசேஷ கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் ஐக்கியத்தில், நாங்கள் கர்த்தரில் ஒரு அருமையான நேரத்தைக் கொண்டிருந்தோம். நான் என்னுடைய நல்ல சகோதரனாகிய சகோ. ஆர்கன்பிரைட் அவர்களைச் சந்தித்தேன்; அவர் ஒருவேளை இன்றிரவு இங்கு எங்காவது இருக்கலாம். மேலும் சகோதரன் கார்ட்னரும் இன்னும் நம்முடைய நண்பர்களில் சிலரும் (ஒருவேளை இங்கிருக்கலாம்.) சகோதரன் லீ பிராக்ஸ்டன் பிராக்ஸ்டன், சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் அவர்களுடைய கூட்டாளியான அவருடைய பெயர் அது தான் என்று நம்புகிறேன். இந்த அற்புதமான ஜனங்களைச் சந்தித்ததின் மூலமாக, இந்த நாள் முழுவதும் நாங்கள் அருமையான ஐக்கியத்தின் நேரத்தை நிச்சயமாகவே கொண்டிருந்தோம். ஏதோவொரு நாளில், தேவனுடைய மகத்தான குறிக்கப்பட்ட நேரத்தில், நாம் அவருடைய இராஜ்ஜியத்தில் சந்திப்போம் என்று நம்புகிறேன், அங்கே நாம் மீண்டும் ஒரு போதும் பிரியவேண்டியது இல்லை. 3. மேலும் இப்பொழுது, இங்கே கைக்குட்டைகள் இருப்பதை நான் காண்கிறேன். இதை விசுவாசிப்பதற்கு உங்களுக்கு விசுவாசம் உண்டு என்பதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த அபிஷேகமானது.. இப்பொழுது, அநேக ஜனங்கள், கைக்குட்டைகளை அபிஷேகிக்கின்றனர் (anoint), அவர்கள் என்னிடம், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் என்னுடைய கைக்குட்டையை அபிஷேகிப்பீரா?" என்று கூறுகிறார்கள். இப்பொழுது, அதெல்லாம் சரிதான், அது அருமையானது. கர்த்தர் செய்கிறதும் ஆசீர்வதிக்கிறதுமான எதுவாக இருந்தாலும், நான் உண்மையிலேயே அதற்காக இருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்குச் சாட்சி கொடுப்பீர்களானால், நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளின் புஸ்தகத்தின் 19-வது அதிகாரத்திலிருந்து அந்த வேதபாகத்தை எடுக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது, பவுல் ஒருபோதும் கைக்குட்டைகளை அபிஷேகிக்கவில்லை; அவர்கள் உறுமால்களையும் (handkerchiefs) கச்சைகளையும் பவுலினுடைய சரீரத்திலிருந்து எடுத்தனர். இப்பொழுது, எத்தனை பேர் (அதைக் குறித்து) நினைக்க விரும்புகிறீர்கள்... அல்லது, வேதபிரகாரமாக, பவுல் இதை எங்கிருந்து பெற்றான் என்று நான் நினைக்கிறதை வெளிப்படையாகக் கூற வேண்டுமென்று விரும்புவீர்கள்? அதை விரும்புவீர்களா? சரி, அவன் அதை எங்கிருந்து பெற்றான் என்று நான் எண்ணுகிறேன் என்பதை நான் உங்களுக்குக் கூறப்போகிறேன். 4. வேதாகமத்தில், எலியா சூனேமிய ஸ்திரீயிடம் அவள் ஒரு குமாரனைப் பெறப் போகிறாள் என்று கூறின போது, அவள் அவ்விதமே குமாரனைப் பெற்றாள். அவளுடைய மகனுக்கு ஏறக்குறைய 12 வயதாக இருக்கும் போது, ஒரு நாளில், அவன் வெளியில், அறுவடை செய்யப்படுகிற வயலில், தன்னுடைய தகப்பனோடு நாள் முழுவதும் இருந்தான், அவனுக்கு அநேகமாக சூரிய வெப்பத் தாக்குதல் உண்டாகியிருக்க வேண்டும், அவன், "என் தலை நோகிறது" என்று உரக்கக் கத்தத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அவனை வீட்டிற்கு எடுத்துச் எடுத்துச் சென்று, அவனுடைய தாயாரின் மடியில் கிடத்தினான், மத்தியானம் மட்டும் இருந்து அவன் மரித்துப் போனான். அவள் இந்த தீர்க்கதரிசியை மகிழ்விப்பதற்காக தன்னுடைய வீட்டின் பக்கத்தில் ஒரு சிறிய இடத்தைக் கட்டியிருந்தாள். ஆகவே, அவள் அவனை எடுத்து, தீர்க்கதரிசியின் படுக்கையில் அவனைக் கிடத்தினாள். கழுதையின் மேல் சேணம் வைக்கும்படியாக ஒரு வேலைக்காரனை அவள் கொண்டிருந்து, அவள் நேராக கர்மேல் பர்வதத்திற்குப் போனாள். அந்த ஸ்திரீ நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கும், ஒரு நெருக்கடியான நிலையில் இருந்த ஒரு ஸ்திரீ, ஆனால் அவளுடைய விசுவாசமானது தேவனிடத்தில் அசையாததாக இருந்தது. அவளால் இந்த தேவனுடைய மனுஷனிடத்தில் போகக் கூடுமானால், அவளுடைய பிரச்சனை என்னவென்பதை அவள் கண்டுபிடித்து விடுவாள் என்பதை அறிந்திருந்தாள். ஆகவே, அவள் அங்கு சென்றாள், அவள் எலியாவைக் கண்ட போது.. எலியா அவள் வருவதைக் கண்டபோது.. இப்பொழுது, தேவன் எப்போதுமே தாம் செய்யப் போகிற எல்லாவற்றையும் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் கூறுவதில்லை. அவர் தாம் செய்ய விரும்புவதின் பாகத்தைத்தான் அவர்களுக்குக் கூறுகிறார். ஆகவே, இந்தக் காரியத்தைக் குறித்து எலியா ஒருபோதும் தேவனிடமிருந்து கேள்விப் பட்டிருக்கவில்லை. ஆகவே, அவன், "இங்கே சூனேமியாள் வருகிறாள், அவளுக்குப் பிரச்சனை உள்ளது, தேவன் அதை என்னிடமிருந்து இரகசியமாக வைத்திருக்கிறார்" என்றான். "போய் அவளிடம் கேள்" என்றான். 5. அவனுடைய வேலைக்காரனாகிய கேயாசி விஷயத்தைக் கேட்டறிந்து கொள்வதற்காக ஓடிச் சென்றான். அவன், "நீ சுகமாயிருக்கிறாயா? உன்னுடைய புருஷன் சுகமாயிருக் கிறானா? உன்னுடைய பிள்ளை சுகமாயிருக்கிறதா?" என்று கேட்டான். இப்பொழுது, கவனியுங்கள். அந்த பிள்ளை ஒரு சவமாகக் கிடக்க, அவளுடைய புருஷன் பதறலோடு இருக்க, கழுத்து முறியும்படியான வேகத்தில் சவாரி செய்து வர, அவள், "எல்லாரும் சுகம் தான்" என்றாள். அது எனக்குப் பிடிக்கும். அவள் கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு முன்னே இருந்தாள். மரியாள் அந்த ஸ்தீரி செய்தது போல இயேசுவை சந்திப்பதற்கான கருத்தை அவள் இங்கு தான் பெற்றுக் கொண்டாள் என்று நினைக்கிறேன். "கர்த்தாவே, நீர் இங்கே இருந்தீரானால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான், இப்பொழுதும், நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ, அதை தேவன் செய்வார்' செய்வார்" என்றாள், பாருங்கள். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்குள் இருந்தாரானால், அவர் நிச்சயமாகவே தம்முடைய குமாரனுக்குள்ளும் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆகவே, அவள் சரியான முறையில் பயபக்தியோடு அணுகினாள், அவள் எதைக் கேட்டாளோ அதைப் பெற்றுக் கொண்டாள். அதன் காரணமாகத்தான் இன்று நாம் எதைக் கேட்கிறோமோ அதைப் பெற்றுக் கொள்வதில்லை: நாம் தவறான முறையில் அணுகுகிறோம். நாம் ஒரு... அணுக வேண்டும். "தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைக் விடாமுயற்சியுடன் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்." 6. இப்பொழுது, எலியா, பிறகு அந்த ஸ்திரீ ஓடி... நல்லது, எல்லாரும் சுகமாயிருந்தால், அவளுக்கு என்ன பிரச்சனை உள்ளது, அவள் எதைக் குறித்து நிலைகுலைந்து போயிருக்கிறாள்? அவள் ஓடிச் சென்று, அவனுடைய காலில் விழுந்து, என்ன சம்பவித்தது என்பதை அவனிடம் கூறத்தொடங்கினாள். இப்பொழுது அவன் என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். அவன் தன்னுடைய வேலைக் காரனாகிய கேயாசியிடம், "நீ உன் இடையைக் கட்டிக் கொண்டு, நான் பிடித்திருக்கிற தடியை-இந்தத் தடியை எடுத்துக் கொண்டு, அவளுக்கு முன்னே ஓடிப்போ, யாராவது உன்னிடம் பேசினால், மறுமொழி சொல்லாதே, நீ உள்ளே சென்று அந்தத் தடியை பிள்ளையின் மேல் வை' என்றான். இதைப் பெற்றுக் கொண்டீர்களா? அவன் கையாண்டிருந்த விதம் என்ன. பாருங்கள், அவன் தொட்டது எதுவோ அது ஆசீர்வதிக்கப் பட்டிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். இந்த ஸ்திரீ மாத்திரம் அதே காரியத்தை விசுவாசிக்கக் கூடுமானால்! பவுல் அங்கே தான் அதைப் பெற்றுக் கொண்டான் என்று நினைக்கிறேன், அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களை எடுத்து, ஜனங்களிடம் அனுப்பினான். இப்பொழுது, பரிசுத்த பவுல் போய் விட்டான் என்பதை நாம் அறிவோம்; அவன் இன்றிரவு இயேசுவோடு இருக்கிறான். பவுல் போய் விட்டான், நாம் பரிசுத்த பவுல் அல்ல, ஆனால் அவர் இன்னும் இயேசுவாக இருக்கிறார், அவர் அவர்களுடைய விசுவாசத்திற்குக் கடமைப்பட்டிருந்தது போல உங்களுடைய விசுவாசத்திற்கும் கடமைப்பட்டிருக்கிறார். ஆகவே, நாம் தொடர்ந்து போவதற்கு முன்பு, இப்பொழுது இந்த உறுமால்களுக்காக ஜெபிப்போம். 7. என்னே, நீங்கள் மாத்திரம் இந்த இருதயத்தை உடைக்கிற காரியங்களைக் காண்பீர்களானால். ஒரு சில இரவுகளுக்கு முன்பு, அது ஸ்பின்டேலில் இருந்தது என்று நான் நம்புகிறேன், ஒரு சிறு பிள்ளை தன்னுடைய சிறிய தானியங்கி மோட்டார் வாகன பொம்மையை வைத்திருந்தான்... ஒரு சிறுமி, அவள் அநேகமாக இங்கிருக்கலாம், அவள் தன்னுடைய சிறு கைக்கடிகாரத்தை வைத்திருந்தாள், அது சிறியதாகவும், கடையிலுள்ள ஒரு சிறிய பத்து-சென்ட் போன்றும் காணப்படுகிறது... அவளுக்கு தேவையுள்ளது. அது உண்மையாகவே உங்களை சற்று வேடிக்கையாக கைக்கடிகாரத்தைப் சிறு உணரும்படி செய்யாதா? நாம் ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, தேவனே, நீர் புரிந்து கொள்ளுகிறீர் என்பதை நான் அறிவேன். இன்றிரவு, நீர் இந்த உறுமால்களையும், இந்த சிறு கைக்கடிகாரத்தையும், ஆபரணங்களையும், கீழே நோக்கிப் பார்க்கும் போது, அங்கே ஒரு ஜீவனுள்ள விசுவாசம் சிறு பிள்ளைகளிலும் கூட இருப்பதை அது காட்டுகிறது. நாங்கள் இதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். சில ஏழ்மையான வயதான குருடாயிருக்கிற தகப்பனார், ஒரு உறுமால் திரும்பி வருவதற்காக இங்கு எங்கோவுள்ள பண்ணையில் உடகார்ந்து காத்துக் கொண்டிருக்கலாம். ஒரு சிறு வியாதிப்பட்ட பிள்ளை இந்த உறுமால்களில் ஒன்றிற்காக காத்துக் கொண்டு ஒரு மருத்துவமனையில் இருக்கலாம், பதறலுடன் கூடிய ஒரு தாயார் தரையில் நடந்து கொண்டிருக்கலாம், ஆனால், தேவனே. நீர் சகலத்தையும் அறிந்திருக்கிறீர். மேலும் பிதாவே, அன்பே, இது என்னுடைய சொந்த பிள்ளைகளில் ஒன்றாகவோ, என்னுடைய தகப்பனாராகவோ அல்லது தாயாராகவோ இருந்திருந்தால், நான் எவ்வாறு ஜெபிக்க வேண்டுமென்று நான் அறிந்த எல்லாவற்றோடும் என்னுடைய முழு இருதயத்தோடும் உத்தமமாக ஜெபித்திருப்பேன், நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்த வேண்டும் என்று கேட்கிறேன். 8. மேலும் இப்பொழுது, தேவனுடைய வார்த்தையின்படியுள்ள இந்த விசுவாசத்தின் அடையாளத்தை (token) சாத்தான் காணும் போது, அவன் ஒவ்வொரு தடவையும் தேவனுடைய ஜனங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்க விரும்பலாம். வேதவாக்கியத்தில் ஒரு சமயம் நாங்கள் கூறினோம், தேவன் இஸ்ரவேல் தேவன் இஸ்ரவேல் புத்திரருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் கொடுத்தார், அவர்கள் தங்களுடைய பாதையில் சென்று சென்று கொண்டிருந்தனர். செங்கடல் அவர்களுடைய பாதையில் குறுக்கிட்டது, ஆனால் தேவனுடைய பாதையானது அதனூடாக வழிநடத்தினது. அவர் அக்கினிஸ்தம்பம் வழியாக கோபமான கண்களோடு கீழே நோக்கிப் பார்த்தார் என்று எழுத்தாளர் ஒருவன் கூறினான், ஏனெனில் அவருடைய பிள்ளைகளின் வழியில் ஒரு தடை இருந்தது. சமுத்திரம் தேவனுடைய கோபமான கண்களைக் கண்ட போது, அது பயந்து போனது; அது பயந்துபோய், பின்னிட்டுத் திரும்பி, சமுத்திரத்தின் அடியினூடாக ஒரு பாதையைத் திறந்தது, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு எந்த கெடுதியும் இன்றி கடந்து சென்றனர். 9. தேவனே! இந்த உறுமால்கள் குறிக்கப்பட்ட சென்று சேருமிடங்களை சேர்ந்து தங்கியிருக்கும் போது, நீர் கீழே நோக்கிப் பார்ப்பீராக, அக்கினிஸ்தம்பத்தினூடாக அல்ல, ஆனால் இயேசுவின் இரத்தத்தினூடாக நோக்கிப்பாரும் ஒவ்வொரு வியாதியும், ஜனங்களுடைய இந்த விசுவாசத்தின் அடையாளத்தை அடையாளத்தை சாத்தான் பார்க்கும் போது, அவன் பயமடைந்து பின்னிட்டுத் திரும்புவானாக, அவர்கள் அந்த வாக்குத்தத்தத்திற்குக் கடந்து செல்வார்களாக, சகலத்திற்கும் மேலாக எங்களுக்குக் கற்பிக்கப் பட்டிருக்கும் நல்ஆரோக்கியத் திற்கான வாக்குத்தத்தத்திற்கு கடந்து போவார்களாக, நாங்கள் செழித்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இதை அருளும், கர்த்தாவே, நான் இதை இந்த நோக்கத்திற்காக அனுப்புகிறேன், வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதில் விசுவாசம் கொண்டுள்ள ஜனங்களுடைய நம்பிக்கைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக அவர்களுடைய வாஞ்சையைப் பெற்றுக் கொள்வார்களாக. ஆமென். இப்பொழுது, உடனடியாக ஆராதனை முடிந்த பிறகு நீங்கள் அனுப்பலாம்... மேலே வந்து அவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், அல்லது எப்படியாவது அவர்கள் அவைகளை வெளியே கொடுக்கட்டும். 10. இப்பொழுது, உங்களுக்கு ஒன்று தேவையானால், நாம் ஜெபித்து... அதில் ஆயிரக்கணக்கானவற்றை மாதந்தோறும் உலக முழுவதும் அனுப்புகிறோம். உங்களுக்கு ஒன்று தேவையானால், ஜெபர்ஸன்வில்லில் எனக்கு எழுதுங்கள், நாங்கள் அதை உங்களுக்கு அனுப்பி வைப்போம். நன்கொடை வேண்டாம். இப்பொழுது, நான் சொன்னபடி, எனக்கு எனக்கு எந்த எந்த வானொலி நிகழ்ச்சியும் கிடையாது, எதுவுமே கிடையாது, உங்களுடைய முகவரியைப் பெற்றுக் கொள்ள எதுவுமே கிடையாது, ஜனங்களுடைய கடிதங்களுக்கு பதிலை திரும்ப உங்களிடத்திற்கு அனுப்புவதற்கு கூட எனக்கு கடினமான ஒரு நேரம் உண்டாயிருந்தது. ஆனால் நீங்கள் எவ்வளவாக வரவேற்கப்பட கூடுமோ அவ்வளவாக வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் ஒருபோதும் கடிதத்தினால் தொல்லைப்படுத்த மாட்டீர்கள். செலவுகளை ஏற்றுக் கொள்பவர்களோ (sponsor) அல்லது எதுவுமோ எங்களுக்குக் கிடையாது. நாங்கள் விரும்புவது எல்லாம் உங்களுடைய ஜெபங்களைத் தான், அது முற்றிலும் இலவசம். அதற்காக எழுதியனுப்புங்கள். நீங்கள் அதிகமாக வரவேற்கப்படுவீர்கள்... உங்களுக்கு அது தேவையில்லையெனில், எழுதியனுப்பி அதைப் பெற்றுக் கொண்டு, புத்தகத்திற்குள் அதை வைத்துக் கொள்ளுங்கள். 11. நான் சமீபத்தில் இங்கே ஒரு சிறு பிள்ளையைக் கொண்டிருந்தேன்.. இப்போழுது, இதை நான் கூற முடியாது, நான் அங்கே இல்லை, எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு சிறு பையன் தெருவில் ஓடினதாக அவர்கள் கூறினார்கள். ஒரு தாயார் உள்ளே சென்றார்கள், நான் ஜெபித்திருந்த ஒரு கைக்குட்டை அவளிடம் இருந்தது... நான் அதன் பேரில் ஜெபித்த காரணத்தால் அல்ல, காரணம் என்னவெனில்... அவளுடைய விசுவாசமானது தேவனிடத்தில் இருந்தது. அந்த சிறு பையன் புல் தரையில் விழுந்து கிடந்தான், ஆம்புலன்ஸ் வாகனம் அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது, ஓ, அவன்-அவன் ஒரு பயங்கரமான நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு பின்னால் அவர்களுக்குக் காவலர்கள் இருந்தனர். பதறலோடிருந்த அத்தாயார் தொடர்ந்து அலறிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் வேகமாக வீட்டினுள் ஓடி, அப்போஸ்தலர் புத்தகம் 19ம் அதிகாரத்தில் வைக்கப்பட்டிருந்த கைக்குட்டையை எடுத்து, அதை வெளியே கொண்டு வந்து, பிள்ளையின் மேல் அதை வைத்தாள், அவளுடைய பிள்ளையை கையில் எடுத்து, ஆம்புலன்ஸ் அங்கு வருவதற்கு முன்பாக அவனோடு விட்டிற்குள் திரும்பி நடந்து சென்றாள். இப்பொழுது, அது... இப்பொழுது, அது ஒரு விசுவாசமாக இருந்தது, என்னுடைய ஜெபம் அல்ல, நிச்சயமாக இல்லை. ஆனால் நானல்ல... என்னிடம் ஏதாவது ஒன்று இருந்தது. அதைச் செய்தது தேவனிடத்தில் இருந்த அந்த சிறு தாயாருடைய விசுவாசமாக இருந்தது. அதுதான் அதைச் செய்கிறது. எப்போதுமே. 12. சிலசமயங்களில் சாதாரண நபர்களையும் அவர்களுடைய ஜெபங்களையும் தவறாக மதிப்பட்டு விடுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, நான் இங்கிருந்து போகும் போது, சுகமளித்தலில் உள்ள விசுவாசத்தை விட்டு விட வேண்டாம்; அதை இன்னும் அதிகமாக விசுவாசித்தவர்களாய் தொடர்ந்து செல்லுங்கள். நானோ அல்லது சகோதரன் ராபர்ட்ஸோ அல்லது வேறு யாரோ ஒருவரோ வருவது மட்டுமாக அதுவரையிலும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இல்லை, ஐயா! நீங்கள் சற்று உங்கள் மேய்ப்பரை அழையுங்கள், உங்களுடைய மேய்ப்பர் அருகில் இல்லையென்றால், உங்களுடைய அண்டை வீட்டாரையோ, ஒரு நல்ல கிறிஸ்தவ நபரையோ, அல்லது யாரையாவது அழையுங்கள். ஒருவர் மற்றவருக்காக ஜெபியுங்கள். அதைத்தான் வேதாகமம் கூறுகிறது, "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்." நான் இப்பொழுது தான் ஒரு சிறு சம்பவத்தை நினைவுகூர்ந்தேன், இந்த சாட்சிகளை நான் கூறுவதற்காக நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால், ஆனால் அது என்னுடைய மனதில் வருகிறது, நான் அதைக் கூற வேண்டும் என்பது போல தோன்றுகிறது. நான் மெரிடியன், மிசிசிப்பியில் இருந்தேன், ஒரு நாள் இரவு ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று ஊகிக்கிறேன் அங்கு ஏதோவொன்று சம்பவித்தது, வேடிக்கையான உணர்வைக் கொண்டுள்ள தேவன் எப்படிப் பட்டவர் என்றும், ஜனங்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு தம்மைத் தாமே எளிமையாக ஆக்கிக் கொள்ளுகிறார் என்றும் அது எப்போதுமே என்னை நினைவுபடுத்தினது 13. ஒரு சிறு குழந்தையை வைத்துக் கொண்டு சுற்றிலும் நடந்து கொண்டிருந்த ஒரு தாய் அங்கே இருந்தாள்; அங்கே வேறொரு தாயாரும் உட்கார்ந்திருந்தாள். அவள் நெய்யப்பட்ட பருத்தி துணி அல்லது காலிகோ பருத்தி துணி அல்லது நீங்கள் அதை என்னவாக அழைக்கிறீர்களோ அதை அணிந்து கொண்டிருந்த தெற்கத்திய தாயார் மாதிரி இருந்தாள். அவள் வெறுமனே ஒரு இல்லத்தரசியாக இருந்தாள், ஆனால் கர்த்தர் அந்த ஸ்திரீயிடம், "போய் அந்தக் குழந்தைக்காக ஜெபம் செய்யுங்கள்" என்று கூறினார். ஏன், அவள் பார்த்த போது, அந்த ஸ்திரீயிடம் ஒரு ஜெப அட்டை இருந்தது. அவள், "ஓ, நான் நான் அந்த குழந்தைக்காக ஜெபிக்க பயப்படுகிறேன், இன்றிரவு சகோதரன் பிரன்ஹாம் அந்தக் குழந்தைக்காக ஜெபிக்கப் போகிறார். அந்த ஸ்திரீ ஜெப அட்டையைப் பெற்றிருக்கிறாள். ஏன், நான் அதைச் செய்ய மாட்டேன்" என்றாள். மேலும் அவன் திரும்பினான்... அவள் சுற்றும் முற்றும் திரும்பினாள், கர்த்தர் அவளிடம் சொன்னார், "போய் அந்த குழந்தைக்காக ஜெபி" என்று அப்படியே அவளுடைய இருதயத்தில் வெளிப்படுத்தினார். 14. நல்லது, அது அப்படியே தொடர்ந்து அவளுடைய மனதில் மிகவுமாக வந்து கொண்டிருந்தது. அவள், "நல்லது, அந்த ஸ்திரீ இங்கே இதன் வழியாக மீண்டும் திரும்பி வருவாளானால், நான் அவளைத் தடுக்கப் போகிறேன்" என்றாள். ஆகவே அவள் "சீமாட்டியே, நீ என்னுடைய இருக்கையை எடுத்துக் கொள்கிறாயா? இங்கே உட்காருகிறாயா? நீ அந்த குழந்தையோடு சற்று களைப்படைந்துள்ளாய் என்று நான் அறிகிறேன், அவர் இன்னும் இரண்டு மணி நேரம் இங்கிருக்க மாட்டார்" என்றாள். "நன்றி, சகோதரியே, நான் பாராட்டுகி... உன்னுடைய இருக்கையை எடுத்துக் கொள்ள நான் வெறுக்கிறேன்" என்றாள். நாங்கள் அந்த உரையாடலைக் கேள்விப்பட்டபிரகாரமாக, "நான் அப்படியே அந்த குழந்தைக்காக ஒரு சிறு வார்த்தை ஜெபத்தை செய்தால், அதைக் குறித்து எரிச்சல் படுவாயா? நீ ஒரு ஜெப அட்டையைப் பெற்றிருக்கிறாய் என்பதை நான் காண்கிறேன். அநேகமாக சகோதரன் பிரன்ஹாம் இன்றிரவு அந்த குழந்தைக்காக ஜெபிப்பார். ஆனால், என்னுடைய உணர்ச்சியிலிருந்து விடுபடும் பொருட்டு, நான் ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்தால், நீ எரிச்சல் படுவாயா?" என்று கேட்டாள். அவளோ, "ஏன், அன்பான சகோதரியே, நிச்சயமாக இல்லை" என்றாள். மேலும் அவள் அந்தச் சிறு குழந்தையை கொடுத்தாள், அந்த சிறு தாயார் தன்னுடைய கரத்தை அந்த குழந்தையின் மேல் வைத்து ஒரு எளிய சிறு ஜெபத்தைச் செய்தாள். 15. அதன் பிறகு அந்த சிறு பெண்மணிக்கு உட்கார இடம் இல்லாதிருந்தது, ஆகவே அவள் அந்த உடற்பயிற்சி கூடத்தில் மேலே பால்கனிக்கு ஏறிச் சென்றாள். ஆகவே அவள் மேலே வந்தாள், ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கழித்து, நான் உள்ளே வந்த போது, ஜெப அட்டைகளை அழைத்தேன், அந்த சிறு பெண்மணியும் அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தாள். ஆகவே, மேலே பால்கனியில் இருந்த அந்த சிறு பெண்மணி, "ஓ, என்னே! ஒருவேளை நான் அதை செய்யாமல் இருந்திருக்க வேண்டும், ஆனால் நான் அதைச் செய்த பிறகு நலமாக உணருகிறேன்" என்று சொன்னாள். அந்த சிறு பெண்மணி அக்குழந்தையோடு மேலே வரிசையில் வந்த போது, பரிசுத்த ஆவியானவர் வந்து, அந்த ஸ்திரீயிடம் பேசத் தொடங்கினார், அவள் யாரென்றும், அவளுடைய குழந்தைக்கு என்ன காரியம் என்றும், அவளிடம் சொன்னார், ஆனால், "உன்னுடைய குழந்தை ஏற்கனவே சுகமாகி விட்டது என்று உனக்குத் தெரியுமா? ஏனெனில் காலிகோ பருத்தி துணியை அணிந்துள்ள ஒரு சீமாட்டி அவளுக்காக ஜெபித்திருக்கிறாள். அவள் அங்கே மேலே பால்கனியில் வலது பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறாள். தேவன் ஏற்கனவே அவளுடைய ஜெபத்தை கேட்டிருக்கிறார், இக்குழந்தை ஏற்கனவே சுகமாகி விட்டது. நீ அதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, அதெல்லாம் சரிதான்" என்றார். இப்பொழுது, தேவன் அந்த சிறு தாயாரிடம் செய்ய வேண்டுமென்று கூறினதை அவள் செய்யாமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும், பாருங்கள்? அது சுவிசேஷகருடைய இடமாக இருக்கவில்லை. தேவன் எல்லா பாமர மக்களிடத்திலும் கிரியை செய்கிறார். நமக்கு செய்ய வேண்டிய குறிப்பிட்ட வேலைகள் உண்டு, ஆனால் நீங்கள் ஒருவர் மற்றவருக்காக ஜெபிக்க வேண்டும், தேவன் உங்களைப் பொறுப்பெடுத்துக் கொள்வார். 16. இப்பொழுது, சற்று... நான் மிகவும் வேகமாக துரிதப்பட முயற்சி செய்யப் போகிறேன், ஆகவே மிகவும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கிற இந்த அன்பான ஜனங்களை பிடித்து வைத்திருக்க வேண்டியிருக்காது. இப்பொழுது, நாளை பிற்பகலை ஞாபகம் கொள்ளுங்கள், நாம் பிற்பகலில் அதைக் கொண்டிருக்கிறோம்... சகோதரன் ஜெஃப்ரிஸ், நான் அதைப் பாராட்டுகிறேன், ஏனெனில் அது ஊழியக்காரர்களோடுள்ள ஐக்கியத்தைக் காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய கடமையின் இடத்திற்குப் போக வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாளை உங்களுடைய சபைக்கு போங்கள், நீங்கள் பட்டணத்திற்கு ஒரு அந்நியராக இருந்தால், ஏதாவது ஒரு நல்ல சபையைக் கண்டுபிடித்து, காலையில் ஞாயிறு பள்ளிக்குப் போங்கள். அதன்பிறகு, பிற்பகலில் அதைக் கொண்டிருக்கிறோம், ஆகவே, மேய்ப்பரே, பிற்பகலில் உங்களுடைய சபை ஆராதனையை ரத்து செய்து, வருகிற அவர்களைக் கொண்டிருங்கள். நிச்சயமாகவே, உங்களுக்கு பிற்பகல் ஆராதனைகள் இருக்காது. அதன்பிறகு, இரவில், நல்லது, அப்போது, அவர்கள் தங்களுடைய சொந்த சபைக்குத் திரும்பிப் போக முடியும். சகோதரத்துவம் இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம், நாங்கள் அடுத்த முறை வரும்போது, காரணம் என்னவெனில், நாங்கள் எல்லா ஊழியக்காரக் கூடுகையையும் மற்றவைகளையும் கொண்டிருக்கவில்லை. இங்கே இம்மாகாணத்திலுள்ள அருமையான ஜனங்களாகிய உங்களோடு அறிமுகமாகும்படியாக, நாங்கள் அப்படியே நம்முடைய அன்பு சகோதரனோடு இங்கேயிருக்கிறோம். நாங்கள் அப்படியே அந்த சகோதரர்களோடு அதன் வழியாகக் கடந்து செல்கிறோம், நாங்கள் அவர்களோடு தொடர்பு கொண்டு சரியாக இந்த சிறு அரங்கங்களில் உள்ளே வருகிறோம், அப்படிடிய அந்த நோக்கத்திற்காகத் தான் வருகிறோம். 17. கர்த்தருக்குச் சித்தமானால், நாங்கள் திரும்பி வந்து, ஏறக்குறைய ஒரு வருட காலத்திற்கு முன்பே ஏற்பாடுகளைச் செய்ய விரும்புகிறோம், கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு பெரிய கூடாரத்தின் கீழே நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு ஒரு நல்ல எழுப்புதலுக்காக ஒவ்வொன்றையும் ஒழுங்குபடுத்துவோம். அன்பு சகோதரர்களாகிய நீங்கள் ஒவ்வாருவரும் எங்களுக்குத் தேவை. நீங்கள் எந்த அடையாளத்தைத் (brand) (brand) தரித்திருந்தாலும் அது காரியமில்லை, மெதொடிஸ்டு, பாப்டிஸ்ட், என்னவாயிருந்தாலும் அது காரியமில்லை கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை வெல்லும்படி நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இப்பொழுது, சென்ற மாலையில், நான் சிறிது பேசிக் கொண்டிருந்து, நான் ஒருபோதும் என்னுடைய பாடத்தை முடிக்கவில்லை. நான் ஆபிரகாமைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன், மேலும் அது ஒருவிதமாக... (ஒலிநாடாவில் காலியிடம் ஆசிரியர்) நான் பழைய ஏற்பாட்டை நேசிக்கிறேன். ஆகவே தேவனுக்குச் சித்தமானால், நான் அதே வேதவாக்கியத்தை வாசித்து, அதற்குள் செல்ல முயற்சிக்கப் போகிறேன். அது யாத்திராகமத்தில் உள்ளது... அல்லது என்னை மன்னியுங்கள், ஆதியாகமம் 22:14. நான் அந்த வேதவாக்கியத்தை மீண்டும் வாசிக்க விரும்புகிறேன். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையோடு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 18. இப்பொழுது, நாம் நம்முடைய பாடத்தின் கிளைமாக்ஸிற்கு வரும் போது, என்னோடு ஜெபியுங்கள். சென்ற மாலையில், அந்த வேதபாகமானது எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தது என்பதன் பேரிலான ஒரு சூழலுக்காக நாம் திரும்பிப் போய்க் கொண்டிருந்தோம், இந்த ஆபிரகாம் தன்னுடைய மகனை பலி செலுத்துவதற்காக தன்னுடைய மகனோடு இங்கே மலையின் மேல் இருந்தான். ஆபிரகாமோடுள்ள அவ்விதமான பாகத்தில் நாம் அடைந்தோம், பரிசுத்த ஆவியானவர் ஒருவிதமாக அந்த வார்த்தையில் வந்தார். நான் என்னையே மறந்து, ஜெபவரிசைக்கான நேரத்தைக் கடந்து விட்டதை கண்டு கொள்ள நேர்ந்தது. இப்பொழுது, கவனியுங்கள், சென்ற இரவில், தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கையை உறுதிப்படுத்தியிருந்த அந்த இடத்தில் ஆபிரகாமை விட்டு வந்தோம். அவன்... (ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாத படியினாலே) அவர் தமதுபேரிலே தானே அவனுக்கு ஆணையிட்டார், அவர் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் தம்முடைய வாக்குத்தத்தைக் காத்துக்கொள்வார், மேலும் வாக்குத்தத்தமானது நிபந்தனையற்றதாகக் கொடுக்கப்பட்டது. நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தோம் என்றால், ஜனங்களுடைய இருதயங்களிலும் மனதிலும் இருக்கிற பயத்தை வெளியே கொண்டு வந்து கொண்டிருந்தோம். அதுதான் இன்று சபையிலுள்ள மிகப்பெரிய சாபங்களில் சாபங்களில் ஒன்றாகும், அது என்னவென்றால், ஜனங்கள் தேவனுடைய வார்த்தையையும் வாக்குத்தத்தத்தையும் பற்றிக்கொள்ள பயப்படுகின்றனர். தேவன் எப்பொழுதாவது தம்முடைய வார்த்தைகளில் ஒன்றை எவ்வாறு திரும்பப் பெற முடியும்? ஏன், நாம் சென்ற இரவில் கூறினபடி, அது எளிதாக இருக்கும், எல்லா நட்சத்திரங்களும் அப்படியே வானங்களை விட்டு மறைந்து போய் விடும் - சூரியனும், சந்திரனும், பூமியும் ஒழிந்து போகும் ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போக முடியாது. அது நித்தியமானது, அது என்றென்றுமாக சரியானதாகும். ஓ, என்னுடைய களைப்படைந்த ஆத்துமா அதனுடைய ஒவ்வொரு வார்த்தையின் மேலும் இளைப்பாறுவதை நான் எப்படியாக நேசிக்கிறேன். உங்களால் சற்று அங்கே தங்கியிருந்து, "அங்கே அது இருக்கிறது" என்று கூற முடியும் போது, அப்போது இருப்பதைப் போல் அது அப்படியே காணப்படுகிறது. அது சம்பவித்தாக வேண்டும், ஏனெனில் தேவன் அவ்வாறு கூறினார். தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருப்பாரானால், தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். 19. இரவு நேரத்தில், இந்த தரிசனங்கள் வருகிற போது, அதுதான் சரியாக தேவனிடத்தில் எனக்குள்ள சமாதானமாக உள்ளது. "தேவனே, நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர்." ஆகவே, நான் ஒருபோதும் ஒரு நிமிடமாவது பயப்படவோ அல்லது கவலைப்படவோ இல்லை, ஏனெனில் தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணினார் என்பதை நான் அறிவேன். மேலும் ஆப்பிரிக்காவில், மந்திரவாதிகளாலும், குறி சொல்லுபவர் களாலும் சவால் விடப்பட்டேன், மேலும் இந்தியாவிலும் எல்லா விதமான மனதை வசியப்படுத்துகிறவர்களாலும், போலி நடிப்புக்காரர்களாலும் மற்றும் ஒவ்வொன்றாலும் சவால் விடப்பட்டேன்... தேவன் சரியாக தம்முடைய வார்த்தையின் பக்கமாக நின்று, ஒவ்வொரு தடவையும் ஒரு மகத்தான ஜெயத்தில் அதைக் கொண்டு வந்ததைத் தவிர வேறொன்றையும் ஒரு போதும் ஒரு தடவையும் கண்டதில்லை. இப்பொழுது, அது... அதைப் போன்ற ஒரு சில தடவைகள், தேவன் அதற்குப் பதிலளிப்பதை நீங்கள் காண்பீர்களானால், அவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாரோ அதில் நீங்கள் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறீர்கள். அது தான் காரணம், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால், இன்றிரவு அவர் இங்கே நம்மோடு ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக தம்மைத் தாமே நிரூபித்துக் காண்பிக்கிறார், அப்படியானால் நாம் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் முதன்மையான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் அவருடைய வார்த்தை உண்மையாக உள்ளது. 20. மேலும் அதன் பிறகு, தேவன் அங்கே ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினார் என்பதை நாம் கண்டு கொள்கிறோம், ஆபிரகாமோடு மட்டுமல்ல, ஆனால் அவனுக்குப் பிறகு அவனுடைய சந்ததியோடும் தேவன் உடன்படிக்கை பண்ணினார். இன்று கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாயிருக்கிற, கிறிஸ்தவர்களாகிய நாம் பிரகாமின் சந்ததியாராயும் வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயும் இருக்கிறோம் என்பதை நாம் காண்கிறோம். மேலும் அந்த வாக்குத்தத்தமானது ஆபிரகாமோடு இருந்தது போல அவ்வளவு நிச்சயமாய் நம்மோடும் இருக்கிறது. இப்பொழுது, நாம் அவ்விதமாக ஆபிகாமின் பிகாமின் சந்ததியாராய் இருப்போமானால், நாம் ஆபிரகாமின் விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல அழைத்தான், ஏனெனில் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். அது அற்புதமாயில்லையா? அவன் மருத்துவரிடம் சென்றிருந்தால் என்னவாகியிருக்கும்? இருதயக் கோளாறு தான் முதல் முக்கியமான சாகடிப்பவனாக (number one killer) இருக்கிறான். மருத்துவர், "சீமாட்டியே, நான் உன்னிடம் சொல்வதற்கு வருந்துகிறேன், ஆனால் உன்னுடைய இருயதம் (செயலிழந்து) போய் விட்டதாக இருதயத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரைபடம் (cardiogram) கூறுகிறது, நீ முடிந்து விட்டாய்!" என்று சொல்லுவாரானால், என்னவாக இருக்கும். 21. அதைச் செய்வதற்குத் தான் எல்லா மனிதரும் அறிந்திருக்கிறார்கள். அவன் அதை நோக்கிப் பார்க்கிறான், அங்கே இருதயத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த ஒரு வரைபடம் (cardiogram) இருக்கிறது, அது அதை நிரூபிக்கிறது, அப்படியானால் நீங்கள் போய் விட்டீர்கள். அது மருத்துவ விஞ்ஞானத்தின் படியானதாகும், அவ்வளவு தான் செய்ய முடியும். ஆனால் இப்பொழுது, இன்னும், அங்கேயிருக்கும் வழக்கத்துக்கு மாறாகத் துடித்துக் கொண்டிருக்கிற இருதயத்தில் அப்படியே ஏதோவொன்று உள்ளது. நீங்கள் வார்த்தையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அல்லது கிறிஸ்து அருகில் இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கிற ஏதோவொன்று சம்பவிக்கிறது. மேலும் உங்களுடைய இருதயத்தில், நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்ற வாக்குத்தத்தத்தை தேவன் உங்களுக்குக் கொடுப்பதை நீங்கள் உணருகிறீர்கள். நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்று உங்களிடம் கூறும்படிக்கு மருத்துவர் எந்த நல்ல காரியத்தையும் செய்திருக்க மாட்டாரா? ஏனெனில் நீங்கள் சுகடையப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். சமீபத்தில், அதைப் போன்ற நோயாளியிடம் ஒரு வயதான மனிதனால் நான் அழைக்கப்பட்டேன். மேலும் அவனுடைய பையன்... ஓ, நான், "சமீபத்தில்" என்றேன், அது ஏறக்குறைய ஆறு, ஏழு மாதங்களுக்கு முன் சம்பவித்தது. அந்தப் பையன் துயர் நிறைந்த தொண்டை அழற்சி நோயின் (black diphtheria) காரணமாக மரித்துக் கொண்டிருந்தான். ஆகவே, நான் அந்த வாலிப பையனுக்காக ஜெபிக்கும்படிக்குப் போனான். அந்த வயதான தகப்பனார் சொன்னார் அவர் ஒரு அருமையான வயதான மனிதர் அவர், "சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய மகனுக்காக ஜெபிக்கும்படி நீர் வருவீரா?" என்று கேட்டார். நான், "நல்லது, ஐயா, சரி, நான் அங்கே போக முடியும் என்று ஊகிக்கிறேன்" என்றேன். ஆகவே, சரியாக அந்நேரத்தில் எந்த ஆராதனையும் இல்லாதிருந்தது. ஆகவே, நான் ஜெபிக்கும்படி போனேன். 22. மருத்துவர் கதவண்டை என்னை சந்தித்து, அவர், 'இப்பொழுது, ஒரு நிமிடம்" என்றார். அவர், "உங்களால் அங்கே உள்ளே போக முடியாது. அந்தப் பையனுக்கு தொண்டை அழற்சி நோயுள்ளது, எப்படியாயினும் அது எந்த நன்மையும் செய்யாது. இங்கே வெளியிலிருந்து உங்களுடைய ஜெபத்தைச் செய்யுங்கள், அது என்னவாயிருந்தாலும், ஏனெனில் உங்களால் போக முடியாது... என்றார். நான், "நான் அவன் மேல் என்னுடைய கரங்களை வைக்க விரும்புகிறேன்" என்றேன். அவர், "நல்லது, நீர் ஒரு தகப்பனார், உமக்கு பிள்ளைகள் உண்டு. நீர் அந்தத் தொண்டை அழற்சி நோயைப் பெற்றுக் கொள்வீர்; நீர் அங்கே உள்ளே போகக் கூடாது" என்றார். நான் சொன்னேன்... அவர் ஒரு கத்தோலிக்கராக இருந்தார் என்பதைப் புரிந்து கொண்டேன், நான், ஐயா, அந்தப் பையன் கத்தோலிக்கனாய் இருந்து, இங்கே பாதிரியார் இறுதிச் சடங்குகளை செய்யும்படியாக இருந்தால், நீர் அவரைப் போக அனுமதிப்பீரா?" என்றேன். அவரோ, "அது வித்தியாசமானது" என்றார். நான், "இல்லை, அதுவல்ல, இல்லை, அதுவல்ல" என்றேன். நான் சொன்னேன்... அவர், ஆனால் பாதிரியார் விவாகமாகாத மனிதர், அவருக்குப் பிள்ளைகள் கிடையாது" என்றார். 23. நான், "நான் அதைக் குறித்து பொறுப்பெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். நான் அதை என்னுடைய பிள்ளையிடம் கொண்டு செல்ல பயப்படுவேனானால், நான் ஏன் அவனுக்காக ஜெபிக்கப் போவேன்? உள்ளே போய் அவனுக்காக ஜெபித்தால், எனக்கு எந்த நன்மையையும் செய்யாதா? நீர் சற்று அனுமதிப்பீரானால்..." என்றேன். இறுதியாக, நாங்கள் அதைக் குறித்து அவரிடம் பேசினோம். ஒரு முக்காட்டையும், மற்ற ஒவ்வொன்றையும் நான் அணிந்து கொள்ளும்படி அவர் செய்தார், என்னுடைய முகத்தை நான் கழுவும்படி செய்தார், என்னுடைய முகத்தின் முகத்தின் மேல் எதையோ பொருத்தினார், மற்றும் எல்லாவற்றையும் செய்தார்...என்னே, அங்கே அதனூடாக என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியாதது போன்று எனக்குக் காணப்பட்டது. அந்த வயதான தகப்பனாரும் தாயாரும் படுக்கையின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள், செவிலி என்னை உள்ளே அழைத்துச் சென்றாள், நான் உள்ளே போகலாம் என்று மருத்துவர் தம்முடைய தலையை அசைத்தார். ஆகவே, உள்ளே சென்றேன், அந்த வயதான தகப்பனார் நோக்கிப் பார்த்தார், அவர், "மகனே, என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா?" என்று கேட்டார். 24. செவிலியோ, "ஏன், ஐயா, நேற்று முதல் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. அவன் மரித்துக் கொண்டிருக்கிறான்" என்றாள். நான், நல்லது, நாம் ஜெபிப்போம்" என்றேன். நான் முழங்கால்படியிட்டு அந்த சிறு பையனுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன்; தரிசனமோ அல்லது எதுவுமோ கிடைக்கவில்லை, வெறுமனே ஜெபித்தோம். மேலும் நான், "பரலோகப் பிதாவே, விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்று நீர் வாக்குப்பண்ணியுள்ளீர், நான் என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மிடம் உத்தமமாக ஜெபத்தை ஏறெடுத்துக் கொண்டிருக்கிறேன், என்னுடைய இருதயத்தில் இருக்கிற எளிமையோடு நான் செய்யும்படியாக அறிந்த எல்லாவற்றோடும் இந்த பையனுடைய ஜீவனுக்காக கேட்கிறேன். இதைப் போன்ற ஒரு வாலிப பையனை நீர் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? பிதாவே, நான் இதைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் நீர் அது சம்பந்தமாக எதையாவது என்னிடம் காண்பிக்க விரும்பினால், நான் அவனுடைய தகப்பனைக் கட்டாயமாகத் தேற்றுவேன். ஏன், இதோ பாரும், உம்முடைய ஊழியன் இங்கே நின்று கொண்டிருக்கிறேன், ஆனால் நீர் இந்தப் பையனுடைய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்; அவன் வளருவதற்கு அப்படிப்பட்ட ஒரு அருமையான வீட்டைப் பெற்றிருக்கிறாள், கிறிஸ்தவ தகப்பனாரும் தாயாரும் அவனுக்கு இருக்கிறார்கள், அவர்கள் வாக்குத்தத்தத்தை கெஞ்சிக் கேட்கிறார்கள்" என்றேன். எனக்குத் தரிசனம் கிடைக்கவில்லை, நான் எழுந்து, "நல்லது, "நல்லது, கர்த்தாவே, இதை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன்" என்றேன்." அந்த வயதான தகப்பனார் எழுந்து, தாயாரை நோக்கிப் பார்த்து, தாயாரே, இது அற்புதம் அல்லவா?" என்றார். முடிந்து விட்டது, முடிந்து விட்டது, உங்களுக்குத் தெரியும், அவருக்கு சிரத்தை உள்ள காலம் வரை. மேலும் அவர், ஓ, நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன், சகோதரன் பிரன்ஹாமே. கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நீர் விசுவாச ஜெபத்தை ஏறெடுத்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய பையன் இப்பொழுது சுகமடைந்து விட்டான்" என்றார். 25. அந்த சிறு செவிலி அவனை வினோதமாக நோக்கிப் பார்த்தாள், அவனோ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!" என்றான். அவனுடைய கன்னங்கள் வழியாக அப்படியே கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது, மேலும் அந்த வயதான தாயார்... அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கரங்களைப் போட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டே, "ஓ கர்த்தாவே, எங்களுடைய பையனை நீர் சுகமாக்கினதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்" என்றார்கள். வெளிப்படையாக அவருடைய இருதயம் அசைக்கப்பட்டது. ஆகவே அந்த சிறு தாதி, "ஐயா, நீர் எப்படி அந்தவிதமாக நடந்து கொள்ளலாம், உங்களுடைய பிள்ளை மரித்துக் கொண்டிருக்கிறானே?" என்றாள். அவர், "ஓ, மேடம், அவர் மரித்தவராயில்லை, அவர் ஜீவிக்கிறார்" என்றார். மேலும் அவர், ஏன், சீமாட்டியே, ஓ, நான்... உனக்குப் புரியவில்லை" என்றார். 26. அவள், "நல்லது, இதயத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த இந்த வரைபடத்தைப் பாரும், ஐயா..." என்றாள். எப்பொழுதாவது அது... எனக்குத் தெரியவில்லை, ஆனால், "அது எல்லாவிதத்திலும் தொய்வடைந்த நிலையில் இருக்கும் போது, இருதயம் மீண்டும் எப்பொழுதாவது பழைய நிலைக்குத் திரும்புவது என்பது மருத்துவ வரலாற்றிலேயே அறியப்பட்டிராததாகும். பையன் மரித்துக் கொண்டிருக்கிறான், இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவன் மரித்து விடுவான். அவன் அப்படியே பெரும்பாலும்....இப்பொழுது, அவன் நேற்றைய தினம் தினம் முதற்கொண்டு சுயநினைவற்றிருக்கிறான். நீங்கள் எப்படி இவ்விதம் நடந்து கொண்டு களிகூர்ந்தவர்களாக இருக்க முடிகிறது? நீங்கள் அதை மிகவும் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பது போன்று காணப்படுகிறதே" என்றாள். அவர், "கவனி, என் பிள்ளையே" என்றார். அந்த வயதான மனிதர் தம்முடைய கரத்தை அந்த சிறு தாதியைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, "நீ அந்த இயந்திரத் துண்டை நோக்கிப் பார்க்கிறாய், ஏனெனில் பார்க்கும்படியாக உனக்குத் தெரிந்தது அவ்வளவு தான், ஆனால் "நானோ ஒரு தெய்வீக வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்க்கிறேன்" என்றார். 27. அது சரியே! இப்பொழுது அந்த பையன் விவாகம் செய்து, அவனுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆகவே அது அப்படியே காண்பிக்கிறது... அது நீங்கள் எதை நோக்கிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஆகவே, நீங்கள் கவனியுங்கள், நீங்கள் கட்டாயம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்க்க வேண்டும், கவனியுங்கள். என்ன சம்பவித்தாலும் காரியமில்லை, தேவனுடைய வாக்குத்தத்தத்தையே நோக்கிப் பாருங்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதல்ல, ஆனால் தேவன் என்ன சொன்னார் என்பது தான். இப்பொழுது அது தான் ஆபிரகாமுடைய விசுவாசமாக இருக்கிறது. அவன் இங்கே இருந்த போது, அநேகமாக இப்பொழுது... அவனுக்கு 75 வயதும் 75 வயதும் சாராளுக்கு 65 வயதும் ஆகியிருந்தது. அவர்கள் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று அவர் கூறினார். ஆபிரகாம் விசுவாசத்தில் வல்லவனாயிருந்து, தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டிருந்தான், தேவனால் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்ள முடியும் என்று அவன் அறிந்திருந்தான். ஆமென்! அவர் எப்படியாக இருபத்தைந்து வருடங்களாக அவனுக்கு சிறு பிள்ளைபருவ பயிற்சியில் பழக்குவித்தார். தேவன் தம்மிடத்தில் வருகிற ஒவ்வொரு பிள்ளைகளையும் பயிற்றுவிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். "தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு புத்திரனும் தேவனால் சிட்சிக்கப்படுகிறான்" என்று வேதாகமம் கூறுகிறது. நம்மால் சிட்சையை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், நாம் தேவனுடைய பிள்ளைகள் அல்ல; நாம் முறைதவறிப் பிறந்த பிள்ளைகளாய் இருப்போம். தேவனுடைய ஒரு உண்மையான பிள்ளையானவன் சாட்டையைக் குறித்து சிட்சையைக் குறித்துப் பொருட்படுத்த மாட்டான், அவன் ஏமாற்றங்களைக் குறித்தும் பொருட்படுத்த மாட்டான்; அவன் சரியாக அதில் கடந்து செல்கிறான். தேவன் அவ்வாறு கூறினார். அது அவனுடைய இருதயத்தில் இருந்தது, எதுவுமே அதை அசைக்க முடியவில்லை, அவன் சரியாக அங்கேயே தரித்திருந்தான். ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் அந்தவிதமாகத்தான் நடந்து கொண்டான், இன்றிரவும் ஆபிரகாமுடைய ஒவ்வொரு பிள்ளையும் அந்த விதமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். இங்கே கீழேயுள்ளது இந்த பள்ளம் (pit) தான் என்று நீங்கள் இன்றிரவு விசுவாசிக்கிறீர்களா? 28. அதை விசுவாசியுங்கள்! என்ன சம்பவித்தாலும் காரியமில்லை, எப்படியும் அதை விசுவாசியுங்கள். கிறிஸ்தவர்கள் தாங்கள் எதைக் காண்கிறார்கள் என்பதில் நோக்கிப் பார்க்க மாட்டார்கள் என்பதைக் கவனியுங்கள்; கிறிஸ்தவர்கள் தாங்கள் காணாததையே நோக்கிப் பார்க்கிறார்கள். நீங்கள் காண்கிற காரியங்களைக் காட்டிலும் நீங்கள் காணாத காரியங்கள் தான் அதிக உண்மையாக உள்ளன. அந்த ஒலிப்பெருக்கியைக் கவனியுங்கள். அது அழிந்து விடும். ஒருபோதும் அழிந்து போகாத விசுவாசத்தை நான் காண்கிறேன், பாருங்கள். நான் அன்பு - அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை ஆகியவைகளை நான் காண்கிறேன். விசுவாசியினுடைய ஒவ்வொரு கேடயமும் இயற்கைக்கு மேம்பட்டவைகளாக உள்ளன. கிறிஸ்தவத்தின் அதிகார எல்லையைச் சார்ந்த ஒவ்வொன்றும் இயற்கைக்கு மேம்பட்டவைகள் மூலமாக கிரியை செய்கின்றன. ஒருசமயம் நாத்திகர் ஒருவர் என்னிடம், "விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கக் கூடாத எதுவும் உண்மையானதல்ல" என்று கூறினார். நான், விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கக் கூடிய எதுவும் உண்மையான தல்ல" என்றேன். அது அதற்கு மாறாக உள்ளது. அவர், "உம்மிடம் ஏதோ தவறுள்ளது" என்று கூறினார். நான், "ஆம், நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், அது தான் தவறு" என்றேன். அவர், "ஓ பாரும்" என்றார். அவர் சொன்னார்... நான், "இப்பொழுது, நீர் என்னிடம் விற்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை நீர் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்" என்றேன். 29. அவர் சொன்னார்... நான், "அது அற்புதமானது" என்றேன். நான், "அங்கே இயற்கைக்கு மேம்பட்ட ஏதோவொன்றுள்ளது என்பதை நீர் பாரும். அந்தப் படமானது அந்தத் திரையை திரையை அடையும் முன்பதாகவே நம்மினூடாக வந்து கொண்டிருக்கிறது" என்றேன். அவர், "ஓ, ஆமாம்" என்று கூறிவிட்டு, ஆனால், "அது எளிதானது. எங்களுக்கு ஒரு அனுப்பும் நிலையமும் (sending station) ஒரு பெறும் இடமும் (receiving station) உண்டு" என்றார். நான், "அவைகள் எங்களுக்கும் உண்டு" என்றேன். ஆமென்! நாமும் ஒரு அனுப்பும் நிலையத்தையும் ஒரு பெறும் இடத்தையும் பெற்றுள்ளோம். நிச்சயமாக. சகல சிக்னல் தடங்கல்களையும், அவிசுவாசத்தையும் வெளியே தள்ளி விட்டு, என்ன சம்பவிக்கிறது என்று கவனியுங்கள். அந்த காட்சியானது தெளிவாக இருப்பதைக் கவனியுங்கள், அதன்பிறகு நீங்கள், "ஓ, ஆமாம், கர்த்தாவே, நான் இப்பொழுது காண்கிறேன்" என்று கூறுவீர்கள். அதுதான் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது; நீங்கள் எவ்வளவு சிக்னல் தடங்கல்களை உள்ளே அனுமதிக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது, நீங்கள் பாருங்கள். எந்த சிக்னல் தடங்கல்களையும் அனுமதிக்க வேண்டாம்... அப்படியே சரியாக தேவனோடும், வார்த்தையோடும் தரித்திருங்கள், தேவன் ஒவ்வொரு தடவையும் ஐயத்துக்கிடமின்றி சரியாக அதனூடாகக் அதைக் கொண்டு வருவார். 30. இப்பொழுது, அந்தவிதமாகத்தான் ஆபிரகாம் செய்து கொண்டிருந்தான். அவன் சரியாக மாறாதவையோடு தரித்திருந்தான். ஜனங்கள், "இங்கே மேலே நம்மோடு தங்கியிருக்கிற அந்த வயதான மனிதனை உங்களுக்குத் தெரியுமா என்று சொல்லுங்கள். அவன் ஏறக்குறைய அரை பைத்தியமாக இருக்கிறான். ஏன், அவனுடைய மனைவி ஒரு வயதான பெலவீனமான ஸ்திரீ, அவனுக்கு எவ்வளவு வயதிருக்கும் என்று பாருங்கள், அநேகமாக அந்த நரைத்த மீசையும் முடியும் அவனுடைய இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருக்கிறது, அப்படியிருக்க அவர்கள் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறான் என்று அவன் கூறுகிறான். அப்படிப்பட்ட காரியத்தை நீங்கள் எப்பொழுதாவது கேட்டதுண்டா? ஏன், அந்த வயதான மனிதன் பைத்தியக்ககாரன்!" என்று கூறினாலும் அது காரியமில்லை. ஆனால் அவன் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்தான். ஒவ்வொரு மனிதனும்... இங்கே அது உள்ளது, இப்பொழுது நீங்கள் அதைக் குறித்துக் கொள்ளலாம்! இவ்வுலகத்தில் எப்பொழுதுவது மிக அதிகமாக எண்ணப்பட்ட ஒவ்வொரு மனிதனும், அவர்கள் தங்களுடைய திடமான விசுவாசத்தின் பேரில் தனியாக நிற்க வேண்டியிருந்த போதிலும், தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்த மனிதர்களாக இருந்தனர். இந்த தேசத்தினுடைய மகத்தான மனிதர்களாகிய ஜார்ஜ் வாஷிங்டன், வேலி ஃபார்க், ஆபிரகாம் லிங்கன் ஆகியவர்களைக் கவனியுங்கள்; எல்லா மனிதருமே தேவனை நம்பியிருந்த மனிதர்கள் தான். ஆம். இப்பொழுது, நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நாம் ஆபிரகாமின் சந்ததியாக இருந்தால், ஆபிரகாம் விசுவாசித்ததைப் போன்று நாமும் விசுவாசிக்க வேண்டியுள்ளது. இப்பொழுது. கடந்த இரவில், தேவன் உடன்படிக்கையை உறுதிப்படுத்தினபிறகு, அவர் அவனுக்குத் தரிசனமான இடத்தில் நாம் அவனை விட்டு வந்தோம். இப்பொழுது ஆபிரமாமுக்கு வயதாகி விட்டது, மிகவும் வயதாகி விட்டது: அவர் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணின பிறகு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன, ஆபிரகாமோ சிறிதளவும் பலவீனமாயிருக்கவில்லை. ஆபிரகாமுடைய சந்ததி என்று நம்மை நாமே அழைத்துக் கொள்ளுகிற நம்மில் சிலருக்கு இருபத்தைந்து நிமிடங்கள் கூட பற்றிக் கொண்டிருக்க முடியவில்லை, இருப்பினும், "நாங்கள் ஆபிரகாமின் சந்ததியார்; சபை புத்தகத்தில் எங்களுடைய பெயர் உண்டு" என்று கூறுகின்றனர். ஆனால் அது உங்களை ஆபிரகாமின் சந்ததியாராக ஆக்கி விடுவதில்லை. 31. நீங்கள் கிறிஸ்துவுக்குள் மரிக்கும் போது, நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராய் இருக்கிறீர்கள். எல்லா முரண்பாடுகளும் சிக்னல் தடங்கல்களும் முடிந்து விட்டன. உங்களுடைய நோக்கங்கள் ஒன்றாகவும், உங்களுடைய இருதயம் ஒன்றாகவும் இருக்கின்றன. நீங்கள் கிறிஸ்துவோடு ஒன்றாக இருக்கிறீர்கள். ஆமென். அவர் கூறினது தான் முதன்மையானது, மற்றவை முட்டாள் தனமானவை. அவ்வளவு தான். நீங்கள் அதற்காக அவருடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, அங்கே ஒரு வயதான மனிதன்... சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தில் தேவன் அவனை சந்தித்தார். நாம் அவனைக் கடந்த இரவில், ஆதியாகமம் 17ம் அதிகாரத்தில் விட்டு வந்தோம்... "சர்வவல்லமையுள்ள தேவன்" என்ற எபிரெய வார்த்தையானது எல்ஷடாய் என்று கண்டுகொண்டோம், அதற்கு, "மார்பு" அல்லது "ஸ்திரீயினுடைய மார்பகம்" என்று அர்த்தம். தேவன் ஆபிரகாமுக்கு மார்பகமுடைய தேவனாக, மார்புடைய தேவனாக தோன்றினார். அவர், "ஆபிரகாமே, நீ வயது சென்றவனாக இருக்கிறாய், உனக்கு நூறு வயது ஆகிறது, சாராளுக்கு ஏறத்தாழ நூறு வயது தொண்ணூறு வயதாகிறது. இருந்த போதிலும் நீ அதற்காக என்னுடைய வார்த்தையை எடுத்திருக்கிறாய், நீ பலவீனனாய் இருக்கிறாய், உன்னுடைய சரீரமானது போய் விட்டது" என்றார். அவன் தன் சரீரம் எவ்வளவு அதிகமாக அவ்வளவு செத்துப் போனதை இப்பொழுது எண்ணாதிருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது. 32. ஓ, அது எனக்குப் பிடிக்கும்! அவன் அதை எண்ணக்கூட இல்லை. என்னே! சக்கர நாற்காலிகளைக் குறித்து எண்ண வேண்டாம், எதையுமே எண்ண வேண்டாம் தேவன் சொன்னதையே எண்ணிப்பாருங்கள். தேவன் சொன்னதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூட வேண்டாம். "அவன் தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவனுக்கு துதி செலுத்தி, வல்லவனானான்" அது இந்த வருடத்தில் சம்பவிக்கவில்லையெனில், அது அடுத்த வருடத்தில் சம்பவிக்கும். அது அடுத்த வருடத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புடையதாக இருக்கப் போகிறது, ஏனெனில் அது ஒரு வருடம் வித்தியாசமாய் இருக்கும். அவன் ஒரு வருடம் பலவீனமாயிருந்தான், ஒரு வருடம் கடந்து விடும். ஆனால் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்வார் என்று அவன் அறிந்திருந்தான். ஆமென்! எனக்கு அது பிடிக்கும். அவருடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்வார்... அவர் தேவனாக இருக்க வேண்டுமானால், அவர் அதைச் செய்தாக வேண்டும். ஆபிரகாம் தொடர்ந்து தேவனைத் துதித்துக் கொண்டிருந்தான். "சாராளே, நீ இப்பொழுது எவ்வாறு உணருகிறாய்? தேவன் வாக்குத்தத்தம் செய்தது முதற்கொண்டு, 25 வருடங்கள் ஆகிவிட்டன." "ஆபிரகாமே, எந்த வித்தியாசமும் இல்லை" "தேவனுக்கு மகிமை, நாம் அதை எப்படியும் கொண்டிருக்கப் போகிறேன்." ஆமென். சரி. 33. குழந்தையானது துளிகூடப் பிசகாமல் கூறப்பட்ட பிரகாரமாகவே பிறக்கப் போகிறது. எல்லா நல்லமாதிரியான துணிமணிகளையும், அலங்கார ஊசிகளையும், மற்றும் யாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிரு; நாம் அதைக் கொண்டிருக்கப் போகிறோம்." "ஆபிரகாமே, என்ன சொல்லுகிறீர்?" "தேவன் அவ்வாறு கூறினார்!". அது அதைத் தீர்த்து வைக்கிறது, "தேவன் அவ்வண்ணமாகக் கூறினார்." ஓ, அது எனக்குப் பிடிக்கும். சகோதரனே, அது பிசாசு தன்னுடைய வாலை அதன் கால்களுக்கு இடையில் வைத்தவாறு தப்பி ஓடச் செய்யும். "தேவன் அவ்வண்ணமாகக் கூறினார்!" அங்கே தான் இயேசு காண்பித்தார்... கிறிஸ்து தம்மிடத்தில் எல்லா குணாதிசயங்களையும் கொண்டிருந்தார், பிதாவானவர் குமாரனுக்குள் இருந்தார். பிதாவானவர் குமாரனுக்குள் இருந்து, உலகத்திற்கு தம்மைத் தாமே ஒப்புரவாக்கினார்... சரியாகச் சொன்னால், உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். அவர் சாத்தானைச் சந்தித்த போது, தம்முடைய எந்த வல்லமையையும் ஒருபோதும் உபயோகிக்கவில்லை. கிறிஸ்தவர்களிலேயே பலவீனமானவனும் சாத்தானைத் தோற்கடிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார். சாத்தான் அவரிடம் வந்த போது, "இப்பொழுது, நீர் தேவனுடைய குமாரனானால், நீர் அவ்வாறு இருந்தால், நீர் அற்புதம் நடப்பிக்கும் மகத்தான ஒருவராய் இருக்கிறீர். நீர் அவ்வாறு இருந்தால், நீர் இங்கே எனக்காக ஒரு அற்புதத்தை நடப்பிக்க நான் விரும்புகிறேன், இந்தக் கல்லுகளை அப்பங்களாக்கி, புசியும். இப்பொழுது, நீர் பசியாயிருக்கிறீர்..." என்றான். 34. இப்பொழுது கவனியுங்கள், இயேசு தம்முடைய வல்லமையை உபயோகிக்கவில்லை, ஆனால் அவர் அதைச் செய்யவில்லை; அவர் வார்த்தையை உபயோகித்தார். அவர், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" என்றார். அவர் மூன்று தடவையும் சாத்தானுக்கு எதிர்த்து நின்று மூன்று தடவையும் அவனைத் தோற்கடித்தார், "மூன்று" என்பது சாட்சியின் உறுதிப்படுத்துதலாயுள்ளது. ஆமென்! அவர் தேவனுடைய வார்த்தையைக் கொண்டே சாத்தானை அவனுடைய சொந்த நிலத்தில் தோற்கடித்தார். இன்றிரவு இங்கேயுள்ள பெலவீனமான கிறிஸ்தவனும் எங்கும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு எந்த நிலைமையின் கீழும் சாத்தானைத் தோற்கடிக்க முடியும். சரி. வெறுமனே அதை விசுவாசியுங்கள். தேவன் அவ்வண்ணமாகக் கூறினார். "உங்களுக்கு எப்படித் தெரியும்?" "தேவன் அவ்வண்ணமாகக் கூறினார்." "என்ன"... அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்." 35. அறிக்கை என்பது என்ன? அறிக்கை செய்தல் என்பது "சொல்லப்பட்டதையே திரும்பச் சொல்லுதல்" என்பதாகும். அதுதான் அறிக்கை செய்தல் என்பதாகும். அறிக்கை செய்தல் என்பது சொல்லப்பட்டதையே திரும்ப திரும்ப சொல்லுவதாகும், அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுவதாகும். அவர் சொன்னதையே சொல்லுதல், உங்களுடைய உணர்ச்சி கூறுவதை சொல்ல வேண்டாம், உங்களுடைய அண்டை வீட்டார் கூறுவதை சொல்ல வேண்டாம். தேவன் கூறினதையே சொல். அதை அறிக்கை பண்ணி, அதையே விசுவாசி. உங்களுடைய அறிகுறிகளை நோக்கிப் பார்க்க வேண்டாம்; அறிகுறிகள் என்பது சத்துருவுடைய மோசமான காரியமாகும்... தேவன் அதற்கு விரோதமாக சண்டையிட வேண்டியுள்ளது. அறிகுறிகள். ஒவ்வொருவரும், "நல்லது, எனக்காக ஜெபிக்கப்பட்டது, ஆனால் என்னுடைய கரமானது சுகமடையவில்லை" என்று கூறுகிறார்கள். அது அவ்விதமாக ஒருபோதும் இருக்காது. ஒருபோதும் இருக்காது. நீங்கள் உங்களுடைய கரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கரத்தை நோக்கிப் பார்க்க வேண்டாம், தேவன் சொன்னதையே நோக்கிப் பாருங்கள். ஆபிரகாம், "இப்பொழுது, சாராளே..." என்று கூறினால் என்னவாக இருக்கும். முதலாவது மாதம். இப்பொழுது, அவளுக்கு ஏறக்குறைய பதினேழு, பதினெட்டு வயதாயிருந்தது முதற்கொண்டு அவன் அவளோடு வருடக்கணக்காக வாழ்ந்து வந்திருக்கிறான், இப்பொழுது இங்கே அவளுக்கு 65 வயதாகி விட்டது, ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு கடந்து போய் அநேக வருடங்கள் ஆகி விட்டன, பாருங்கள். அவள் பிள்ளைகளைக் கொண்டிருக்கப் போவதாயிருந்தால், அப்போதே அதைக் கொண்டிருந்திருப்பாள். அவர்கள் இருவருமே மலடாய் இருந்தார்கள். அவன், நல்லது, அவள் எவ்வாறு குழந்தையைக் கொண்டிருக்க முடியும்..." என்று கூறியிருந்தால், அவன் அவ்வாறு கூறியிருந்தால், எப்படியிருக்கும்? ஏன், முதலாவது மாதம் கடந்து போயிற்று, "சாராளே, நீ எவ்வாறு உணருகிறாய்?" என்று கேட்டான். அவள், "எந்த வித்தியாசமுமில்லை" என்று சொன்னாள். "நல்லது, ஒருக்கால் தேவன் என்னிடம் அதைக் கூறாமல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன்." ஓ, என்னே! தேவன் தம்முடைய நம்பிக்கையை ஆபிரகாமில் வைக்க முடிந்திருக்காது. 36. ஆனால், சாராள் எந்த நிலையில் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது சாராளுடைய நிலையை அல்ல; அவன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது தேவன் பண்ணியிருந்த வாக்குத்தத்தத்தைத் தான். அது உங்களுடைய கரத்தின் நிலைமையோ, அல்லது உங்களுடைய காதின் நிலைமையோ, அல்லது உங்களுடைய புற்று புற்று நோயின் நிலைமையோ, அல்லது அது எதுவாக இருந்தாலும் அதுவல்ல; நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது தேவனுடைய வார்த்தையைத் தான். தேவன் அவ்வண்ணமாகக் கூறினார். நீங்கள் உண்மையான சரக்குகளைக் கொண்டிருந்தாக வேண்டும். இப்பொழுது, உங்களுடைய அறிகுறிகளை நோக்கிப் பார்க்க வேண்டாம். உங்களுக்குத் தெரியும், ஒரு மனிதன் ஒரு சமயம் கொண்டிருந்த கொஞ்சம் அறிகுறிகளை நான் உங்களிடம் கூறட்டும்: என்னுடைய ஜீவியத்தில் எப்பொழுதும் கண்டதிலேயே மோசமான கேஸ். அது யோனா என்று பெயருடைய ஒரு மனிதனாவான். தேவன் அவனை நினிவேக்கு அனுப்பினார், அவன் ஒருவிதமாக தைரியத்தை இழந்தவனாயிருந்தான், ஏனென்றால் ஊழியக்காரச் சங்கம் அங்கே அவனுக்கு விரோதமாயிருந்தது. ஆகையால், அவன் தர்ஸீசுக்குப் போனான், அங்கே மிகவும் இலகுவாயிருந்தது, அநேக பரிசுத்தவான்கள், உங்களுக்குத் தெரியும். ஆனால் அவனுடைய பாதையில், பிரச்சனை எழும்பினது. செய்ய வேண்டாம் என்று தேவன் உங்களிடம் கூறின ஏதோவொன்றை நீங்கள் செய்யும்போது, நீங்கள் வழக்கமாக அந்த விதமாகத் தான் பெற்றுக் கொள்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். 37. கடல் பொங்கினது, அலைகள் கப்பலுக்குள் வந்தன, இறுதியாக அவன்தான் அதற்குக் காரணம் என்று அவன் அறிக்கை பண்ணினான். அவர்கள் அவனுடைய காலையும் கைகளையும் கட்டி கடலில் எறிந்தனர். இப்பொழுது கவனியுங்கள், தேவன் ஒரு பெரிய மீனை அங்கே வைத்திருந்தார், அது வந்து யோனாவை விழுங்கினது. அதற்குப் பிறகு, ஒரு மீன் சாப்பிடும் போது, அது (கடலின்) அடியில் சென்று, நீந்துவதற்கான தன்னுடைய துடுப்புகளை அடியில் இளைப்பாறப்பண்ணும். உங்களுடைய கோல்டு பிஷ்களுக்கு உணவு கொடுத்து விட்டு என்ன நடக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். எனவே, அந்த மீன் தன்னுடைய இரைக்காக தண்ணீருக்குள் தேடித்திரிந்து கொண்டிருந்தது. தேவன் அங்கே அதை வழிநடத்தினார். இங்கே ஒரு பின்வாங்கிப் போன பிரசங்கி இருந்தான். அவன் வெளியே எறியப்பட்டிருந்தான், அது இந்த பிரசங்கியாரை விழுங்கினது. இங்கே அவன் அங்கே அந்த பெரிய மீனின் வயிற்றில் பின்வாங்கிப் போனவனாகவும், அவனுடைய கழுத்தைச் சுற்றிலும் கடற்பாசி சுற்றியிருக்கிறவனாகவும், ஒரு பெரிய வயிறு நிறைய உள்ள வாந்தியிலே படுத்தவனாகவும், ஒரு புயல்வீசும் கடலில், ஒருவேளை அநேக அடிகள் ஆழத்தில் இருந்தான், இந்தப் பெரிய மீன் யோனாவைப் புசித்த பிறகு, கீழே சென்று, அங்கே கீழே இருந்தது. அவன் இவ்விதமாக நோக்கிப் பார்த்தால், இது மீனின் வயிறாக இருந்தது; அவன் அவ்விதமாக நோக்கிப் பார்த்தால், அதுவும் மீனின் வயிறாக வயிறாக இருந்தது; இருந்தது; அவனால் காண முடிந்த எல்லா இடங்களும் மீனின் வயிறாகவே இருந்தது. அவன் பின்வாங்கிப் போனவனாய், அவனுடைய காலும் கைகளும் அவனுக்குப் பின்பாக கட்டப்பட்டவனாய், ஒரு புயல்வீசும் கடலில் இருந்தான். அதைக் காட்டிலும் மோசமான விதத்தில் யாரும் இங்கில்லை. 38. ஆனால் அவன் என்ன சொன்னான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன், அவைகள் பொய்யான மாயைகள். நான் என்னுடைய நிலைமையில் இந்த பெரிய மீனின் வயிற்றை நோக்கிப்பார்க்க மாட்டேன்" என்றான். ஆனால் அவன், "கர்த்தாவே, நான் இன்னும் ஒருவிசை உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன். சாலமோன் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணின போது, அவன், "கர்த்தாவே, உமது ஜனங்கள் எங்காவது தொல்லையில் அகப்பட்டு, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தை நோக்கிப் பார்த்து ஜெபிப்பார்களானால், பரலோகத்திலிருந்து அதை கேட்பீராக" என்று ஜெபித்தான்" அவன் தாவீதுடைய குமாரனாகிய சாலமோனுடைய ஜெபத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்தான். தேவன் ஆக்ஸிஜன் கொள்கலத்தை அல்லது ஏதோவொன்றை அங்கே கீழே அனுப்பி, அவனை மூன்று நாட்கள் உயிரோடு பாதுகாத்தார். யோனா அந்த சூழ்நிலையிலும், முடிவில் பின்வாங்கிப் போனவனாய் மரித்திருந்த சாலமோனுடைய ஜெபத்தில் விசுவாசம் கொண்டிருக்கக் கூடுமானால், இன்றிரவு தேவனுடைய வலதுபாரிசத்தில் தம்முடைய சொந்த இரத்தம் தோய்ந்த வஸ்திரங்களோடு உட்கார்ந்து, நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசிக் கொண்டிருக்கும் தாவீதுடைய உண்மையான குமாரனிடத்தில் நாம் எவ்வளவு அதிகமாக விசுவாசம் கொண்டிருக்க வேண்டும்? ஆமென்! ஒவ்வொரு இரவும் சரியாக நம்மைச் சுற்றிலும் ஜனங்கள் சுகமடைவதை காண்கிறோம். ஓஓ காண்கிறோம். ஓ, அவைகள் பொய்யான மாயைகள், அது என்னவாக இருந்தாலும், அது ஒரு பொய்யான மாயை தான். "நான் இதை இதற்கு மேலும் கொண்டிருக்க மறுப்பு தெரிவிக்கிறேன், தேவனே, நான் அந்த பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பார்க்கப் போகிறேன்". 39. நீங்கள் முதலாவது அதை அறிக்கை செய்து, உங்களுடைய அறிக்கையின் பேரில் செயல்படும் மட்டுமாக, பிரதான ஆசாரியனாகிய இயேசுவால் உங்களுக்காக ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. "நம்முடைய அறிக்கையின் பிரதான ஆசாரியனாக அவர் இருக்கிறார்" என்று எபிரெயர் 3ம் அதிகாரம் கூறுகிறது. அது வெளிப்படையாக தெரிவிப்பது (profess) என்ற வார்த்தையாகும், ஆனால் வெளிப்படையாகத் தெரிவி (profess) என்ற வார்த்தையும், அறிக்கை செய் (confess) என்ற வார்த்தையும் ஒரே வார்த்தை தான். "நாம் அறிக்கை பண்ணுகிற பிரதான ஆசாரியன்." நீங்கள் முதலில் அதை ஏற்றுக் கொண்டு, அவர் அதை செய்து விட்டார் என்று அறிக்கை செய்யும் வரை அவரால் எதையும் செய்ய முடியாது. அது சரியே. யாராவது ஒருவர் இரட்சிக்கப்பட முயற்சி செய்வதை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? பீடத்தண்டை மேலும் கீழும் நடந்து, சத்தமிட்டு, மெல்லும் பிசினை (chewing gum) மெல்லுகிறார்கள். "தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் கூறுகிறேன், நீர் அப்படியே அதை எடுத்துக் கொள்ளாமலிருந்தால்..." ஒரு "நான்" என்ற புள்ளியை இடுவதற்காக அவனுடைய மையில் (ink) போதுமான விசுவாசம் இல்லை. அப்படியே நடந்து, "கர்த்தாவே, நான் உம்மிடம் கூறுகிறேன், நான்... நான் உம்மிடம் கூறுகிறேன், நான்... 40. ஓ, நீங்கள் அவரிடம் கூறிக் கொண்டிருக்கிறீர்கள், அவருக்கோ அதைக் குறித்து எல்லாம் தெரியும். நீங்கள் ஒரு வாலிபனாய் இருப்பது முதற்கொண்டு தலைநரைத்த ஒரு வயோதிபனாக ஆகும் மட்டுமாக நீங்கள் அதைச் செய்யலாம், அப்பொழுதும் நீங்கள் ஒரு பாவியாக இருப்பீர்கள். ஆனால் எளிதான வழி என்னவெனில், இயேசு கூறியவை சத்தியம் என்பதை ஏற்றுக் கொண்டு, அவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்வதும், நீங்கள் வருவீர்களா என்று உரிமையுடனே அழைக்கும் அந்த ஆவியானவரை ஏற்றுக் கொண்டு, "நான் மெய்யாகவே அதை விசுவாசிக்கிறேன், அவரை இப்பொழுதே என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறுவதும் தான். சகோதரனே, பரலோகத்தின் சந்தோஷ மணிகள் உங்களுடைய ஆத்துமாவில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கும். ஏன்? அவரால் உங்களுக்காக எதையுமே செய்ய முடியவில்லை... அவர், "மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன் (மத்தேயு 10:32, லூக்கா 12:8) என்றார். நீங்கள் அதை விசுவாசித்து அதை அறிக்கை பண்ணுங்கள். அந்தவிதமாகத்தான் அது உள்ளது, அறிகுறிகள் என்னவாயிருந்தாலும் ஒரு பொருட்டல்ல, எப்படியும் அதை விசுவாசியுங்கள். தேவன் அவ்விதமாக கூறினார், அதோடு அது முடிவு பெறுகிறது. அதைத்தான் ஆபிரகாமும் கூறினான். இப்பொழுது, தேவன் அவனை மீண்டும் சந்தித்து, அவனிடம், "நான் எல்ஷடாய்" என்று கூறினார். 41. அதற்கும் ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவன், "சாராளே, தேனே, நீ எவ்வாறு உணருகிறாய்? உனக்கு மிகவும் கூன் ழுந்திருக்கிறது, உனக்கு ஏறக்குறைய 100 வயதாகிறது. நீ எவ்வாறு ருகிறாய்?" என்று கேட்டிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. நல்லது, அன்பே, என்னிடத்தில் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. நான் அப்படியே அதே விதமாகத் தான் இருக்கிறேன்." எந்த அடையாளமும் இல்லையா?" "எந்த அடையாளமுமே இல்லை." "நல்லது, மகிமை! நாம் அவனைக் கொண்டிருக்கப் போகிறோம். ஆமென். அவன் வந்து கொண்டிருக்கிறான், அவ்வளவு தான். ஆயத்தமாயிரு. அந்த நாள் கடந்து போயிற்று, அவன் வெளியிலிருந்த பசும்புல் மேய்ச்சல் நிலத்தில் அமர்ந்திருந்து, அந்த ஆட்டை ஆடுகளையும், அவனிடமிருந்த மிருகங்கள் யாவற்றையும் சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்து விட்டு, அந்த மரத்தண்டைக்கு திரும்பி வந்தான், கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, "நான் எல்ஷடாய். ஆபிரகாமே, நீ வயது சென்றவன், சாராளும் வயது சென்றவள், ஆனால் நீயோ அதைக் கவனிக்கவில்லை, நீ என்னுடைய வாக்குத்தத்தத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாய், எனவே நான் உனக்கு பலம் அளிப்பவனாக (strength-giver) இருக்கிறேன்" என்றார். ஆமென்! என் மார்பில் சாய்ந்து உங்களை மீண்டும் பெலத்துடன் வளர்த்துக் கொள்ளுங்கள். 42 சிறு குழந்தை அழும்போதும், வருத்தப்படும்போதும், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போதும், தாய் அதைத் தன் மார்பில் இழுத்து, பாலூட்ட ஆரம்பிக்கிறாள். மேலும் இது தாயிடமிருந்து வலிமையை வளர்க்கிறது. நான் சொன்னது போல் அதன் வைட்டமின்களைப் பெறும்போது, தாயிடமிருந்து அதன் வைட்டமின்களைப் பெறுகிறது, அது உருவாகிறது, அது எல்லா நேரத்திலும் திருப்தி அடைகிறது. ஒரு தேவ பிள்ளை தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தம் எதையாவது பற்றிக்கொள்ளும் போது, அது தேவனுடைய நித்திய வார்த்தையிலிருந்து வைட்டமின்களைக் இழுத்துக் கொண்டு வருகிறது. அது உங்களைக் கட்டி எழுப்புகிறது. ஆமென். கவனியுங்கள்... நான் எனக்கு நானே "ஆமென்" என்று கூறவில்லை, ஆனால் நான் அப்படியே அதை விசுவாசிக்கிறேன். ஆமென் என்பதற்கு "அப்படியே ஆகக்கடவது" என்று என்று அர்த்தம். நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். கவனியுங்கள். இப்பொழுது, அவன் அப்படியே சிறிது அதிக தூரமாக தொடர்ந்து சென்று கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவன் தொடர்ந்து அதிக தூரம் போகையில், லோத்து தன்னைத்தானே அவனைவிட்டுப் பிரித்துக் கொண்டு, அதிக தண்ணீர் நிறைந்த பிரதேசங்களை எடுத்துக் கொள்வதற்காகப் போய், அவன் அந்தப் பட்டணத்தின் மேயராக ஆவதையும், அவனுடைய மனைவி மகத்தான தையல் விருந்துகள் மற்றும் யாவற்றினுடைய தலைவியாக ஆவதையும் நாம் காண்கிறோம். அவர்கள் சரியாகவே சென்று கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டனர். 43. ஒரு நாள் ஆபிரகாம் வெளியில் மரத்தின் கீழே அமர்ந்திருக்கையில், மூன்று மனிதர்கள் நடந்து வருவதை அவன் கண்டான். ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, அவன் அங்கேயிருந்த அந்த மூன்று மனிதர்களை உற்று நோக்கி, அவர்கள் யாரென்று அடையாளம் கண்டு கொண்டான். அவன் கூடாரத்திற்குள் நழுவிச் சென்று, அவன், "சாராளே, சீக்கிரமாக கொஞ்சம் மாவை ஆயத்தம் செய்" என்று கூறினான். அவன் வெளியே ஆட்டு மந்தைக்குச் சென்று, ஒரு சிறு ஆட்டுக்குட்டியைப்பிடித்து... அல்லது, ஒரு சிறு ஆட்டைப் பிடித்து... அல்லது, ஒரு கன்றுக்குட்டியைப் பிடித்து, அதைக் கொன்று, அதை சமைத்து, அதை வெளியே கொண்டு வந்து, அதை அந்த மனிதர்களிடம் கொடுத்தான், அவன் அவர்களுடைய கால்களைக் கழுவினான். அவர்கள் உட்கார்ந்து, இளைப்பாறினர், அதன்பிறகு, அவர்கள் புறப்பட ஆயத்தமான போது, இரண்டு மனிதர்கள் சோதோமுக்குச் சென்றனர், அவன் அவர்களில் ஒருவரோடு பேசினான். அது சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர வேறு யாருமில்லை என்று வேதாகமம் கூறுகிறது. அவர் தம்முடைய முதுகை கூடாரம் பக்கமாகத் திருப்பியவாறு இருந்தார். சாராள் வெளியே வரவில்லை. ஸ்திரீகள் இப்பொழுது செய்வது போன்று, அவர்கள் அப்போது மனிதர்களுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுவதில்லை. ஈடுபடுவதில்லை. எனவே, அவள் கூடாரத்திலேயே தங்கியிருந்தாள், அவளுக்குரிய இடம் அதுதான். எனவே, அவள் அங்கே கூடாரத்தில் பின்புறத்தில் இருந்தாள், தேவன் ஆபிரகாமைப் பார்த்து, "என்னவென்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். 44. ஸ்திரீகளே, நான் உங்களை எந்தவிதத்திலும் புண்படுத்த வேண்டுமென்று கருதவில்லை; நான் கிறிஸ்தவ பெண்மணிகளாகிய உங்களைக் கூறவில்லை. ஆனால் ஸ்திரீகள் அரசியலிலும், மற்றும் யாவற்றிலும் வருவதைக் காணும் போது, அது ஒரு அவமானமாக இருக்கிறது, இது... அமெரிக்காவானது... ஒரு ஸ்திரீ... நான் இதைத் தனியே விட்டு விடுவது நல்லது. ஆனால் இதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள். நான் இதை முன்னுரைக்கிறேன்: நாம் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்பு, ஒரு ஸ்திரீ ஜனாதிபதியாய் இருப்பாள். அது உண்மை. நான் அதை ஒரு தரிசனத்தின் மூலமாக 1933ம் வருடத்தில் கூறினேன். நிச்சயமாக, இது ஒரு ஸ்திரீகளின் உலகம் தான். அது எங்கிருந்து துவங்கினது? ஹாலிவுட்டிலிருந்து. உங்களுடைய எல்லா அசுத்தங்களும், அசுத்தமாக உடையுடுத்துவதும் மற்றும் காரியங்களும் அங்கிருந்து தான் துவங்கினது. அவை நமது வீட்டிற்குள் மெதுவாக வந்து புகுந்து விட்டன, மேலும் அவ்விதமாக காரியங்கள் மெல்ல மெல்ல வந்து புகுந்து விட்டன, மேலும் இப்பொழுது அது தொலைக்காட்சி வழியாகவும், மற்ற யாவற்றின் வழியாகவும் வருகின்றன. அது ஒரு அவமானம்! நாம் மீண்டும் அந்த நல்ல பழைமை நாகரீகமான அஸ்திபாரத்திற்குத் திரும்பி வரும் அளவுக்கு நம்முடைய எந்த எழுப்புதல்களுமே உதவி செய்யாது. ஓ, நான்... நல்லது, அதற்காக அநேக காரியங்கள்; அந்த பிரசங்கிமார்கள் அதைக் குறித்து உங்களிடம் கூறுவார்கள். ஆனால் இப்பொழுது, கவனியுங்கள், ஆபிரகாம் தேவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, சாராள் பின்னால் கூடாரத்தில் இருந்தாள், தேவன் ஆபிரகாமிடம், "நான் ஒரு உற்பவகாலத்திட்ட மாதத்தில் உன்னைச் சந்திக்கப் போகிறேன் (ஆதியாகமம் 18:10), நீ ஒரு குழந்தையைக் கெண்டிருக்கப் போகிறாய்" என்றார். 45. நல்லது, என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சாராள் நகைத்தாள். தேவன் சாராளுக்கு தன் முதுகைக் காண்பித்தவாறு இருக்க, சுற்றிலும் திரும்பி, "சாராள் ஏன் நகைத்தாள்?" என்று கேட்டார். சாராளோ, "ஓ, இல்லை, நான் ஒருபோதும் நகைக்கவேயில்லையே" என்றாள். அவர், "ஓ, ஆமாம், நீ அதைச் செய்தாய்; நீ நகைத்தாய்" என்றார். அவள் மிகவுமாக பயந்து போனாள். பாருங்கள், அது அவளை அழித்துப் போடவில்லை. இப்பொழுது, அவள் தவறு செய்தாள், ஆனால் அவள் இழக்கப்படவில்லை; அவள் அப்படியே தவற்றைச் செய்தாள். அவள் பயந்து போனாள். கவனியுங்கள். அதன்பிறகு... வெளியே நடந்து செல்லத் துவங்கின போது, இந்த மனிதர் மறைந்து போனார், ஆபிரகாம், "அது கர்த்தர்" என்றான், அவன் தேவனாகிய கர்த்தரிடம் பேசினான். தேவன் அங்கேயிருந்தார். நான் ஒரு சில வருடங்களுக்கு முன்பு, வெளியிடப் போவதாய் இருந்த, ஒரு சிறு புத்தகத்தில் நான் ஒரு சமயம் அதன் பேரில் எழுதியிருந்தேன், ஒரு ஊழியக்காரர் என்னுடைய உதவி கேட்டு அழைப்பு விடுத்தார். அவர், "பிரன்ஹாம் பிரசங்கியாரே, அது தேவன் என்று நீர் விசுவாசிப்பதாக என்னிடம் கூற விரும்புகிறீரா?" என்றார். நான், "அதைத்தான் வேதம் கூறுகிறது" என்றேன். அவர், "அவர் அந்த சரீரத்தை எங்கிருந்து பெற்றார்?" என்று கேட்டார். நான், "நல்லது கவனியும், அவர் எவ்வளவு மகத்தான தேவன் என்று நீர் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்" என்றார். அந்த சரீரம் எதனால் உண்டாக்கப்பட்டிருந்தது? கொஞ்சம் பெட்ரோலியம், கொஞ்சம் அண்ட வெளிச்சம், அவ்விதமான ஒரு சில காரியங்களை ஒன்று சேர்த்து, அணுக்களோடு ஒட்டுக் கொண்டன. 46. இங்கே, சமீபத்தில், என்னிடம் மீதமிருந்த ஒரு சில முடிகளை சீவ முயற்சித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மனைவி என்னிடம் இவ்வாறு கூறினாள், அவள் என்னைப் பார்த்து, "பில்லி, தேனே, நீர் வழுக்கை தலையாய் ஆகி வருகிறீர்" என்றாள். நான், "ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் அவைகளில் ஒரு முடியையும் இழந்து போகவில்லை" என்று கூறினேன். அவள், நல்லது, அவைகள் எங்கேயிருக்கின்றன?" என்று கேட்டாள். நான், "சரி, அன்பே, நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கூறப் போகிறேன். நான் அவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு அவைகள் எங்கேயிருந்தன என்று என்னிடம் கூறினால், நான் அவைகளிடம் வரும்படி, அவைகள் எனக்காக எங்கே காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை நான் உன்னிடம் கூறுவேன்" என்றேன். ஆமென்! நான் அதை விசுவாசிக்கிறேன்! சரி! நான் எதையும் இழந்து போகவில்லை. அவைகள் இல்லாதிருந்தன; அதன்பிறகு அவைகள் இருந்தன; அதன்பிறகு அவைகள் இல்லை; அவைகள் இருந்த இடத்தில் அவைகள் இருக்கின்றன, ஏதோவொரு நாளில் தேவன் மீண்டுமாக என்னுடைய திடகாத்திரமான இயற்கையான சரீரத்தோடு கூட அவைகளை எனக்குத் திரும்பவும் தருவார். ஆமென்! நான் தேவனுடைய வார்த்தையின் மூலம் அதை நிரூபிக்கிறேன். 47. கவனியுங்கள். ஏன், தேவன், அவர் எவ்வளவு மகத்தானவர்! அவர் அங்கே சென்று, "காபிரியேலே, இங்கே வா என்று கூறுகிறேன். வியூயூ!" என்று என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. கொஞ்சம் அணுக்கள் ஒன்றாக சேர்க்கப்படுகிறது. "அந்த சரீரத்திற்குள் நடந்து செல். மிகாவேலே, இங்கே வா. வியூயூ! நீ அந்த ஒன்றிக்குள் நடந்து செல்." அவரோ தமக்கு சொந்தமான சரீரத்திற்குள் அடி எடுத்து வைத்து, வெளியே நடந்து சென்றனர்... அதுதான் தேவன். தேவன். அவர் எல்லா வெளிச்சத்தையும், மற்ற யாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவர் அங்கே நடந்து சென்றார், அவர் தமது வஸ்திரங்களில் தூசியைக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல, ஆனால் அவர் கன்றுக்குட்டியைப் புசித்து, பசுவின் பாலைக் குடித்து, சோள ரொட்டியைச் சாப்பிட்டார். அது உண்மை! தேவன் தாமே தாம் ஜீவித்துக் கொண்டிருந்த சரீரத்தில் பசியைக் கொண்டிருந்தார். அப்படியானால், அதே தேவனே உங்களை இன்றிரவு பாவத்திலிருந்து இரட்சித்து, ஏதோவொரு நாளில் உங்களை உயிரோடு எழுப்புவார் என்பதற்காக நீங்கள் சந்தோஷப்படவில்லையா? அந்த அணுக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். ஓ, அது அவ்வளவு சிறிய ஒரு காரியமாய் உள்ளதே, எவ்வளவு சிறிய... எல்லைக்குட்பட்ட சிறிய சிந்தைகள் தேவனுடைய முடிவில்லாத சிந்தையை அறிந்து கொள்ள முயற்சி செய்யக் கூடும். அவரைக் கவனியுங்கள். சிறிது நேரம்... நாம் அந்தக் கேள்வியின் பேரில் இருக்கையில், நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்க விரும்புகிறேன், ஏதோவொன்று அங்கே சம்பவித்தது. நான் அநேகமாக இதன் பேரில் சில குற்றம் கண்டுபிடிக்கப்படலாம், ஆனால் நாம் எப்படியும் அதனோடு போகலாம். நீங்கள் வாஞ்சையாய் இருக்கிறீர்களா? 48. நீங்கள் இவ்விதமாக வேதாகமத்தை வாசிப்பதில்லை என்று நான் உங்களிடம் கூறினதை நீங்கள் அறிவீர்கள்; நீங்கள் வரிகளுக்கிடையில் வாசிக்க வேண்டும். தேவன் எப்போதுமே தம்முடைய காதல் கடிதத்தை எழுதுகிறார், அது நான் எனது மனைவிக்கு கடிதம் எழுதுவது போன்று அல்லது அவள் எனக்கு கடிதம் எழுதுவது போன்றோ இருக்கிறது, நமக்கு அது தெரியும்... நாம் தாளில் என்ன எழுதுகிறோம் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறோம், ஆனால் நாம் அவ்வளவாக ஒருவர் மற்றவரிடத்தில் அன்புள்ளவர்களாயிருப்பதால், நாம் வரிகளுக்கிடையே வாசிக்கிறோம். அவ்விதமாகத்தான் நாம் தேவனிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறோம், நீங்கள் பிடிவாதமாகவும் ஆசார நுணுக்கம் பார்க்கிறவர்களாகவும், உங்கள் பெயரோடு சில பட்டங்களை சேர்த்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டாம்; வெறுமனே அவரை மிகவும் அதிகமாக நேசியுங்கள், அப்போது அவர் உங்களை வரிகளுக்கிடையே வாசிக்க வைப்பார். 49. இந்தியானாவிலுள்ள ஃபோர்ட் வேயினில்: ஒரு மனிதன் சுகமடைந்து, அவன் மன்னரின் தனிப்பட்ட காரியதரிசியிடம் அனுப்பப்பட்ட போது, அவனுடைய சரீரத்தின் அநேக பாகங்கள் இறுகி சொர சொரப்பாக மாறும் வியாதியிலிருந்து (sclerosis) சுகமாக்கப்பட்ட போது, நான் இந்த ஜார்ஜ் மன்னருக்காக ஜெபிக்க வர வேண்டும் என்று எனக்கு செய்தி அனுப்பினார், அவருக்கும் சரீரத்தின் அநேக பாகங்கள் இறுகி சொர சொரப்பாக மாறும் வியாதி இருந்தது. அந்தக் கூட்டத்தில், நான் பின்னால் நடந்து சென்று, அங்கே உட்கார்ந்த போது, "நம்பிடுவாய்" என்ற பாடலைக் கேட்டேன், அந்தப் பாடலை பால் ராடர் அங்கே ரெடிகர் கூடாரத்தில் வைத்து எழுதினார் என்பதை அதே அறையில் வைத்து அறிந்து கொண்டேன். நான் அங்கே உள்ளே நடந்து சென்றேன், அங்கே ஒரு மனிதன் எனக்குப் பின்னால் நடந்து வந்தான். அவர், "சங்கை பிரன்ஹாம் அவர்களே" என்றார். நான், "ஆம், ஐயா" என்றேன். அவர், "உம்முடைய இலக்கணம் மிக மோசமாக உள்ளது" என்றார். நான், "ஆம், ஐயா, அது மிகவும் மோசமாகத்தான் உள்ளது என்று எனக்குத் தெரியும்" என்றேன். மேலும் அவர், "நீர் செய்கிறவிதமாய் இந்த கூட்டங்களில் பேசி, நீர் உபயோகிக்கிற இந்த இலக்கணத்தை உபயோகிக்கிற மனிதராகிய உம்மிடம் நான் கூறுகிறேன், நீரே உம்மைக் குறித்து வெட்கப்பட்டாக வேண்டும்" என்றார். நான், "நான் வெட்கப்படுகிறேன், ஐயா" என்றேன். அவ்வண்ணமாக அவர் அங்கே நின்று கொண்டு, உதாரணமாக, இன்றிரவு, நீர் மிக மோசமான இலக்கணத்தில் சிலவற்றை உபயோகப்படுத்தினீர்" என்றார். 50. நான், ஆம், ஐயா. நான் ஒரு பெரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன் என்பது உமக்குத் தெரியும், பத்து பிள்ளைகள், நான் தான் மூத்தவன். என்னுடைய தகப்பனார் சுகவீனமாய் இருந்ததால், நான் வேலைக்குப் போக வேண்டியிருந்தது, நான் வேலைக்குப் போனேன், நான் வெளியே செடி கொடிகளோடும் மற்றும் காரியங்களிலும் இருக்கும் போது, எனக்கு ஏறக்குறைய பத்து வயது மட்டுமே. எனக்குக் கடினமான நேரம் இருந்தது" என்றேன். அவர், "இப்பொழுது, அது சாக்குப்போக்கு கிடையாது" என்றார். நான், "நல்லது, அப்படியானால் அதுதான் உண்மை, ஐயா" என்றேன். ஆனால் நான், "கர்த்தர் தம்முடைய வியாதிப்பட்ட பிள்ளைகளுக்காக ஜெபிக்க என்னை அனுப்பினது முதற்கொண்டு, படுக்கவோ, தூங்கச் செல்லவோ கூட என்னால் நேரத்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை, அது கடினமாயுள்ளது, நான் மிகவும் பிசியாயிருக்கிறேன்" என்றேன். அவர், "ஓ, நீர் கடிதங்களையோ, ஏதோவொன்றையோ எடுத்துக் கொள்ள முடியும். முடியும். நீர் உம்முடைய மொழியில் மிக மோசமாக இருக்கிறீர். உமக்குத் தெரியும், நான் இன்றிரவு உம்மைக் கவனித்தேன், நீர், 'இப்பொழுது இன்றிரவில் இந்த போல்பிட் பக்கமாக கடந்து செல்லுகிற ஜனங்களே...' என்றீர்" என்று கூறினார். நான், "நல்லது, அதில் என்ன தவறு இருக்கிறது?" என்றேன். நான் தவறாகக் கூறினேன் என்பதே எனக்குத் தெரியாது. அவர், "நீர், புல்பிட் என்று கூறுவீரானால், ஜனங்கள் உம்மை இன்னும் அதிகமாகப் பாராட்டுவார்கள்" என்றார். அவர் ஒருவிதமாக சிறிது கடினமாகவே என்னுடைய காதைப் பிடித்து இழுத்தார், உங்களுக்குத் தெரியும். நான், "சகோதரனே, நான் உமக்கு ஒரு சிறு விடையை கூற விரும்பவில்லை, ஆனால் அந்த ஜனங்கள் நான் முன்சென்று சரியான விதமான ஜீவியத்திற்கு அவர்களை வழிகாட்டி, நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேனோ அதை நிகழச் செய்யும் காலம் வரை, நான் போல்பிட் என்று கூறுகிறேனா அல்லது புல்பிட் என்று கூறுகிறேனா என்று கவலைப்படுவதில்லை. அவர்கள் அறிய விரும்புவது அதுதான்" என்றேன். அது உண்மை. ஆம். 51. இப்பொழுது, ஆபிரகாம்... ஓ, என்னே! என்னால் அவனைக் காண முடிகிறது. வரிக்கு இடையே கவனியுங்கள். ஒருக்கால் நாளைப் பிற்பகலில், நாம் பேசிக் கொண்டிருக்கிற வரிகளுக்கிடைய உள்ளதைப் பிரசங்கிப்பேன். கவனியுங்கள். இப்பொழுது, தேவன் அங்கே ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணின போது, அவர் என்ன செய்தார்? ஆபிரகாமின் வித்தாயிருக்கிற ஒவ்வொரு நபருக்கும் அவர் செய்யப் போகிறதை காலத்துக்கு முன்பே அவர் ஆபிரகாமில் காண்பித்தார். அவர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது, சாராளுக்கு சரியாக 100 வயதாக இருந்தது, ஆபிரகாமோ மிகவும் வயது சென்றவனாக இருந்தான். இப்பொழுது, நாம் தொடங்குவதற்காக அதை நிறுத்தி விடுவோம், அவர்கள் இருவருமே, "வயது சென்று முதிர்ந்தவர்களாக" இருந்ததாக வேதாகமம் கூறுகிறது. சரி. ஏறக்குறைய ஆதியாகமம் 18வது அதிகாரம். 52.கவனியுங்கள். "வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்." தேவன் அங்கே நின்று, அவர்களை மீண்டுமாக ஒரு வாலிபனாகவும் வாலிப பெண்ணாகவும் மாற்றினார். அவர்கள் சென்ற அந்த இடத்தை நான் காண விரும்புகிறேன். அவர் அவர்களை மாற்றினார். என்னால் அதை வேதவாக்கியத்தின் மூலமாக நிரூபிக்க முடியும். அவர் ஆபிரகாமுக்கும், அவனுக்குப் பிறகு அவனுடைய எல்லா வித்துக்களுக்கும் அவர் செய்யப் போவதைக் காண்பிக்கும்படியாக அவர் அவர்களை மீண்டும் மாற்றினார். கவனியுங்கள். நீங்கள் பாருங்கள், நினைவுகூருங்கள், அம்மாவுக்கு கல்யாணம் ஆனது ஞாபகம் இருக்கு...நீங்கள் பாருங்கள், நாம் வளருகிறோம். நான் அன்றொரு நாள் மருத்துவரிடம் கேட்டேன். நான், டாக்டர் அவர்களே, நான் ஆகாரம் புசிக்கிற ஒவ்வொரு தடவையும் என்னுடைய ஜீவனை நான் புதுப்பித்துக் கொள்கிறேன் என்பதும், நான் புதிய இரத்த அணுக்களை எனக்கு அளிக்கிறேன் என்பதும் உண்மையா?" என்று கேட்டேன். அவர், "அது சரிதான், சங்கை அவர்களே" என்றார். நான், "அப்படியானால், நான் உம்மிடம் ஒரு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். என்னால் அதை விஞ்ஞானப்பூர்வமாக புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போது, நான் இப்பொழுது புசிக்கிற அதே வகையான ஆகாரத்தைத் தான் புசித்தேன், அப்பொழுது நான் ஒவ்வொரு தடவை புசிக்கிற போதும், நான் புதிய இரத்த அணுக்களை உருவாக்கிக் கொண்டு, திடகாத்திரமாகவும், இன்னும் அதிக சக்தி பெற்றுக் கொண்டேன்; மேலும் இப்பொழுதும் கூட சிறந்த ஆகாரத்தைத் தான் புசிக்கிறேன், (ஆனால்) எல்லா நேரமும் வயதாகவும் பெலவீனமாகவும் ஆகிறேனே? அதை எனக்கு விளக்கிக் கூறுங்கள். நீர் தண்ணீரை ஒரு கூஜாவிலிருந்து ஒரு கண்ணாடிக் குவளையில் ஊற்றுவீர்களானால், அது நிரம்பத் துவங்குகிறது, அதன்பிறகு திடீரென்று நீர் இன்னும் அதிகமாக ஊற்றத் தொடங்குகிறீர், அப்பொழுது அது இறங்கத் துவங்குகிறதே. இதை எனக்கு விளக்கிக் கூறுங்கள்" என்றேன். 53. அது தேவனுடைய வார்த்தையின் மூலமாக மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியாது. தேவன் கூறினார்! நீங்கள் ஒரு சிறு பிள்ளை பருவத்தில் இருந்து படிப்படியாக வளருகிறீர்கள், உங்களுடைய முதலாவது சிறிய செல் வளர ஆரம்பிக்கும் போது உங்களுக்கு ஏறக்குறைய 21 அல்லது 22 வயதாகும் மட்டுமாக, ஒருக்கால் உங்களுக்கு 25 வயதாகும் வரை அது வளருகிறது; நீங்கள் அப்போது தான் உங்களுடைய மிகச் சிறந்த நிலையில் இருக்கிறீர்கள். அந்தவிதமாகத்தான் தேவன் அந்த படத்தை வரைந்து வைத்தார். நீங்கள் கவனிக்கிற முதலாவது காரியம் என்னவென்றால், ஒரு நரைத்த தலைமுடி உள்ளே வருகிறது. தாயாரே, அந்த அழகான கண்கள் கீழாக சுருங்கத் துவங்குகிறது. அவர்கள் இன்றிரவு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களே, அங்கே பாருங்கள்; அவர்கள் வயது சென்றவர்களாகவும், வலுக்குறைந்தவர் களாகவும், தலை நரைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். கவலைப்பட வேண்டாம், அதுதான் மரணம். ஏறக்குறைய 25 வயதான பிறகு, மரணமானது உங்கள் மேல் வர ஆரம்பிக்கிறது. நீங்கள் பலவீனராகத் துவங்கி, உங்களுடைய இரத்த ஓட்டமானது கீழான நிலைக்கு போகத் துவங்குகிறது. நீங்கள் என்ன செய்தாலும் காரியமில்லை, நீங்கள் எவ்வளவு புசித்தாலும், நீங்கள் எவ்வளவு விஞ்ஞானப் பூர்வமான காரியத்தை செய்தாலும், அது பொருட்டல்ல, நீங்கள் சரியாக கீழே தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் தேவன் அவ்விதமாகக் கூறினார். 54. இப்பொழுது. சாராளும் ஆபிரகாமும் அவர்களுக்கு 100 வயதாகும் வரைக்குமாக அவர்களும் அந்தவிதமாக கீழான நிலைக்குத் தான் வந்திருந்தார்கள். அடுத்த நாள் காலையில் ஆபிரகாம் தூக்கத்தை விட்டு விழித்தெழுந்து, "இதோ பார், அன்பே.." என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. சாராள் வாலிப பெண்ணாக இருந்த போது, அவள் ஒரு அழகான பெண்ணாக இருந்தாள் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் அவன், "இதோ பார், அன்பே, என்னவென்று உனக்குத் தெரியுமா? உன்னுடைய தலைமயிர் மீண்டுமாக கறுப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த இரவு முதற்கொண்டு உன்னுடைய முகத்தின் கீழிருந்து எல்லா தோல் சுருக்கங்களும் அகன்று (மறைந்து) போய்க் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன்" என்றான். "நல்லது," அவளும், "வயதானவரே, உம்முடைய தோள்களும் நேராகிக் கொண்டிருப்பதை நான் கவனிக்கிறேன்" என்று கூறினாள். ஓ, என்னே! ஒரு சில மணி நேரங்கள் கழித்து, அவன் ஒரு பக்கெட் தண்ணீர் அல்லது ஏதோவொன்றை எடுக்க வெளியே செல்கிறான், ஒருக்கால் அவன் திரும்பி வந்து, "சாராளே, நீ அழகானவளாய் காணப்படுகிறாய்!" என்றான். அவளும், "ஏன், ஆபிரகாமே, நீரும் நான் உம்மை விவாகம் செய்த போது இருந்ததைப் போன்று காணப்படுகிறீரே" என்றாள். அவர் அவர்களை பழைய நிலைக்கு மாற்றி விட்டார். 55. "ஓ," நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, அது முட்டாள்தனம்" என்று கூறலாம். நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள், இப்பொழுது, அப்படியே ஒரு நிமிடம், பாருங்கள்? கவனியுங்கள். அவர்கள் அப்பொழுதிலிருந்து கேராருக்கு வழியெல்லாம் பிரயாணம் செய்து சென்றார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அதை உங்கள் வரைபடத்தில் அளந்து பாருங்கள்; அது ஏறக்குறைய 300 மைல்கள் தூரம். அது ஒரு வயதான பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஒரு மிகப்பெரிய பிரயாணம், இல்லையா? உஷ்ணமான பாலைவனங்கள் வழியாக அவர்கள் கேராருக்குப் போனார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அங்கு சென்று சேர்ந்த போது, அபிமெலேக்கு என்னும் பெயருடைய பெலிஸ்திய இராஜா ஒரு இனிய இருதயத்தை தேடிக் கொண்டிருந்தான். அந்த அழகான எல்லா பெலிஸ்திய வாலிப பெண்கள் சுற்றிலுமிருந்த போதிலும், ஒரு சிறு தொப்பியுடனும், சிறு வளைந்த தோள்களில் ஒரு கைத்தடியைப் பிடித்துக் கொண்டுமிருந்த இந்த வயதான பாட்டியை அவன் கண்ட போதா அவன், "நான் இவளுக்காகத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் எனக்கு வேண்டும்" என்றான். அவன் சாராளோடு காதலில் விழுந்தான். அது வேதவாக்கியம் தானா? ஆமென்! என்ன சம்பவித்தது? அவள் மீண்டும் ஒரு அழகான வாலிப பெண்ணாக மாறினாள். ஆ மென்! 56. கவனியுங்கள். நண்பர்களே, அது இதை நிரூபிக்கிறதே. தேவன் அவளுக்கு ஒரு குழந்தையை கொடுக்கப் போவதாய் இருந்து, அவளுக்கு 100 வயதாகியிருக்குமானால், அவர் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால், அந்த இருதயத்திற்கு புத்துயிர் அளிப்பது தான், அல்லது அவளால் அந்தக் குழந்தையைக் கொண்டிருக்க முடியாது. நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது வயது வந்தவர்களாகிய உங்களுக்குத் தெரியும். அவள் மிகவுமாக பெலவீனமாயிருந்தாள். இப்பொழுது, அவர் செய்ய வேண்டியதாயிருந்த மற்றொரு காரியம் என்னவென்றால், பாலுக்கான இரத்த நாளங்களை அவர் உருவாக்க வேண்டியதாயிருந்தது. அந்த நாட்களில் இந்த ஆரோக்கிய சுகாதார பாட்டில்கள் அவர்களிடம் கிடையாது. அப்போது ஸ்திரீகள் புகைபிடிக்கவில்லை, அதுதான் இப்பொழுது அவர்கள் இந்த உடல் சார்ந்த தொல்லைகளைக் கொண்டிருப்பதற்கான காரணமாகும். அந்த தாய் அவள் வளர்க்க வேண்டிய விதத்தில் அவளுடைய குழந்தையை வளர்த்தாள். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அங்கே அவர் இரத்த நாளங்களை சிருஷ்டிக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவைகள் உலர்ந்து போயிருந்தன. அவளுடைய கற்பப்பையை கருத்தரிக்க வைக்க அவர் ஒரு அற்புதத்தை நடப்பிக்க வேண்டியதாய் இருந்தது, ஏனென்றால் அது மரித்துப் போயிருந்தது. அது உண்மை தானா? (சபையோர், 'ஆமென்" என்கின்றனர் ஆசிரியர்.) தேவன் காரியங்களை பழுது பார்த்து சரிசெய்வதில்லை, அவர் அப்படியே ஒரு புத்தம் புதிய பெண்ணாக அவளை ஆக்கி விட்டார். ஆமென்! அல்லேலூயா! அவருடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக் கொள்ளும் ஆபிரகாமுடைய ஒவ்வொரு குமாரத்திக்கும், ஆபிரகாமுடைய ஒவ்வொரு குமாரனுக்கும் அவர் அதைத்தான் செய்யப் போகிறார். நிச்சயமாகவே அவர் அதைச் செய்வார். இது அதை நிரூபிக்கிறது. 57.சாராள் எந்தப் பிரச்சினையுமே இல்லாமல் அந்தக் குழந்தையைப் பெற்றாள் (அது உண்மை), அவனை வளர்க்கவும் செய்தாள். அவனுக்கு ஏறக்குறைய 45 வயது ஆவது வரைக்குமாக அவள் அநேக வருடங்கள் ஜீவித்தாள். சாராள் மரித்த பிறகு, இப்பொழுது, ஆபிரகாமைக் கவனியுங்கள், அவனுடைய சரீரம் பழைய நிலைக்கு மாறியிருந்தது என்பதை காண்பிக்கும்படியாக அவன் வேறொரு பெண்ணை விவாகம் செய்து, அவனுக்கு குமாரத்திகளைத் தவிர ஒன்பது குமாரர்கள் இருந்தார்கள். மகிமை! அதுதான் நம்முடைய தேவன். அதைத் தான் அவர் செய்தார். ஏதோவொரு நாளில், இயேசு வரும் போது, அவர் ஒவ்வொரு விசுவாசிக்கும் அதையே செய்வார். ஒவ்வொரு தோல் சுருக்கமும், ஒவ்வொரு நரைத்த தலைமயிரும், வயதாகி வாடி வதங்கிப் போன ஒவ்வொரு கரமும், மற்ற யாவுமே மறைந்து போய், அவரோடு என்றென்றுமாய் வாழும்படியாக. ஏதோவொரு நாளில், தேவன் அதைத் திரும்பவுமாக அதனுடைய அழகில், அதனுடைய சிறப்பான நிலையில் அதைக் கொண்டு வருவார். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நான் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்துள்ளதற்காக நான் இன்றிரவு மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகிமையான நாட்களில் ஏதோ ஒன்றில், அவர் இயேசுவை அனுப்புவார். "கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அங்கே என்றென்றுமாய் இருப்போம் (1தெச. 4:16,17)." அவருடைய அழகிலும், ஆரோக்கியத்தின் ஒளியிலும், வாலிபத்திலும் நாம் என்றென்றுமாக அவரோடு அரசாளுவோம், ஏனென்றால் நீங்கள் அவருடைய குமாரனின் மேல் விசுவாசம் கொண்டீர்கள், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். ஆமென். 58. ஓ, என்னே! நான் இன்னும் என்னுடைய இன்னும் என்னுடைய பாடத்திற்கு வரவில்லை. ஒருக்கால், நாம் அதை அப்படியே விட்டு விட வேண்டியதாய் இருக்கும், நான் உங்களைப் பிடித்து வைக்க விரும்பவில்லை, நாளைய தினம் ஞாயிற்றுக் கிழமையாய் இருக்கிறது. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். அவர் இன்றிரவும் இங்கேயிருக்கிறார். அவர் தம்முடைய ஆள்த்துவத்திலும் (person), அவருடைய வல்லமையிலும் இருக்கிறார். வேதாகமம், எபிரெயர் 13:8ல், "இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று கூறுகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், அவர், நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், நான் செய்கிற காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய காரியங்களையும் செய்வீர்கள் (யோவான் 14:12)" என்று கூறுவாரானால், அவர் தமது வார்த்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறார். அது சரியா? 59. "கொஞ்ச காலத்திலே உலகம்" சபை உலகமும் மற்ற உலகத்தாரும் "என்னைக் காணாது, ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான்" தனிப்பட்ட பிரதிபெயர், "உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே இருப்பேன். நான் செய்கிற காரியங்களை நீங்களும் செய்வீர்கள். நான் திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குக் கொடுக்கப்படும் (யோவான் 15:7)" எவ்வளவு அருமையாய் உள்ளது. அவர் திராட்சச்செடியாகவும், பூமியிலிருந்து முதலாவது உயிர்த்தெழுந்தவராக ஆகிறார். நாம் அவரிடத்திலிருந்து வெளியே வருகிற கொடிகளாய் இருக்கிறோம். திராட்சச்செடி கனிகளைக் கொடுப்பதில்லை; கொடிகள் தான் கனிகொடுக்கின்றன. திராட்சச் செடி அதற்குள் ஒரு குறிப்பிட்ட வகையான ஜீவனைக் கொண்டிருக்கிறது, அது அம்மாதிரியான கனியைக் கொடுத்தாக வேண்டும். அப்போது இயேசு சுகமளிப்பவராக இருந்தாரானால், அவர் அப்போது எதுவாக இருந்திருந்தாலும், அவர் அப்போது இருந்தது போலவே இன்றும் சரியாக இருந்தாக வேண்டும். எனவே, நான் என்னுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன். நாம் ஜெபிப்போம். 60. எங்கள் பரலோகப் பிதாவே, அதை அறிந்து கொள்ளும் போது, நாங்கள் உம்மைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, மணித்துளிகள் மிகவேகமாக கடந்து சென்று விடுகின்றன, ஏனென்றால் நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நீர் தான் எங்களை மீட்டுக் கொண்டீர். இயேசு இன்னும் ஜீவிக்கிறார் என்றும் அரசாளுகிறார் என்றும் நாங்கள் அறிந்து கொள்வதற்காக இன்றிரவு சந்தோஷமாயிருக்கிறோம். அவருடைய பரிசுத்த ஆவியானவர் இங்கே சகோதரர்கள் மத்தியிலும், சகோதரிகள் மத்தியிலும் இருந்து, அவருடைய வார்த்தையின் மூலமாகவும், அவருடைய பிரசன்னத்தின் மூலமாகவும் எங்களை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறீர். அன்புள்ள தேவனே, இன்னும் இராஜ்யத்திற்குள் இல்லாத யாராவது ஒருவர் இங்கிருக்கலாம். அவர்கள் இழக்கப்பட்டுப் போக நாங்கள் விரும்பவில்லை. கடலில் கடைசி தடவையாக வலை வீசப்பட்டு, கடைசி மீனானது எஜமானின் உபயோகத்துக்காக கொண்டு வரப்படும் போது, கதவு அடைபடும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். பிதாவே, நீர் இடைபட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் இன்றிரவு இங்கே இருக்கிறாரா? அவ்வாறு இருப்பார்களானால், அவர்கள் உமது வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொண்டு, யோனா செய்தது போன்று எந்த தடையையும், எந்த தடங்கலையும், அவர்களைச் சுற்றியிருக்கிற எதையும் காண்பதற்கு மறுத்து விடுவார்களாக. அவர்கள் உம்மையே நோக்கிப் பார்த்து, இப்பொழுதே விசுவாசிப்பார்களாக. நீர் உமது வார்த்தையில், "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்" என்று கூறியிருக்கிறீர். அதை அருளும், பிதாவே. 61. நாங்கள் எங்கள் தலைகளை வணங்கியிருக்கையில், நான் இன்றிரவு வியப்படைகிறேன், கிறிஸ்தவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிற இந்நேரத்தில், நாங்கள் இந்த சபையோரிடத்தில், (அவர்களை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய பாவியான நண்பனே, ஏதோவொன்று உங்களுக்காக மகத்தானதாய் இருக்கிறது என்பதை நான் அறிவேன், என்னுடைய இழக்கப்பட்ட சகோதரனே, ஒழுக்கமற்ற என்னுடைய சகோதரியே, நீ இருக்கிற நிலையிலேயே நீ இருக்க வேண்டியதில்லை. நீ தேவனை சேவிக்க வேண்டுமென்றே அவர் உன்னை உண்டாக்கினார். பாவம் தான் உன்னை இந்தவிதமாய் சீர்குலைத்துப் போட்டு விட்டது. இன்றிரவு தான் உன்னுடைய கடைசி இரவாக இருக்குமானால், என்னவாயிருக்கும்? உள்ளே வருகிற இருதய செயலிழப்புகளையும், எல்லா வகையான கோளாறுகளையும் கவனியுங்கள். அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் இன்றிரவு தேவனை சந்திக்கப் போய் விடுவார்கள். நீயும் அந்த அட்டவணையில் ஒருவனாக எண்ணப்படுவாயானால், என்னவாயிருக்கும்? நீ போகும் நேரத்தை அறிய மாட்டாய். ஆனால் இப்பொழுதே நீ நினைவுகூரப்பட விரும்பி, 'கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்" என்று ஒரு சிறு ஜெபமாக கூறிக் கொண்டிருக்கிறீர்கள். 62. இப்பொழுது, உள்ளே இருக்கிறவர்களே, உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள், அதை உங்கள் சகோதரனாகிய என்னிடமல்ல, ஆனால் கர்த்தரை நோக்கி உயர்த்துங்கள், அப்படியானால் நானும் கூட உங்கள் கரத்தைப் பார்த்தாக வேண்டும், நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? இங்கு எங்கோ கீழ்த்தளத்தில் இருக்கிறவர்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது நல்லது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னையும் உன்னையும் ஆசீர்வதிப்பாராக. அது அற்புதமானது. சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சிறுவனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அங்கே பின்னாலிருக்கும் என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது நல்லது. வேறு யாராவது? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். "என்னை நினைவுகூரும்" என்று கூறுங்கள். இங்கேயிருக்கும் சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, இங்கே கீழ்த்தளத்தில் இருக்கிற வேறு யாராவது? சுவற்றின் பக்கங்களைச் சுற்றிலும், நான் உம்மைக் கண்டேன், ஐயா, நீர் அந்தப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறீர். வேறு யாராவது? தரையில் உட்கார்ந்திருக்கிற உங்களில் சிலரும் கூட, நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? நீங்கள் தேவனோடு சரியாயில்லை என்று உங்களுக்குத் தெரியும், நீங்கள் ஜெபத்தில் நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது சரி, சகோதரியே, அவளை சுட்டிக் காண்பிப்பதற்காக உனக்கு நன்றி. மேலே பால்கனியிலும், அங்கே மேலே அந்தப் பெட்டி இருக்கைகளைச் சுற்றிலுமிருக்கிற எங்காவது, ஏதோவொரு இடத்திலாவது, உங்கள் கரத்தை உயர்த்தி... என்று கூறுவீர்களா. 63. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, அங்கே பின்னாலிருக்கிற உம்மை நான் காண்கிறேன், தேவன் உம்மோடு இருப்பாராக, அது மிகப் பெரிய... ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, உம்முடைய கரத்தை நான் காண்கிறேன். சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் உன்னைக் காண்கிறேன், மிகப் பெரிய... ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே மேலேயுள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆமாம், தேவன் உம்மோடு இருப்பாராக. அது நீங்கள் எப்பொழுதும் செய்த காரியங்களிலேயே மிகப்பெரிய காரியமாகும். "சகோதரன் பிரன்ஹாமே, அவர்கள் தங்களுடைய கரத்தை உயர்த்தும் போது, அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?" என்று கேட்கலாம். நல்லது, இயேசு, "என்னை அறிக்கை பண்ணுகிறவனை நானும் அறிக்கை பண்ணுவேன். என் வசனங்களைக் கேட்கிறவனை" என்று கூறினார். என்னுடைய தாழ்மையான வழியில் நான் அதைக் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன், "என்னை அனுப்பினவராகிய அவர் மேல் விசுவாசமாயிருக்கிறவன்," இப்பொழுது, "கொண்டிருப்பான்" என்றல்ல, ஆனால் "கொண்டிருக்கிறான்," கொண்டிருக்கிறான் என்பது நிகழ் காலமாகும், "அவன் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறான், அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவதில்லை. 64. உங்கள் கரங்களை உயர்த்தின ஒரு டஜன் அல்லது அதற்கும் அதிகமானோருக்கு என்ன சமபவத்திருக்கிறது? நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு தப்பி விட்டீர்கள். இயேசு, "நீங்கள் ஒருபோதும் நியாயத்தீர்ப்புக்கு உட்பட மாட்டீர்கள், ஆனால் நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் தேவனுடைய ஒரேபேறான குமாரனில் மாத்திரமே விசுவாசம் வைத்திருக்கிறீர்கள்" என்றார். அங்கே வேறு யாராவது இருக்கிறீர்களா? உங்கள் கரத்தை உயர்த்தியிராத வேறு யாராவது இருக்கிறீர்களா? சிறிய சீமட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உங்களைக் காண்கிறேன். ஓ, நான் மீண்டுமாக கேட்பதை வெறுக்கிறேன், ஆனால் உங்களுக்குத் தெரியும், ஏதோவொரு நாளில் நான் அங்கே மேலே உங்களைச் சந்திக்கும் போது, நீங்கள் ஒருக்கால், "சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அதை ஒரு முறை கூட கூறியிருப்பீரென்றால், நான் என்னுடைய கரத்தை உயர்த்த ஆயத்தமாயிருந்திருப்பேன்; சாத்தான் என் அருகில் நின்று கொண்டு, அதைச் செய்யாதே என்று என்னிடம் கூறிக் கொண்டிருந்தான், ஆனால் நான் விசுவாசிக்கிறேன், நீர் அப்படியே ஒருமுறை கூட சொன்னீர். ஓ, நான் நீர்... அதைக் கூற விரும்பினேன்" என்று கூறுலாம். ஓ சகோதரன் பிரன்ஹாமே, நீர் அதைக் கூறினதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், நான் எனது கரத்தை உயர்த்தி, கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டேன், நான் அதைச் செய்த காரணத்தினால் நான் இன்று இங்கே இருக்கிறேன்." 65. நீங்கள் அந்தகாரத்திற்குள் அகன்று போவதை நான் காண விரும்பவில்லை. அந்த சிறிய சீமாட்டி அப்போது அதை தவற விட்டிருந்தால், என்னவாகியிருக்கும்? தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதுவுமே பிரிக்க முடியாது. நீங்கள் உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து, ஒரு உண்மையான, உத்தமமான இருதயத்தின் மீதிலிருந்து அந்தக் கரத்தை மேலே உயர்த்தினீர்கள், நீங்கள் தேவனுடைய வார்த்தையின்படி, மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டு விட்டீர்கள். என்னால் தொடர்ந்து செய்யக்கூடிய ஒரே காரியம் அவருடைய வார்த்தையின் மூலம் மட்டுமே. அங்கே தான் அவருடைய வார்த்தையின் மேல் தான் என்னுடைய விசுவாசம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. நான் முடிப்பதற்கு சற்று முன்பு, அங்கே வேறு யாராகிலும் உண்டா? இப்பொழுது, நான் ஜெப வரிசையைத் துவங்குகிறேன். சரி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது அருமையானது, அது நல்லது. இன்னும் பால்கனியில் யாராவது இருக்கிறீர்களா, அங்கே மேலே எங்காகிலும் யாராவது இருக்கிறீர்களா, ஒருக்கால் நீங்கள்... என்னுடைய அன்பு சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் உம்முடைய... ஐக் காண்கிறேன். அங்கே மேலேயுள்ள என்னுடைய சகோதரியும் கூட, நான் உன்னைக் காண்கிறேன். அது நல்லது. இப்பொழுது, நாம் ஜெபம் செய்வோமா? 66.பரலோகப் பிதாவே, இன்றிரவு மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன், ஆத்துமாக்கள் இராஜ்யத்திற்குள் பிறந்திருக்கிறார்கள். அப்படியானால், கர்ததாவே, நீர் நிச்சயமாகவே இன்றிரவில் வியாதியஸ்தரை சுகமாக்கு வதற்கான கிருபையை எங்களுக்குக் காண்பிப்பீர். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை சரியாக ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் எடுத்துச் சென்று, ஒவ்வொரு ஆத்துமாவையும் மன்னாவினால் போஷிக்கிறார். இந்த ஜனங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில், தேவ தூதர்கள் அவர்களைச் சூழ பாளையமிறங்கியிருக்கிறார்கள். சாத்தானும் அருகில் அமர்ந்து, "நீ அதைச் செய்யாதே, நீ அதைச் செய்து விடாதே" என்று கூறிக் கொண்டிருக்கிறான். அந்தத் தூதனானவர், "இதுவே உன்னுடைய வேளை" என்று கூறிக் கொண்டிருக்கிறார். பிதாவே, அவர்கள் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியதாய் இருந்தது, அவர்கள் அதைக் குறித்து ஏதோவொன்றை செய்ய வேண்டியதாய் இருந்தது, அவர்கள், ஆமாம், சாத்தானே, நான் உன்னோடு வெளியே வந்து விடுகிறேன்" என்றோ, அல்லது, "தேவனே, நான் உம்மை ஏற்றுக் கொள்வேன்" என்றோ கூற வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் கரத்தை மேலே உயர்த்தி, "தேவனே, நான் உம்மை ஏற்றுக் கொள்வேன்" என்று கூறியிருக்கிறார்கள். மேலும், பிதாவே, நீர், "பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். (யோவான் 6:37) அவர்களில் யாரும் இழக்கப்பட்டுப் போவதில்லை, அவர்களை என் கையிலிருந்து பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது" என்று கூறினீர். நாங்கள் அதைக் குறித்து மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். இப்பொழுதும், பிதாவே, நீர் பரிசுத்த ஆவியின் மூலமாக அவர்களை விசுவாசிகளின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ண வேண்டுமென்று நான் இன்றிரவு ஜெபிக்கிறேன், அவர்கள் இராஜ்யத்தில் வேலைக்காரர்களாய் ஆவார்களாக. நாங்கள் இதை உம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 67. என்னுடைய குரல் மிகவும் கரகரப்பாகியிருக்கிறது, சளியின் காரணமாக அல்ல, ஆனால் அதிகம் பேசினதின் காரணமாக அவ்வாறு இருக்கிறது, தொடர்ந்து நான்கு மாதங்களாக பேசிக் கொண்டு வருகிறேன். நாங்கள் இங்கிருந்து அலாஸ்காவுக்குப் போகிறோம். இப்பொழுது, அன்புக்குரிய நண்பர்களே, ஒருக்கால் நாளைக்கு, நான் என்னுடைய பாடத்தை முடிப்பேன் அல்லது ஒரு புதிய பாடத்தை பேசி விட்டு, நான் போகையில் பிரசங்கிமார்கள் அதை முடித்து வைக்கும்படி செய்வேன். ஆனால், நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவரை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, எல்லா பயமும் போய் விட்டதா? கவனியுங்கள், நீங்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறீர்கள். இங்கே, இன்றிரவு எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள்? இருக்கிறீர்கள்? இப்பொழுது, நீங்கள் எல்லாருமே கிறிஸ்தவர்கள் தான். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டிராத அந்த கரங்களைப் பாருங்கள், இப்பொழுது அவைகள் மேலே உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு, தேவனுக்கு ஸ்தோத்திரம்! இப்பொழுது, நீங்களும் கிறிஸ்தவர்கள் தான். இப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஆபிரகாமின் வித்தாயிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் சபையோடு பாதுகாப்பாக இருக்கிறீர்கள். "எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்மளாக்கியிருக்கிறார்" என்று வேதாகமம் கூறியுள்ளது. அது சரிதானா? அவரால் அழைக்கப்பட்டவர்கள் மறுமொழி கூறினர், அவர் அவர்களை நீதிமான்களாக்கினார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியிருக்கிறார். நீங்கள் மகிமைக்குப் போய் சேரும் போது, உங்களுடைய இருப்பிடம் மகிமையில் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அது அற்புதம் அல்லவா? அதைக் குறித்து எந்த பயமும் இல்லை. இதுவோ, அதுவோ அல்லது மற்றதோ அல்ல. தேவனுடைய ஆட்டுக்குட்டியாகிய இயேசு உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்டது போல அவ்வளவாக நீங்கள் ஏற்கனவே தேவனுடைய பார்வையில், மகிமைப்படுத்தப்பட்டு விட்டீர்கள். தேவன் அதை உரைத்த போது, அது அவ்வண்ணமாகவே இருக்க வேண்டியிருந்தது. 68. கவனியுங்கள், உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, தேவன் உங்களை ஏற்றுக் கொண்ட போது, ஒரு பாவியாக இருந்த நீங்கள் அவருடைய வார்த்தையைக் கொண்டு அவர் அதை ஏற்றுக் கொண்டார், நீங்கள் சாட்சியாய் இருப்பீர்களானால், ஏன், அவர் உங்களுக்காக சாட்சியாய் இருப்பார், அவரால் ஒருபோதும் அவருடைய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது. ஆமென். இப்பொழுது, உங்களால் உங்கள் ஜீவியத்தை தவறாக நடத்தி, பின்மாற்றமடைந்து, அகன்று போய், வாலிப வயதிலேயே இந்த உலகத்தில் மரிக்கலாம், உங்களுக்கு அநேக காரியங்கள் சம்பவிக்கலாம், ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையைத் திரும்பப் பெறுவாரா, அவரால் அவ்வாறு செய்ய முடியாது. "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல்," ஒரு போதும் கிடையாது, "மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." அதைத்தான் பரிசுத்த யோவான் 5:24ல், அவர் கூறினார். அது அற்புதமாய் இல்லையா? இப்பொழுது, இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதும் வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அதே வார்த்தைகள் தான். 69. மனந்திரும்பின வாலிப வயதுடையவர்களாகிய உங்களிடமும், புதிதாக வந்திருப்பவர்களாகிய உங்களிடமும் நான் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். இயேசு மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்து, அவர் மாறாதவராய் இருப்பாரானால்... அவர் மாறாதவர் என்று வேதம் கூறுகிறது. அவர் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், "ஆமென்" என்று கூறுங்கள். ஏனென்றால் வேதம் அவ்வாறு கூறுகிறது. அப்படியானால் அவர் எப்படி மாறாதவராய் இருக்கிறார்? அவர் அடிப்படை சத்தியத்தில் மாறாதவராய் இருக்க வேண்டும்; அவர் வல்லமையில் மாறாதவராய் இருக்க வேண்டும்; அவர் கிரியைகளில் மாறாதவராய் இருக்க வேண்டும்; அவர் மனப்பான்மையில் மாறாதவராய் இருக்க வேண்டும்; அவர் அப்பொழுது ஒவ்வொரு விதத்திலும் மாறாதவராய் இருப்பாரானால், அவர் இப்பொழுதும் அதேவிதமாகவே இருக்க வேண்டும். அவர் அதேவிதத்தில் தம்மைத்தாமே வெளிப்படுத்த வேண்டியவராய் இருக்கிறார், அவர் அதைச் செய்வார். அவர் அதைச் செய்வாரென்று வாக்குப்பண்ணியுள்ளார். இப்பொழுது, இயேசு தாம் ஒரு சுகமளிப்பவர் என்று கூறினாரா? இல்லை. "கிரியைகளைச் செய்வது நானல்ல, என்னிடத்தில் வாசமாயிருக்கிற என் பிதாவானவரே கிரியைகளைச் செய்கிறார்" என்றார். 70. பரிசுத்த யோவான் 19ல், அவர் பெதஸ்தா குளத்தினூடாக கடந்து சென்று போது... இன்னும் சரியாகச் சொன்னால், பரிசுத்த யோவான் 5:19, அந்தக் குளத்தினூடாக கடந்து சென்று போது, அந்த ஆயிரக்கணக்கான முடமான ஜனங்களும், சூம்பின உறுப்புடையவர்களும் அங்கே படுத்துக் கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவரையும் அவர் சுகமாக்கவேயில்லை; அவர் போய் ஒரு படுக்கையில் (pallet) படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டு பிடித்தார், கர்த்தர் அவரிடம் காண்பித்திருந்தார்... அல்லது அது எங்கேயிருந்தது என்பதை தேவன் அவருக்குக் காண்பித்திருந்தார், அவர் அம்மனிதனை சுகமாக்கி விட்டு, மற்றவர்களை விட்டு விட்டு நடந்து சென்று விட்டார். யூதர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அவர், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதா கிரியை செய்து வருகிறார், நானும் இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறேன்" என்றார். 71. என்ன செய்ய வேண்டுமென்று பிதா அவருக்கு காண்பிக்கும் வரை அவர் எதையும் செய்யவில்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். நோக்கம் ஏதுமின்றி தான் செய்ய விரும்புகிற எதையும் செய்யக்கூடிய எந்த தீர்க்கதரிசியாவது, எந்த மனிதனாவது, எந்தக் காலத்திலாவது மனித மாம்சத்தில் இருக்கவேயில்லை, அல்லது ஒருபோதும் இருக்கப் போவதில்லை. கர்த்தர் அவனுக்கு கொடுக்கிற தரிசனத்தின்படியே ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் மற்ற யாவற்றிற்கும் அது எப்போதுமே வெளிப்படுத்தப்பட்டது. அது முற்றிலும் உண்மையாகும். அவன்... என்று நினைத்தால். இயேசு, "நான் எதையும் செய்வதில்லை" என்று கூறினார். இப்பொழுது, அவரால் பொய் சொல்ல முடியாது, அவர் தேவனாயிருக்கிறார். அவர் அங்கே பொய் சொல்லியிருப்பாரானால், அவர் மற்ற எந்தவிடத்திலும் பொய் சொல்லியிருப்பார், பாருங்கள். எனக்கு அதெல்லாம் சத்தியமாயிருக்கிறது, அல்லது அது எல்லாமே தவறாய் இருக்கிறது. இப்பொழுது, அவர், "நான் செய்கிற கிரியைகளை... என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்" என்றார். அவருடைய உயிர்த்தெழுதலின் வெளிப்பாட்டில் உலகம் அவரைக் காணும் மேலும் நான் அதை விசுவாசிக்கிறேன், அவர் இன்றிரவு வந்து, அதைச் செய்வாரானால், அது நம் எல்லாரையும் சந்தோஷமடையச் செய்து, அவருடைய நன்மையில் நம்மைக் களிகூரச் செய்யும். 72. இப்பொழுது, பரலோகப் பிதாவே, நாங்கள் எங்களையே உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம், குறிப்பாக மனந்திரும்பியுள்ள இந்த வாலிப பிள்ளைகளுக்காக எங்களையே உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவனே, அவர்கள் தங்களுடைய இரட்சகரை அறிந்து கொள்ளும்படி செய்வதற்காக, நீர் இன்றிரவு அவர்களுடைய இருதயங்களை சிலிர்க்கும்படி செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், அவர் அவர்களுடைய இருதயத்தில் உயிர்த்தெழுதலாய் இருக்கிறார் என்றும், அவர்கள் மரணத்தை விட்டு ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் என்றும் சற்று முன்பு அவர்களுக்கு சாட்சி பகர்ந்திருக்கிறீர். இப்பொழுதும், பிதாவே, நீர் தாமே உம்மை இங்கே காணக்கூடிய விதத்தில் காண்பித்து, நீர் ஜீவிக்கிறவர் என்றும், உயிர்த்தெழுந்த தேவன் என்றும் இந்த சபையோருக்கு நிரூபிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்; எங்களுக்கு அது தேவை என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் அது நிச்சயமாக உம்முடைய வார்த்தையை நிறைவேற்றியாக வேண்டும் என்ற காரணத் தினால் அதைச் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறோம். தேவனுடைய வார்த்தை நிச்சயமாக நிறைவேறியாக வேண்டும் என்பதற்காகவே நீர் வந்தீர். இப்பொழுது, தேவனுடைய வார்த்தை நிறைவேறியாக வேண்டும் என்பதற்காகவே நீர் பரிசுத்த ஆவியை அனுப்பிக் கொண்டிருக்கிறீர். அது கிழக்கத்திய தேசத்தில் யூதர்கள் மூலமாக நிறைவேறியது, இப்பொழுதோ மேற்கத்திய தேசத்தில் புறஜாதிகள் மூலமாக அது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. 73. இப்பொழுதும், தேவனே, நீர் கூறியிருக்கிறீர்..தீர்க்கதரிசி, "ஒரு நாள் உண்டு, அது இரவுமல்ல, பகலுமல்ல, ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் (சகரியா 14:7)" என்று கூறினான். இப்பொழுது, சாயங்கால வெளிச்சம் வந்திருக்கிறது; பெந்தெகோஸ்தேவில் யூதனின் மேல் பிரகாசித்த அதே வெளிச்சமே, ஒன்றாக பின்மாரி மழையின் மூலமும் முன்மாரி மழையின் மூலமும், இந்தக் கடைசி நாட்களில் பறஜாதி மேலும் பிரகாசித்திருக்கிறது. பிதாவே, இன்றிரவில் உம்முடைய ஜனங்களை ஆசீர்வதியும். இப்பொழுது, நான் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புவிக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் உமது மகிமைக்காக இந்த ஜனங்களையும் உம்முடைய ஊழியக் காரர்களையும் உபயோகிப்பாராக, இயேசுவின் நாமத்தில், ஆமென். இந்தக் கூட்டங்களில் இதற்கு முன்பு எத்தனை பேர் இருந்திருக்கிறீர்? உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். புதிதாக வந்திருப்பவர்கள் எத்தனை பேர்? உங்கள் கரங்களைப் பார்ப்போம். ஓ, அது அவ்வளவு பரிதாபகரமான ஒன்றாயுள்ளதே, பாருங்கள், வெறுமனே ஒரு இரவுக்காக விரைந்தோடி வந்திருக்கிறார்கள் நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்: என்னுடைய பாகத்தில் என்னால் தங்கியிருக்க முடியாது. ஆனால், ஏன், அப்படியானால், நாம் ஜெப வரிசையை அழைப்போம், பிறகு சிறிது நேரம் புதிதாக வந்திருப்பவர்களிடம் பேசலாம். அவர்கள் ஜெப அட்டைகளை விநியோகித்திருக்கிறார்களா? ஓ, நூறு ஜெப அட்டைகளா? 74. சரி. நூறு ஜெப அட்டைகளைக் கொடுத்திருக்கிறார்கள். நாம் எங்கே இருந்தோம்? நாம்... அங்கே எண் 1 உள்ளதா? நாம் பார்க்கலாம். ஜெப அட்டை எண் 1-ஐ யாராவது வைத்திருக்கிறீர்களா? நாம் பார்க்கலாம். சரி, அது நல்லது, அப்படியானால் நாம் அங்கிருந்து துவங்கலாம். இங்கே வாருங்கள். எண் 1, எண் 2, எண் 3, எண் 4, எண் 5. நான் அவர்களைக் கண்டால், நாம் பார்க்கலாம். ஒன்று, இரண்டு, மூன்று, எண் 4. யாரிடம் ஜெப அட்டை எண் 4 உள்ளது? நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? ஒருக்கால் எழும்ப முடியாத யாராவது ஒருவராக இருக்கலாம். இங்கே கீழே இருப்பவர்களைக் குறித்து என்ன? யாராவது ஒருவ... உங்களால் எழும்ப முடியவில்லை என்றால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அப்பொழுது உங்களை மேலே கொண்டு வர ஒரு உதவியாளர் வந்து உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பக்கத்தில் இருப்பவரின் ஜெப அட்டையைக் கவனித்துப் பாருங்கள், அது ஒருக்கால் செவிடான யாராகவோ, கேட்க முடியாத யாராகவோ இருக்கலாம், அவர்கள் வரிசையில் தங்கள் இடத்தை தவற விட்டிருக்கலாம். சரி. எண் 3, எண் 4, ஜெப அட்டை எண் 4ஐ யாராவது வைத்திருக்கிறீர்களா? நீங்களா... என்னை மன்னியுங்கள், சகோதரியே. எண் 5, எண் 5ஐ வைத்திருப்பது யார்? ஜெப அட்டை எண் 5. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? அது அங்கே பால்கனியில் இருப்பவரா? அது... (ஒலிநாடாவில் காலியிடம் ஆசிரியர்.) 75. நல்லது, இதுவரையிலும், நான் எந்தக் கூட்டத்தினுடைய ஒலிநாடாவையும் கேட்டதில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் கூட்டங்களுக்கு அழைத்துக் கொண்டிருந்ததையும், அவர் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் சகோதரர்கள் என்னிடம் கூறுகின்றனர். நீங்கள் வெறுமனே ஒரு இரவில் அதைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது. நிச்சயமாக முடியாது. ஆனால் இப்பொழுது, நண்பர்களே, தேவ குமாரனாகிய நசரேயனாகிய இயேசு இங்கே பூமியில் இருந்த போது, ஒரு சமயம், தேவனிடமிருந்து ஏதோவொன்றை வாஞ்சித்த ஒரு ஸ்திரீ அங்கே இருந்தாள். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்றும் அவனுடைய பெயர் எலியா என்றும் அவள் விசுவாசித்தாள். இந்த சூனேமிய ஸ்திரீ அவனிடம் சென்று, அவனோடு தங்கினாள், அதற்கு என்ன காரணம் என்றும், அதற்கு என்ன நிவாரணம் என்றும் கண்டு பிடிக்கும் வரையில் எலியா தொடர்ந்து அதைச் செய்து கொண்டிருந்தான், பிறகு குழந்தை சுகமடைந்தது. ஒரு சமயம் இயேசுவின் வஸ்திரத்தை தன்னால் தொட முடியுமானால், தான் சுகமடைந்து விடலாம் என்று எண்ணின ஒரு ஸ்திரீ அங்கே இருந்தாள். எனவே அவள் கூட்டத்தினூடாக நெருக்கியடித்து தள்ளிக் கொண்டு (வந்து), அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு விட்டு, அந்தக் கூட்டத்தில் வெளியே போய், உட்கார்ந்து கொண்டாள், அல்லது நின்று கொண்டாள், அல்லது அவள் என்ன செய்தாளோ அது (எனக்குத் தெரியாது, அவள் என்ன செய்தாள் என்று வேதாகமம் சரியாகக் கூறவில்லை. ஆனால் இயேசுவோ, "என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டார். அவள் மறுத்து விட்டாள். கூட்டத்தினர் யாவருமே அதை மறுக்கத்தான் செய்தனர். அப்போஸ்தலன் பேதுரு, "ஆண்டவரே, 'யார் உம்மைத் தொட்டது' என்று கேட்கிறீரே, ஏன்," "திரளான ஜனங்கள் அனைவருமே உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே..." என்று கூறினான். அவர் கூறினார்: "நான் பலவீனமடைந்தேன், பலம் என்னை விட்டு நீங்கியது. நான் பலவீனமடைந்தேன்." எனவே அவர் ஜனங்ககளைச் சுற்றிப் பார்த்தார், அவர் அந்தப் பெண்ணைக் கண்டார். அவளுக்கு இரத்தப் பிரச்சினை இருந்தது. அவர் அவளிடம், "உன் விசுவாசம் உன்னைக் இரட்சித்தது" என்றார். அது சரியா? பின்னர் அவள் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டாள். 76. இப்போது நீங்கள், "அவர் இங்கே இருந்திருந்தால் நான் அவரைத் தொடுவேன், ஆனால் அவர் இங்கே இல்லை" என்று சொல்கிறீர்கள். "உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட, உங்களுக்குள் இருப்பேன்." அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. அதைத் தான் வேதாகமம் கூறுகிறதா? இன்றிரவு பரிந்து பேசுவதற்கு அவர் தான் பிரதான ஆசாரியராய் இருக்கிறார். அவரைத் தொடுங்கள். அவர் செய்த அநேக காரியங்களை, அவர் இந்த மேடைக்கு வந்து, அவர் அதே காரியத்தைச் செய்வாரானால், நீங்கள் அவரை ஏற்றுக் கொண்டு, அவருக்குள் களிகூர்ந்து கொண்டும், சந்தோஷமாகவும் இருப்பீர்களா? நீங்கள் அவ்வாறு செய்வீர்களானால், "ஆமென்" என்று கூறுங்கள். 77. இப்பொழுது, நான் என்னால் கூடுமான வரையில் சிறந்த முறையில் அதை விளக்கிக் கூறட்டும். வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இன்றியே கொடுக்கப்படுகின்றன. எவ்வளவு ஜனங்களுக்கு அது தெரியும்? வேதாகமம் அதைக் கூறுகிறது. நீங்கள் அவ்வாறு இருக்க விரும்புவதனால் அல்ல, அது தேவன் உங்களை எவ்வாறு உண்டாக்கியிருக்கிறார் என்பதாக உள்ளது, பாருங்கள். தேவன் எல்லாரையும் ஒன்று போல் உண்டாக்கவில்லை, அவர் எல்லாவற்றையும் ஒன்றுபோல உண்டாக்கவில்லை. அவர் ஒரேவிதமான வீட்டைக் கொண்டிருக்கவில்லை. அவரிடம்... இருக்கின்றன. அவரிடம் எவைகள் இருக்கின்றன, அவரிடம் பெரிய மலைகளும், சிறு மலைகளும் இருக்கின்றன; அவரிடம் பாலைவனங்களும் சமுத்திரங்களும் உள்ளன; அவரிடம் வெள்ளை நிற மலர்களும், இளஞ்சிவப்பு நிற மலர்களும், நீல நிற மலர்களும் இருக்கின்றன. நல்லது, அவரிடம் சிவப்பு தலைமயிருடைய மனிதர்களும் பெண்களும், கறுப்பு தலைமயிருடையவர்களும், இளம் பொன்னிற தலைமயிருடைய வர்களும், உயரமும் ஒல்லியானவர்களுமான சிலரும், குட்டையும் பருத்த உருவமும் உடைய சிலரும் மற்றும்... சிலரும் இருக்கிறார்கள். அவர் எல்லாவிதமான வழிகளிலும் அவர்களைக் கொண்டிருக்கிறார். அதைத்தான் அவர் விரும்புகிறார், அவர் பல்வேறு வகையான காரியங்களையுடைய ஒரு தேவனாயிருக்கிறார். அந்த விதமாகத் தான் அவர் தமது சிருஷ்டிப்பை உண்டுபண்ணினார். அவர் வித்தியாசமான ஊழியங்களைக் (ministering offices) கொண்டிருக்கிறார். 78. இப்பொழுது, உங்களால் உதவி செய்ய முடியாது, ஏனெ... நீங்கள் ஒரு சிறு குட்டையான மனிதனாய் இருக்கும் போது, நீங்கள் உங்களைத் தானே ஒரு மகா பெரிய உயரமான மனிதனாய் ஆக்கிக் கொள்ள முடியாது. நீங்கள் ஒரு பெரிய உயரமான மனிதனாய் இருப்பீர்களானால், நீங்கள் உங்களைத் தானே ஒரு சிறிய குட்டையான மனிதனாய் ஆக்கிக் கொள்ளவும் முடியாது. வேதாகமம், "கவலைப்படுகிறதினாலே எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" என்று கூறுகிறது. உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அப்படியே தேவன் உங்களை உண்டாக்கி யிருக்கிறார். இப்பொழுது, அவர் உண்டாக்கியிருக்கிறார்... இங்கே எனக்குப் பின்னால் ஒரு கூட்டம் பண்டிதர்களும் ஊழியக்காரர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். நான்... அப்படிப்பட்டவன் அல்ல. நான் வெறுமனே ஒரு உதிரி டயர் தான். நீங்கள் ஒரு... ஐ வாங்கும் போது, ஒரு உதிரி டயரானது. இப்பொழுது, சகோதரன் ஜெஃப்ரிஸ் அவர்களே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், நம்மிடம் மோட்டார் வண்டியின் காற்று அகற்றப்பட்ட ஒரு டயர் தான் இருக்கிறது என்று நான் கூறவில்லை. இப்பொழுது, அதைப் பெற்றுக் கொள்ள வேண்டாம், பாருங்கள். வேண்டாம். ஆனால் அந்த நோக்கத்திற்காகவே ஒரு உதிரி டயரை நீங்கள் உபயோகப்படுத்துகிறீர்கள். ஆனால், கவனியுங்கள், நான் இங்கே வெறுமனே... இருக்கிறேன். நான் ஒரு பெரிய பேச்சாளன் அல்ல, ஆனால் தேவன் எனக்கு ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறார்: அதுதான் தரிசனம் காண்பது. நான் ஒரு சிறிய குழந்தையாய் இருந்தது முதற்கொண்டு அவைகளைக் கண்டு வருகிறேன், பாருங்கள். அது... அவ்வாறு இருக்க வேண்டியதில்லை. அது ஜனங்களிடம் கேள்வி கேட்பது கூட இல்லை. நான் வசிக்கும் இடத்திலுள்ள அந்தப் பட்டணத்தின் மேயரையோ, உங்களைச் சுற்றிலுமுள்ள எந்த இடத்தையும் சேர்ந்த, எந்த ஜனங்களையும் கேட்டுப் பாருங்கள். ஒரு தடவை அதை விசாரித்துப் பார்த்து, அதைக் கண்டுகொள்ளுங்கள், அது எப்போதுமே பரிபூரணமாயுள்ளது. 79. இப்பொழுது, இன்றிரவில், அது கடினமாக இருக்கப் போகிறது என்று நான் உணருகிறேன். இப்பொழுது, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த சகோதரர்களால் உதவி செய்ய முடியாது. ஆனால் அது அப்படியே என்னை கிழித்தெறிந்து விடுகிறது, ஆனால் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த இரவில், எனக்கு என்ன நேரிட்டது, நான் இரண்டு மூன்று தரிசனங்களைக் காணத் தவறி விட்டேன். பாருங்கள், ஜனங்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கிறார்கள், அது எங்கிலுமுள்ள ஆவியாக உள்ளது, பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆவி உண்டு, அல்லது நீங்கள் மரித்துத் தான் இருக்கிறீர்கள். அந்த ஆவியைத் தான் நாம் தொடர்பு கொள்கிறோம். பாருங்கள், நாம் புற்று நோய் என்று அழைக்கப்படும் அந்த வளர்ச்சியைத் தொடர்பு கொள்வதில்லை, அந்த புற்று நோய்க்கு காரணமான அந்த வளர்ச்சியிலுள்ள ஜீவனைத் தான் தொடர்பு கொள்கிறோம். அது செல்களை வளரச்செய்து கொண்டிருக்கிற ஒரு கிருமியாக உள்ளது, நீங்கள் செல்களின் ஒரு பெருக்கமாக இருப்பது போன்று, அதுவும் செல்கள் பெருகுவதாய் உள்ளது. கண்புரை நோய், கட்டி, எதுவுமே ஒரு கிருமி தான், அல்லது அங்கே நல்ல கிருமிகள் இருக்கையில்... 80. சகோதரர்களே, அது சரிதான், நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. அங்கேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. அங்கேயே காத்திருங்கள். அதுதான் சரி, இன்றிரவில் நான் எப்படியும், ஒருவிதத்தில் கரகரப்பான குரலை தான் உடையவனாயிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கூட்டம் மனிதர்களைத் தான் நான் விசுவாசமுள்ள மனிதர்கள் என்று அழைக்கிறேன். இல்லையா? நாம் எல்லாருமே, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூற கூற வேண்டியவர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன். " கர்த்தருக்கு ஸ்தோத்திரம் " என்று சபை கூறுகிறது.] இங்கேயிருக்கும் ஜனங்களே, நீங்கள் அதைப் போன்ற மேய்ப்பர்களை பாராட்ட வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள், அதுதான் உங்களுடைய சுகத்திற்காக போதுமான உத்தமத்தோடு இருப்பது, அவர்கள் சுகமளிக்கிற ஆராதனைக்காக மேடையை விட்டு பின்னால் நிற்பதற்காகப் போய் விடுகிறார்கள். நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, அது மனோசாஸ்திரம் (psychology)" எனலாம். இல்லை, அது மனோசாஸ்திரம் அல்ல. அது அவ்வாறு இருக்குமானால், இயேசு அதைத்தான் உபயோகித்தார். அவர் ஒரு வீட்டிற்குள் சென்று, அவரையும், பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும், அந்தத் தகப்பனையும் தாயையும் தவிர மற்ற எல்லாரையும் வெளியே போகச் செய்தார். அது உண்மை தானா? அந்தப் பிள்ளையை உயிரோடெழுப்பத்தான் அவ்வாறு செய்தார். அவர் ஒரு மனிதனை வெளியே போகச் செய்தார். அது என்ன? அதுதான் ஆவிக்குரிய தொடர்பு. இப்பொழுது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா... உதவிக்காரர்கள்... (சகோதரன் பிரன்ஹாம் இருமுகிறார் - ஆசிரியர்.) என்னை மன்னியுங்கள். 81. இதோ ஒரு சீமாட்டி இருக்கிறார்கள். இப்பொழுது புதிதாக வந்திருப்பவர்களே, வேதவாக்கியத்தில் நம்பிக்கை வைப்பதற்கு இது அப்படியே ஒரு நல்ல இடமாக இருப்பதற்கு இது பொருத்தமாக இருக்கிறது. நாம் போதிக்கிற யாவுமே இந்த வேதாகமத்திலிருந்து வந்தாக வேண்டும், அல்லது அது சரியல்ல. அது ஒரு தேவனுடைய வாக்குத்தத்தமாய் இருக்க வேண்டும், அல்லது நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நாம் ஒருபோதும் இந்த வேதாகமத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம். நாம் அவ்வாறு விலகிச் சென்றால், நீங்கள் வந்து எனக்குக் காண்பியுங்கள். நாம் ஒருபோதும் இந்த வேதாகமத்தின் அட்டையை விட்டும் விலகிச் செல்வதில்லை, அது அவ்வாறே இருந்தாக வேண்டும், பழைய ஏற்பாடு மட்டுமல்ல, புதிய ஏற்பாடும், அவைகள் இரண்டுமே ஒன்று சேர்ந்து போயாக வேண்டும். வெறுமனே ஒரு வேதவாக்கியம் அல்ல, அது அதனோடு தொடர்ந்து போகட்டும், வேதவாக்கியங்கள் எல்லாமே ஒன்றாக இருக்க வேண்டியதாயுள்ளது. அதுவே... அதை உண்டாக்குகிறது. அது தேவனுடைய புத்தகமாகும், அவர் அதை ஞானிகளின் கண்களுக்கும், கல்விமான்களின் கண்களுக்கும் மறைத்து வைத்திருக்கிறார். இப்பொழுது, அவர் அதைச் செய்வதாகக் கூறினார். நீங்கள் அதை பாண்டித்தியத்தின் மூலம் அறிந்து கொள்வதில்லை, அப்படியானால் நீங்கள் அதை ஒருபோதும் அறிய மாட்டீர்கள். நீங்கள் அந்த ஆக்கியோனை க்கியோனை அறிந்து கொள்வதன் மூலமாகவே அதை அறியலாம். அவருடைய புத்தகத்தை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஒரே வழி அது மட்டுமே. 82. இப்பொழுது, இன்றிரவில் இந்தக் காட்சியானது அதே காட்சி தான்...நான் இதை சற்று முன்பு கூற விரும்பினேன், நான் (தெளிவற்ற வார்த்தைகள்). எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற, விசுவாசமுள்ள அந்த ஒரு கூட்டம் ஊழியக்காரர்களின் கீழ்ப்படிதல், நான் இங்கே இருப்பது முதற்கொண்டு ஒவ்வொரு இரவும், களைப்பாகவும், சோர்வாகவும் இருந்து பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன், நான் கர்த்தருடைய தூதன் வருவதற்காக காத்திருக்க வேண்டியதாயுள்ளது. உங்கள் எல்லாருக்கும் அது தெரியும், இல்லையா? ஆனால் சரியாக இப்பொழுதே, அவர் சரியாக இப்பொழுதே இங்கிருக்கிறார். அது உண்மை. அந்தப் பெண்மணி ஏற்கனவே பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பை ஏற்படுத்தி விட்டாள், அவள் அங்கே நின்று கொண்டிருக்கிறாள், ஏனென்றால் அது சரியாக அவளுக்கும் எனக்கும் இடையில் உள்ளது. அது அற்புதமாய் இல்லையா, எவ்வளவு கீழ்ப்படிதல்... அதுதான் காரியம்: அது தான் மரியாதை. மார்த்தாள் யேசுவிடம் ஓடிச்சென்று, "நல்லது, மாய்மாலக்காரனே, நாங்கள் உன்னை அழைத்த போதே நீ ஏன் வரவில்லை? நாங்கள் அந்த ஜெப ஆலயத்திற்கே (synagogue) திரும்பிப் போகிறோம்" என்று கூறியிருந்தால், என்னவாகியிருக்கும்? அந்த அற்புதம் நடந்திருக்காது. ஆனால் அவள் அவரை பயபக்தியோடு அணுகினாள். அவள், "ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்க மாட்டான், ஆனாலும், இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்" என்று கூறினாள். 83. பாருங்கள், அதைத்தான் அவள் செய்ய வேண்டுமென்று கருதினாள். அவள் பயபக்தியோடு தொடர்பு கொண்டாள், அந்தப் போர்ச்சேவகர் அவருடைய முகத்தை கந்தைத் துணியால் மூடி, அவருடைய தலையின் மேல் ஒரு கோலால் அடித்து, "இதைச் சொல், நீ ஒரு தீர்க்கதரிசியானால், உன்னை அடித்தது யார் என்று எங்களிடம் சொல்லு" என்று கூறினது போலல்ல, பாருங்கள். "யார் உன்னை அடித்தது என்று என்னிடம் சொல்." பாருங்கள், அவன் எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை, குற்றம் கண்டுபிடிக்க வருகிற வேறு யாருமே எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த சகோதரர்களைப் போன்று, பயபக்தியோடு வருபவர்கள் தான், அப்படி நீ வருவாயானால் நீ தேவனிடமிருந்து எதையாகிலும் பெற்றுக் கொள்வாய். என்னிடம் பயபக்தியோடு இருப்பதல்ல, நான் வெறுமனே உன்னுடைய சகோதரன் தான். இன்றிரவு எடுத்துக்கொள்ளப்படுதல் வந்து, கௌரவத்தின்படி அது நடக்குமானால், நீங்கள் எல்லாரும் எனக்கு முன்பே போய் விடுவீர்கள், ஏனென்றால் நான் அவருக்கு சரியான நேரத்தில் பருவத்திற்கு வெளியே பிறந்தவனல்ல. ஆனால் நான் அவரை நேசிக்கிறேன். இப்பொழுது, இதோ ஒரு சீமாட்டி இருக்கிறார்கள், அவர்களை எனக்குத் தெரியாது, நான் அவர்களை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. நாங்கள் இருவரும் தேவனுக்கு முன்பாக இங்கே நின்று கொண்டிருக்கிறோம், மரித்துப் போய் விழவும் முடியும், சரியாக இப்பொழுதே பக்கவாதம் தாக்கலாம். நான் கூட்டங்களில் அது சம்பவிப்பதைக் கண்டிருக்கிறேன். அது கூட்டங்களில் சம்பவிப்பதை எத்தனை பேர் எப்பொழுதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்கள்? என்னை ஹிப்னாடிஸம் செய்வதற்காக அந்த ஆள் வந்து, அந்த இரவில் அவன் அங்கே மேலே பால்கனி...யில் உட்கார்ந்து கொண்டிருந்ததை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அவன் அங்கே கீழே வந்து, என்னை ஹிப்னாடிஸம் பண்ணி, என்னை ஒரு நாயைப் போன்று குரைக்கச் வைக்கப் போவதாய் இருந்தான். பரிசுத்த ஆவியானவர் மறுபக்கம் திரும்பி, "பிசாசின் மகனே" என்றார். அவன் அந்த நேரம் முதற்கொண்டு பக்கவாதத்தினால் தாக்கப்பட்டான். அது ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்ததாகும், பாருங்கள். அவர்கள் அவனை கட்டிடத்தை விட்டு வெளியே தூக்கிச் சென்றனர். உங்களால் தேவனோடு விளையாட முடியாது. நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும். 84. ஒரு ஊழியக்காரர் ஒரு சபைக் கூட்டத்தினரைக் கொண்டு வந்தார், வலிப்பு நோயினால் அவதிப்பட்ட ஒரு பிள்ளையினிமித்தம் அவர்கள் தங்களுடைய தலையை தாழ்த்திக் கொண்டிருக்க வேண்டுமென்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன், அந்தப் பிள்ளை தன்னுடைய நாவைத் தொடர்ந்து கடித்துக் கொண்டிருந்தது; அவர்கள் அதனுடைய வாயில் ஒரு குச்சியை வைத்திருந்தனர்... அல்லது, துணிகளைக் துவைத்துக் காயப் போடும் போது, அதை பற்றிப்பிடிக்க வைக்கும் கிளிப்போடு (clothespin), (clothespin), அதில் ஒரு துணியையும் வைத்து, அதனுடைய வாயில் வைத்திருந்தனர் அது ஆர்கன்ஸாஸிலுள்ள ஜோன்ஸ்பரோவில் நடந்த சம்பவமாகும். அவன் அவ்விதமாக இந்த நாவைத் தொடர்ந்து கடிக்க முயற்சித்துக் கொணடிருந்தான், அப்போது மேடையிலேயே அந்தப் பிள்ளைக்கு சிறிது நேரம் உணர்விழப்பு ஏற்பட்டது. நான், "இப்பொழுது, நீங்கள் எல்லாரும் உங்களுடைய தலையை கீழே தாழ்த்தி இருங்கள்" என்று கூறி விட்டு, நான் ஜெபிக்கத் துவங்கினேன். அவர்களோ தங்கள் தலையைத் தாழ்த்தி வைக்கவில்லை. நான் தொடர்ந்து சுற்றிலும் நோக்கிப் பார்த்து, உங்கள் தலையை உயர்த்தியிருப்பவர்கள், உங்களுடைய தலையை கீழே தாழ்த்தி விடுங்கள்" என்று கூறினேன். நான் ஜெபிக்கத் துவங்கினேன், அவர்களோ தங்களுடைய தலையைத் தாழ்த்தவில்லை. நான் சுற்றும் முற்றும் திரும்பிப்பார்த்தேன், அங்கே ஒரு ஆள் இவ்விதமாக தன்னுடைய தலையை வைத்துக் கொண்டு பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தான், ஏறக்குறைய எட்டு அல்லது பத்து பேர் அவனோடு இருந்தனர், அல்லது அதற்கும் அதிகமான பேர் இருந்தனர். நான், "ஐயா, உம்முடைய தலையை கீழே தாழ்த்தி வையும்" என்றேன். அவன், "இது ஒரு பொது இடம், நான் அப்படி செய்ய வேண்டியதில்லை" என்றான். நான், "சரி, அப்படியானால், அது உம்மைப் பொறுத்தது" என்று கூறி விட்டு, "பிதாவே, அந்த மனிதனின் நிலையின் நிமித்தமாக இந்த அப்பாவி பிள்ளை அவதிப்பட அனுமதியாதேயும்" என்றேன். 85. இது சரியா இல்லையா என்று ஆர்கன்ஸாஸிலுள்ள ஜோன்ஸ்போரோவில் இருக்கும் பழைமை நாகரீகமான வேதாகம் வேளை கூடாரமாகிய ஜோன்ஸ்போரோ கூடாரத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் T. ரீட் (Richard T. Reed) அவர்களைக் கேட்டுப்பாருங்கள். லிட்டில் ராக்கிலுள்ள, 505, விக்டர் தெருவைச் சேர்ந்த G. H. பிரௌன் அவர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர் அங்கே இருந்தார். அந்த வலிப்பு நோய் அந்தப் பிள்ளையை விட்டு விலகியது, ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தைச் சேர்ந்த 28 பேர்... மேய்ப்பரும் அந்த எல்லா 28 பேரும் வலிப்பு நோயை வாங்கிக் கொண்டார்கள், அவர்கள் வாயில் நுரை தள்ளியபடி, சரியாக அங்கே சபையோர் இருந்த இடத்திலேயே தரையில் விழுந்தார்கள். நான் அறிந்துள்ள வரைக்கும், அவர்கள் இன்னும் அதை வைத்திருக்கிறார்கள். அவர்களில் அநேகர் வந்தார்கள், நான், "எனக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது, அது ஒரு தேவனுடைய சாபம், எனவே அது உங்களைப் பொறுத்தது. கீழ்ப்படியாமலிருந்தவன் நீ தான். உனக்கு விசுவாசம் இல்லை என்றால், கூட்டத்தை விட்டு வெளியே போகவும், அதைச் செய்ய வேண்டாம் என்றும் நான் உன்னிடம் கேட்டுக் கொண்டேனே. இப்பொழுது, அது உன்னைப் பொறுத்தது. எனக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது; நான் அந்த பாவத்திற்காக ஜெபிக்க மாட்டேன். இல்லை, ஐயா. அது உன்னைப் பொறுத்தது" என்று கூறி விட்டேன். எனவே, இதோ இங்கே இன்றிரவில் இரண்டு பேர் நிற்கிறோம். நான் ஒருபோதும் கண்டிராத ஒரு பெண்மணி இங்கே நிற்கிறார்கள். சீமாட்டியே, நாம் அந்நியர்களாயிருக்கிறறோமா? நாம் அந்நியர்கள் தான். அவள் எனக்கு அந்நியர்களாயிருக்கையில், நானும் அவளுக்கு அந்நியர் தானா என்று சற்று முன்பு நான் அறிந்து கொள்ள விரும்பினேன். 86. சரி. இப்பொழுது, இதற்கு முன்பு ஒருபோதும் கூட்டத்தில் இல்லாத ஜனங்களுக்கு, இது ஒரு காட்சியாக உள்ளது. இப்பொழுது, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து உயிர்த்தெழுந்து விட்டார். விட்டார். நாம் இந்த நாடகக் காட்சியை (drama) காண்பிக்கலாம். வரிசையில் ஒரு பெண்மணி முதலாவது வருவது இங்கு நடக்கிறது. இப்பொழுது, இயேசு எரிகோவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார், எனவே அவர் சமாரியாவைச் சுற்றிப் போக வேண்டியிருந்தது. ஏன்? பிதாவானவர் அவரை அங்கு அனுப்பினார். அவர் ஒரு கிணற்றண்டையில் உட்கார்ந்தார், அப்போது ஒரு ஸ்திரீ வெளியே வந்தாள், அவள் சமாரியாவைச் சேர்ந்தவளாய் இருந்தாள். இயேசு அவளைப் பார்த்து, "தாகத்துக்கு தண்ணீர் கொண்டு வா" என்றார். அவள், " யூதர்கள் சமாரியர்களைப் பார்த்து அப்படிப்பட்டதை கேட்பது வழக்கமில்லையே; நாம் ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் ஈடுபடுவது இல்லையே" என்றாள். இயேசு அவளிடம், "ஆனால் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது யார் என்று நீ அறிந்திருந்தாயானால், நீயே என்னிடம் தாகத்துக்குக் கேட்டிருப்பாய்" என்றார். அவள், "இந்தக் கிணறு ஆழமாயிருக்கிறதே, மொண்டுகொள்ள உம்மிடம் எதுவுமில்லையே, உமக்குத் தண்ணீர் ஏதாகிலும் எப்படி கிடைக்கும்?" என்றாள். அவர், "நான் கொடுக்கும் தண்ணீர் ஜீவத்தண்ணீராய் இருக்கிறது" என்றார். "ஏன்," அவள், "எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொண்டு வந்தார்கள், நீங்கள் எருசலேமில் தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே" என்றாள். இயேசு, "இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது, ஆவியில் தொழுது கொள்ளும் அப்படிப்பட்டவர்களையே பிதாவானவர் தேடிக் கொண்டிருக்கிறார்" என்றார். உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இப்பொழுது, நீங்கள் இதற்காக என்னுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் அவளுடைய ஆவியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ஆகையால், அந்த ஸ்திரீயினுடைய தேவை என்னவென்று, அவளுடைய பிரச்சனை என்வென்று அவர் கண்டுகொண்ட உடனே, அவர் அவளைப் பார்த்து, "நீ போய், உன்னுடைய புருஷனை அழைத்து வா" என்றார். அவள், "எனக்குப் புருஷனில்லை" என்றாள். "அது சரிதான், உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்" என்றார். 87. அவள் சொன்னாள், இப்பொழுது... கவனியுங்கள். புதிதாக வந்திருப்பவர்களே, அவள் அவரிடம் என்ன கூறினாள்? அவள், "ஏன், ஆண்டவரே, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்" என்றாள். அவள், "எங்களுக்குத் தெரியும், மேசியா வரும்போது...' என்றாள். அதுதான் கிறிஸ்து, அது சரியா? "மேசியா வரும்போது, இந்தக் காரியங்களைச் செய்வார்... எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவிப்பார், ஆனால் நீர் யார்?" என்றாள். அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். இப்பொழுது, அதுதான் நேற்று மேசியாவின் அடையாளமாக இருந்தது. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந் திருப்பாரானால், அது இன்றும் மேசியாவின் அடையாளமாக இருக்கிறது. அவர், "நான் செய்கிற காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள்" என்றார். அது சரிதானா? இப்பொழுது, வேதாகமத்தில் வேறு அநேக இடங்களிலும், அதே காரியம் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு அது தெரியும், இல்லையா? அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. பிலிப்பு நாத்தான்வேலை அழைத்துக் கொண்டு வந்த போதும், மற்ற காரியங்கள் நடந்த போதும் மற்றும் அநேக இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. அவர் கூட்டத்தில் நின்று கொண்டிருக்கையில், அவர்களுடைய நினைவுகளை அறிந்து கொண்டார். "நீங்கள் ஏன் இன்ன இன்ன காரியத்தைக் குறித்து உங்கள் இருதயத்தில் தர்க்கரீதியாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றார். 88. இப்பொழுது, இந்தப் பெண்மணி எனக்கும் நான் அவளுக்கும் அந்நியர்களாக இருப்போமானால், அவளைக் குறித்து அல்லது நான் அறியாத ஏதோவொன்றை தேவன் என்னிடம் கூற வேண்டியவராய் இருக்கிறார். இப்பொழுது, சீமாட்டியே, நீ இவ்விதமாக இவ்விதமாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கையில், சற்று நேரம், நான் உனனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்... ஏதோவொன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீ அறிகிறாய். அது உண்மை. அது நீ மேலே மேடைக்கு நடந்து வந்தது முதற்கொண்டு உனக்கு அவ்வித உணர்வு இருக்கிறது... ஏனென்றால் நான் ஒரு மாய்மாலக்காரன் அல்ல, சீமாட்டியே. நான் ஒரு கிறிஸ்தவன். அந்த வெளிச்சம் உன்னைச் சுற்றிலும் இருக்கிறது. அந்த படத்தில் நீ கண்ட அந்த வெளிச்சம், அது அங்கேயுள்ளது. இப்பொழுது, நீ இங்கே எதற்காக இருக்கிறாய் என்று அவர் என்னிடம் கூறுவாரானால், அது உண்மையா இல்லையா என்பதற்கு நீ தான் தீர்ப்பு செய்பவளாக இருப்பாய்; அப்படியானால், அவருடைய உயிர்த்தெழுதலை நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு என்ன தேவையிருந்தாலும், நீ என்ன விரும்பினாலும், உன்னுடைய விரும்பம் என்னவென்பதை அவர் என்னிடம் கூறுவாரானால், அவ்வாறு அவர் செய்வாரானால், நீ அதைப் பெற்றுக் கொள்வாயா? நீ அதைப் பெற்றுக் கொள்வாய். கூட்டத்தினர் அதை ஏற்றுக்கொண்டு, இந்த ஸ்திரீ ஒரு அந்நிய ஸ்திரீயாக இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்வீர்களா? 89. இப்பொழுது, அப்படியே என்னை நோக்கிப் பார். பேதுரும் யோவானும் அந்த வாசல் வழியாகக் கடந்து போன போது, "எங்களை நோக்கிப் பார்" என்று கூறினது போன்று, நான் அதைக் கொண்டு தான் இதைப் பொருள்படுத்திக் கூறுகிறேன். அது வெறுமனே கவனம் செலுத்துவது என்பது உனக்குத் தெரியும், உனக்குப் புரிகிறது, சற்று நேரம். நீ அங்கே அழுது கொண்டிருக்கும் காரணமாக, நீ பார், நீ அழுவது எனக்கு விருப்பமில்லை, ஆனால் உன்னால் அதைத் தவிர்க்க முடியாது, சற்று முன்பு, ஏனென்றால் நீ மிகவும் சாந்தமுள்ளதும், தாழ்மையுள்ளதுமான ஒரு உணர்வை கொண்டிருக்கிறாய், தேவனுடைய தூதனானவர் இங்கே என்னருகில் இல்லை, உன் மேல் தான் இருக்கிறார். ஆகையால் தான் அவ்விதமாக உணருகிறாய். நீ ஒரு அலர்ஜியினால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறாய். அது சரியா? அந்த சீமாட்டி, "அது உண்மை" என்று கூறுகிறாள். அது உண்மை என்றால், உன்னுடைய கரத்தை உயர்த்து. அது தான் உண்மை. பார், அவர் சொன்னதை நான் கேட்டேன். அது உண்மையாக இருக்கிறது. நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாய் என்று நம்புகிறேன். இப்பொழுது, நீ அப்படியே அவ்விதமாய் உணர்கிறாய், இல்லையா? அதை மட்டுப்படுத்தக் கூடிய எதுவுமேயில்லை என்று தோன்றுகிறது. அதற்காக அவர்களால் எதையுமே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இதற்குப் பரிகாரத்தை வைத்திருக்கிற அவருடைய பிரசன்னத்தில் நீ நின்று கொண்டிருக்கிறாய். ஆமாம்... அவர் நிவாரணத்தை வைத்திருக்கிறார். அது உண்மை. 90. அது அவரென்று நீ விசுவாசிக்கிறாயா? நான் அதை உனக்கு நிரூபிக்கட்டும், அது அவர் தான். நீ தேவனுடைய காரியங்களை ஆழமாகத் தேடின போதிலும், நீ தேவனுடைய வழிகளில் ஆழமாக நடந்த போதிலும், உனக்கு ஒரு அருமையான ஆவி இருக்கிறது. உன்னுடைய இருதயத்தில் ஒரு பாரம் கூட இருக்கிறது. அது சரியே. அது வேறு யாரோ ஒருவருக்காக. அது உண்மை. அது உன்னுடைய கணவனாருக்காக. அவர் மோசமானவர், அது குடும்ப விவகாரம். அவர் மட்டுமீறிய குடிகாரர். அது சரியே. ஃபுல்லர்டன். நீ திருமதி. சி... ஃபுல்லர்டன். நீ என்பது போன்று அழைக்கப்படும் ஒரு தெருவிலிருந்து நீ வருகிறாய். என்ன...? சிகாமோர். 120 சிகாமோர் தெரு என்பது தான் உன்னுடைய எண். அவர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டார் என்று நீ விசுவாசிக்கிறாயா? சீமோனின் பெயர் பேதுரு என்று அவனிடம் கூறின அதே நபர். நீ அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறாய் என்று விசுவாசிக்கிறாயா? நீ எதற்காக வந்திருக்கிறாயோ அதைப் பெற்றுக் கொள்வாய் என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால் நீ விசுவாசித்தபடியே உனக்கு உண்டாகும். தேவன் உன்னோடு இருப்பாராக. 91. தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள். சந்தேகப்படாதீர்கள். அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள். இது எப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி என்று எனது சபையோர் மாத்திரம் அறியக்கூடுமா என்று நான் விரும்புகிறேன். ஓ, என்னவொரு அற்புதமான காரியம், அற்புதம்... அறிந்துகொள்வது எப்படி... கிறிஸ்தவர்களே, உங்களுடைய கர்த்தர்.... என்பதற்காக நீங்கள் சந்தோஷமாய் இருக்கிறீர்களா. அதனுடைய நிறுவனர் இன்னும் ஜீவிக்கிறார் என்று நிரூபிக்கக்கூடிய உலகத்தின் ஒரே மார்க்கம் இதுதான். தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் அதை மீண்டும் எடுத்துக் கொள்ளவும் அதிகாரம் பெற்றிருந்த ஒரே நபர் அவர் மாத்திரமே. இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும், அவர் கலிலேயா கடற்கரையில் நடந்த அந்நாளில் அவர் இருந்தது போன்று, அவர் அப்படியே அவர் அவ்வளவு ஜீவனுள்ளவராய் இருக்கிறார், அவர் சரியாக இப்பொழுதே இங்கு நின்று கொண்டிருக்கிறார். நீ அவரை நேசிக்கும்படி செய்வதற்காகவும், நீ சபைக்குப் போய், நீ செய்து கொண்டிருக்கிற காரியங்களை விட்டு விடவும், ஒவ்வொருவரும் அவரை நேசித்து, அவரை சேவிக்கும்படி செய்ய முயலவும் அவர் எவ்வளவாய் அவைகளை செய்ய வேண்டியவராய் இருந்தார். 92. வாலிப கிறிஸ்தவர்களே, நீங்கள் சந்தோஷமாய் இல்லையா? இன்றிரவு, உங்கள் கரத்தை உயர்த்தி, அவரை இரட்சகராய் ஏற்றுக் கொண்டவர்களே, நீங்கள் அதைச் செய்ததற்காக சந்தோஷமாய் இருக்கிறீர்கள் என்பதற்காக, நீங்கள் மீண்டுமாக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அது அற்புதம், பாருங்கள். பாருங்கள். உங்கள் கர்த்தர் ஜீவிக்கிறார், அவர் இங்கே இருக்கிறார், அது... இப்பொழுது, அது உங்கள் சகோதரன் அல்ல. நான் வெறுமனே உங்கள் சகோதரன் தான், அவரோ உங்கள் உங்கள் கர்த்தராயிருக்கிறார், ஆனால் அதைச் செய்து கொண்டிருக்கிற அவருக்கு என்னைத் தானே அப்படியே விட்டுக்கொடுப்பது தான் இதுவாகும். இதுதான் அந்த நோயாளியா... அல்லது அந்த சீமாட்டியா? நான், நோயாளி" என்று கூறக் கருதவில்லை. சிலர் நிச்சயமாக ஒரு நோயாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சீமாட்டியே, நீங்கள் மிகவும் அருமையான வரவேற்கும் ஒரு ஆவியைக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. கிறிஸ்துவுக்குள் உங்களுக்கிருக்கிற உத்தமத்தையும், என்னிடத்தில் உங்களுக்கிருக்கிற உத்தமத்தையும் நான் பாராட்டுகிறேன், ஒருக்கால் பணக்காரர்களையும், ஞானிகளையும், கல்விமான்களையும் சிக்கவைப்பதற்காக ஒரு ஏழையான தகுதியற்ற நபரை அழைக்கிறீர், அது என்னுடைய தெரிந்து கொள்ளுதலினால் அல்ல, அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் மூலமே. அவர் அற்புதமாய் இல்லையா? அவர் காரியங்களை எப்படி செய்கிறார்? கவனியுங்கள், நிக்கோதேமு அவரை அழைத்த போது, வயதானவன் அந்த வாலிபரிடம் வருகிறான், ஒரு ஐசுவரியவான் தம்முடைய தலை சாய்க்க இடமேயில்லாத ஏழை ஒருவரிடம் வருகிறான். பட்டம் பெற்றிருந்த ஒருவன் எந்தப் பட்டமும் பெற்றதாக உரிமை கோராத ஒருவரிடம் வந்து, உதவி கேட்கிறான். தேவன் எப்படி காரியங்களைச் செய்கிறார் என்று புரிகிறதா? அவர் அற்புதமானவர் அல்லவா? 93. இப்பொழுது, நீ மாறாத நபராகிய இயேசுவிடம் வருகிறாய். நான் வெறுமனே அவருடைய பிரதிநிதியாக இருக்கிறேன். உன்னிடம் என்ன கோளாறு உள்ளது என்று அவர் என்னிடம் கூறுவார். விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசித்தாக வேண்டும், இல்லையா, சகோதரியே? எனக்கு உன்னைத் தெரியாது. இப்பொழுது, நீ உன்னைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கிற கடுமையான நரம்புக் கோளாறைக் கொண்டிருக்கிறாய். அது உண்மை. பிறகு நீ ஒரு விதமாக முடமானவளாக இருக்கிறாய், அது... ஓ, அது கீல்வாதமாய் உள்ளது. உனக்கு கீல்வாதம் உள்ளது. நீ நடந்து போகும் விதத்தை நான் காண்கிறேன், அது கீல்வா...ஐப் பெற்றிருக்கிறது. ஏனென்றால் அது நல்லவிதமாய் உள்ளது, உள்ளது, அதன்பிறகு, சில சமயங்களில் அது மீண்டும் மோசமாகி விடுகிறது. அது சிறிது காலம் வந்து போகிறது, அது போன்று இருக்கிறது. அது கணிசமான நேரமாகவும் கூட உனக்கிருக்கிறது. நீ தெருவின் பக்கத்திலிருந்து விலகுவதற்காக பக்கவாட்டில் நடந்து செல்லும் போது, நீ தெருவின் பக்கவாட்டு பக்கத்திற்கு விலகிச் செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். ஓ, அது ஒரு மோட்டார் வாகனம். அதுதான் அது. நீ அந்த மோட்டார் வாகனத்திற்குள் ஏறும்படியாக பக்கவாட்டுப் பகுதியில் நடந்து செல்வதை நான் காண்கிறேன்... அதை அதன் பக்கத்தில் நான் காண்கிறேன். அதன்பிறகு உன்னுடைய காதில் ஏதோ கோளாறு உள்ளது. அதுதான் அந்த மோசமான பாகம், அங்கே ஒரு கறுத்த நிழல் வருகிறது. நீ பயந்து கொண்டிருக்கிறாய். உன்னுடைய மூளையில் புற்று நோய் உள்ளது. பயப்படாதே. உன்னை அறிந்திருக்கிற அவருடைய பிரசன்னத்தில் நின்று கொண்டு, நீ உன்னால் எப்பொழுதாவது பயப்பட முடியுமா? அதுதான் அதைச் செய்தது. இப்பொழுது அது உன்னைத் தொல்லைப்படுத்தாது. உன்னுடைய பாதையில் செல். இப்பொழுது, நீ சுகமாகப் போகிறாய். சகோதரியே, உன்னுடைய விசுவாசம் தான் அதைச் செய்கிறது. தேவன் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. பயப்படாதே. விசுவாசம் உள்ளவளாயிரு. 94.மாலை வணக்கம். நீ ஒரு நோயாளியைப் போன்று காணப்படவில்லை. எப்போதுமே தோற்றத்தை வைத்துக் கொண்டு அதைக் கூற முடியாது. நான் இம்மனிதனைப் பார்த்துக் கூறுவேனானால், அல்லது இங்கே ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிற இம்மனிதனைப்பார்த்து, "அந்த மனிதன் முடமானவன்" என்று கூறினால். யாருக்குமே அது தெரியும். ஆனால் இப்பொழுது, ஒரு ஆரோக்கியமான நபரிடம் நான் கூறுவேனானால், அங்கே அற்புதம் உள்ளது. நீ ஆரோக்கியமாகக் காணப்படுகிறாய். இப்பொழுது, உன்னிடம் என்ன கோளாறு உள்ளது? அங்கே தான் அந்தக் காரியம் உள்ளது. அந்த மனிதனின் முடமான காரியத்தை யாராலும் காண முடியும். அந்த மனிதனின் முடமான காரியம், ஒருவேளை அந்த சக்கர நாற்காலியில் இருக்கும் அச்சிறு பெண் அவர்கள் முடமாகியிருக்கின்றனர். ஆனால், உன்னைக் குறித்து என்ன? அங்கே உ உன்னிடத்தில் ஏதாகிலும் கோளாறு உள்ளதா? ஒருக்கால் உன்னிடத்தில் கோளாறே இல்லாமலிருக்கலாம். ஒருக்கால் நீ தேவனிடம் வாஞ்சிக்கிற ஏதோவொன்றாக இருக்கலாம். அவர் அதை அறிகிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? 95. ஒரு காரியம் என்னவென்றால், உன்னுடைய கோளாறு உன் முதுகில் உள்ளது. உனக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது. அது உண்மை. நச்சுப்பொருளினால் உண்டான விஷம் மற்றும் காரியங்களின் காரணமாக அது உண்டாகியது. அது மோசமாக உள்ளது. அதன் காரணமாக அநேக கோளாறுகள் உண்டானது. எனவே அவர் கூறுகிறார் மருத்துவர். அதன்பிறகு நான் காண்கிறேன், கொஞ்ச காலமாக, நீ ஒரு மருத்துவமனை அல்லது ஏதோவொன்றுக்கு முன்னும் பின்னுமாகப் போய்க் கொண்டிருக்கிறாய். ஓ, ஆம். அது உன்னுடைய கண்ணாக உள்ளது. நீ.. அது அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியதாய் இருந்தது, நீ அப்படியே தொடர்ந்து அதை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறாய், ஏனென்றால் நீ கொஞ்ச காலமாகவே அதை விசுவாசித்துக் கொண்டிருக்கிறாய், தேவன் அதைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொள்வார். அது சரியே. சரி. இப்பொழுது நீ அதை விசுவாசிக்கிறாயா? அப்படியானால், போய் அதைப் பெற்றுக் கொள். என்னுடைய சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீ எதை வேண்டிக் கொண்டாயோ அதைப் பெற்றுக் கொள்வாயாக. நிச்சயமாகவே, நீ சந்தேகித்துக் கொண்டிருக்கவில்லை. விசுவாசிக்கிறாயா? உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால்... அந்தச் சிறு பெண்ணுக்கு அடுத்ததாக அமர்ந்திருக்கிற சீமாட்டியே, உனக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது, நீ சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறாயா, இல்லையா? நீ அதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தாய், இல்லையா? சரி, நீ வேண்டிக் கொண்டதை நீ பெற்றிருக்கிறாய். உன்னுடைய விசுவாசம் அவரைத் தொட்டிருக்கிறது. ஆமென். நான் என்ன கூறக் கருதுகிறேன் என்று புரிகிறதா? உனக்கு ஒரு ஜெப அட்டை அவசியமில்லை. உனக்கு விசுவாசமே அவசியம். தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிரு. சந்தேகப்படாதே. 96. மாலை வணக்கம். இங்கே பின்னால் இருக்கிற யாரோ ஒருவர் ழுத்துக் கொண்டிருக்கிறார். அவர் சில ஊழியக்காரர்கள் இடையே நின்று கொண்டிருக்கிறார்... அல்லது அவர் அமர்ந்திருக்கிறார். ஐயா, உமக்கு மிகவும் கடினமான ஒரு நேரம் உண்டாகியிருக்கிறது. உனக்கு காசநோய் உள்ளது. நீ ஒரு மருத்துவமனையிலோ அல்லது ஏதோவொன்றிலோ இருக்கிறதை நான் காண்கிறேன். அவர்கள் உன்னுடைய நுரையீரலில் ஒன்றை வெளியே எடுத்து விட்டார்கள். நீ ஒரு ஏழையான மனிதன். அது உண்மை. விசுவாசிக்கிறாயா? உன்னுடைய விசுவாசம் அவரைத் தொட்டிருக்கிறது. என்னால் உன்னை சுகமாக்க முடியாது, ஆனால் நீ அதை விசுவாசிக்கிறாயா? அப்படியானால், நீ விசுவாசிக்கிறபடியே உனக்கு ஆகக்கடவது. சகோதரர்களே, கர்த்தருடைய ஊழியக்காரர்களாக, உங்களுடைய கரங்களை அவன் மேல் வையுங்கள். தேவனே, மரித்துக் கொண்டிருக்கிற அம்மனிதனுக்கு, ஏதோவொன்று சம்பவிக்க வேண்டுமென்று அவன் அறிந்திருக்கிறான், பிதாவே, நான் அந்த மனிதர்களோடு என்னுடைய ஜெபத்தையும் இணைத்துக் கொள்கிறேன். கர்த்தாவே, அவனுடைய ஜீவன் பிழைத்து அவனைப் போகச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 97. சரி, ஐயா. உம்மிடம் ஜெப அட்டை இருக்கிறதா? இல்லை, உம்மிடம் இல்லை... நல்லது, உமக்கு ஒரு ஜெப அட்டை அவசியமில்லை, பாரும். உம்முடைய விசுவாசம் பற்றிப் பிடித்துக் கொண்டு விட்டது... உமக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை, பாரும். அதைச் செய்தது உம்முடைய விசுவாசம் தான். உம்மிடம் ஒரு ஜெப அட்டை இருந்திருந்தால், அதை யாரோ ஒரு சகோதரரிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லியிருப்பேன், ஆனால் உம்மிடம் ஜெப அட்டை இல்லை. பாரும், உமக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை. இப்பொழுது, நீர் வித்தியாசமாக உணருகிறீர், இல்லையா? ஒரு நிமிடம் இங்கே வாரும். "ஆமென்" என்று கூறும். இப்பொழுது, நீர் எவ்வாறு உணருகிறீர்? (அந்த மனிதன், "நன்றாக உணருகிறேன். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக" என்று கூறுகிறார்.) ஆமென்! ஓ, தேவனே! அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார், உம்மால் நடக்க முடியவில்லை, அது சரிதானே? "இல்லை, என்னால் நடக்க இயலவில்லை." அவரால் தம்முடைய மூச்சை விட கூட முடியவில்லை, அவர் கட்டிடத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார், இல்லையா? இப்பொழுது அவரைக் கவனியுங்கள். என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. களிகூர்ந்து கொண்டே உனது பாதையில் செல்லும். 98. நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுவோம். இவரிடம் கேட்கலாம். நான் இவரை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதுமே கண்டதில்லை. அவர் அநேகமாக பின்னாலுள்ள வழியில், அல்லது ஏதோவொன்றிலிருந்து வருகிறார். அவர் அங்கே பின்னால் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஒருக்கால் தேவன் அவரை அங்கே பின்னால் அமர வைத்திருக்கலாம். அதுதான் அது: அந்த பிரசங்கிமார்களுக்காக. ஆமென்! அதெல்லாம் எதைப் பற்றியது என்பது புரிகிறதா? தேவன் எப்படியாக எல்லாவற்றையும் சரியாக செய்கிறார் என்பது புரிகிறதா? ஓ, அவர் அற்புதமானவராயில்லையா? இப்பொழுது, அன்பு நிறைந்த உங்கள் கர்த்தராகிய இயேசுவை உங்களால் எப்படி சந்தேகிக்க முடியும்? 'உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்... சீமாட்டியே, நீங்கள் இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாகவே என்னால் உங்களை சுகமாக்க முடியாது, உங்களை சுகமாக்க என்னிடம் எதுவுமே கிடையாது. இயேசு இந்த சூட்டை அணிந்தபடி இங்கே நின்று கொண்டிருந்தால், அவரால் உங்களை சுகமாக்க முடியாது, ஏனென்றால் அவர் ஏற்கனவே அதைச் செய்து விட்டார் - நீங்கள் வியாதியஸ்தர்களாக இருந்தால். உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும், அவர், "நீங்கள் என் நாமத்தினாலே பிதாவிடம் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்" என்று கூறியிருப்பார். அவர் அதைக் கூறினாரா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவே தேவ குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசி.. அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஏறக்குறைய நான் பிறந்த போது, இந்தப் படத்தில் நீங்கள் காணும் அந்த வெளிச்சம் ஒரு சிறு ஜன்னலில் வந்து, எப்போதுமே சாட்சி பகரும்படியாக அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட இந்த காரியங்கள் எல்லாவற்றையும் குறித்த விவரணத்தை நான் கூறினதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா... அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படியாகத்தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்தப் படத்தில் நீங்கள் காண்பது அக்கினிஸ்தம்பம் தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதே அக்கினி ஸ்தம்பம் தான் இஸ்ரவேலரை வழிநடத்தின அக்கினிஸ்தம்பம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பவுல் அது யார் என்று அறியாதிருந்த போதும், அது பிரகாசமான வெளிச்சமாய் இருந்த போதும், அந்நாளில் பவுல் சந்தித்தது அந்த அதே அக்கினிஸ்தம்பத்தை தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் துன்பப்படுத்துகிற நீர் யார் என்று அவன் கூறினான். 99. அவர், நான் தான் இயேசு" என்றார். இயேசு, "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், நான் தேவனிடத்திற்குத் திரும்பிப் போகிறேன்" என்றார். அப்படியானால், இங்கே அவர் விஞ்ஞான நிரூபணத்தின் மூலம் மாறாதவராய் இருக்கிறார்: அவர் இன்றும் அதே அக்கினிஸ்தம்பமாக இருக்கிறார். பவுலுக்கு பிரத்தியட்சமான அதே ஒளியாகவும், மோசேயோடு இருந்த அதே ஒளியாகவும், பவுலோடு இருந்த அதே ஒளியாகவும் இருக்கிறார், அதே ஒளி தான் இன்றும் சபையோடு இருக்கிறது. "அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்." அது சரியா? அப்படியானால், அவர் வல்லமையில் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது. நான் ஒரு வயது சென்ற பெண்மணியைக் காண்கிறேன். அது உண்மை. அந்தப் பெண்மணி உன்னுடைய தாயாராயிருக்கிறார்கள், அவர்கள் சிறுநீர்ப்பை கோளாறு போன்ற ஏதோவொரு கோளாறினால், அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் முடமான ஒருவராய் இருக்கிறார்கள் - அது உங்கள் தாயார் நீ அவர்களுக்காக நின்று கொண்டிருக்கிறாய். நீ அந்தக் கைக்குட்டையை அவர்கள் மேல் வைக்க விரும்புகிறாய். அது உண்மை. நான் மனோதத்துவத்தினால் உன் மனதிலுள்ளவைகளை படித்துக் கொண்டிருக்கவில்லை. நான் என்ன காண்கிறேனோ அதை மாத்திரமே கூறிக் கொண்டிருக்கிறேன். அது சரியா இல்லையா என்று நீயே தீர்ப்பு கூறுபவளாக இருக்கிறாய். அந்த சீமாட்டி, "அது சரியே" என்று கூறுகிறாள். அது சரிதானா? அது சரியே." நல்லது. அப்படியானால், நீ கூறியிருப்பதை விசுவாசித்து, அது உன்னுடைய இருதயத்திலிருந்து உத்தமமாக வந்து, நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பாயானால், உனக்கு வாஞ்சையாயிருக்கிற வேறு ஒன்றையும் நான் உன்னிடம் கூறுகிறேன். அது வேறு யாரோ ஒருவருக்காகவும் கூட இருக்கிறது: அது போதையூட்டும் அபின் மயக்க மருந்துவிற்கு (dope) அடிமைப்பட்டிருக்கிற சகோதரன். அது உண்மை. இப்பொழுது, உன்னை அறிந்து, உன்னை போஷிக்கிறவர் இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா. இப்பொழுது, உன்னைச் சுற்றிலும் அது வெளிச்சமாக மாறுகிறது. நீ அப்படியே அதை விசுவாசிப்பாயானால், நீ அதைப் பெற்றுக் கொள் முடியும். நான் உன்னுடைய கைக்குட்டையை வைத்திருக்கட்டும். தேவனே, அதை அருளும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது உண்டாவதாக. இப்பொழுது சந்தேகப்படாதே. விசுவாசித்துக் கொண்டே போ. நீ கேட்டுக் கொண்டதைப் பெற்றுக் கொள்வாயாக. 100. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு நன்றி. ஆமென்! இயேசு, "நீ விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கைகூடும்" என்றார். அது சரிதான். இல்லையா?ஆனால் நீ விசுவாசித்தாக வேண்டும். விசுவாசத்தினாலே அல்லாமல் யாருமே எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஐயா, உமது கரத்தை அவர் மேல் வையும்: அழ வேண்டாம். விசுவாசம் கொண்டிரும். தேவனால் உமது இருதயக் கோளாறைக் குணப்படுத்த முடியும் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் அவ்வாறு விசுவாசிக்கிறீரா? அவர் அதிலிருந்து சுகப்படுத்த வேண்டும் என்று நீர் விரும்புகிறீர், இல்லையா? அது உண்மையானால், உமது கரத்தை மேலே உயர்த்தும். நான் உம்மை என்னுடைய ஜீவியத்தில் கண்டதேயில்லை, ஆனால் உமக்கு மோசமான ஒரு இருதயம் இருக்கிறது. உமக்கு அடுத்திருக்கும் அந்த சீமாட்டி, அவள் நரம்புக் கோளாறிலிருந்து சுகமடைய விரும்புகிறாள், இல்லையா, சீமாட்டியே. உன்னுடைய கரத்தை மேலே உயர்த்து, பாருங்கள். 101. என்னை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிற வாலிபனே, நீ என்ன நினைக்கிறாய்? நீ விசுவாசிக்கிறாயா? நீ ஒரு பழக்கத்தை விட்டு விட விரும்புகிறாய், இல்லையா? அது தான் புகைபிடிக்கும் பழக்கம், இல்லையா? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? உனக்கும் இந்த சக்கர நாற்காலியில் இருக்கும் இந்த பையனுக்கும் கூட அங்கே ஏதோவொரு தொடர்பு உள்ளது. நீங்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்திருக்கிறீர்கள். மகனே, என்னால் உன்னை சுகமாக்க முடியாது. என்னால் அதைச் செய்ய முடியாது. என்னால் அவர்களையும் சுகமாக்க முடியாது. ஆனால் ஏதோவொரு கட்டிட வேலையில், உனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அது உன்னுடைய முதுகுத்தண்டை காயப்படுத்தி விட்டது; அதன் காரணமாக உன்னுடைய முதுகெலும்பு செயல்பட முடியாமல் முடமாக்கிப் போட்டது. அது உண்மை தான், இல்லையா? உனக்கு காயம் ஏற்பட்ட சமயத்தை நான் காண்கிறேன். ஆனால் என்னால் உன்னை சுகமாக்க முடியாது. நீ வெறுமனே விசுவாசிப்பாயானால், அது அப்படியே நீங்கிப் போய் விடும். நீ அதை விசுவாசிப்பாயானால், நீ அதை விசுவாசிப்பாயானால், உன்னுடைய சக்கர நாற்காலியை எடுத்து, அதைத் தள்ளிக் கொண்டு வீட்டிற்குப் போ. நீ விசுவாசிக்கிறாயா? தேவனிடத்தில் விசுவாசமாயிரு. 102. சரியாக அவனுக்கு அடுத்ததாக இருக்கும் சீமாட்டியே, நீ விசுவாசிக்கிறாயா? உனக்கும் கூட இருதயக் கோளாறு உள்ளது. தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? சீமாட்டியே நீ என்ன நினைக்கிறாய்? நரம்பு வீக்கத்திலிருந்து (phlebitis) தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று நீ நினைக்கிறாயா? அவர் உன்னை சுகப்படுத்துவாரா? அந்த சீமாட்டி, "ஆம்" என்கிறாள். காக்கை வலிப்பு வியாதியினால் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த பிள்ளையும் கூட சுகமாக முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவள் மேல் உன்னுடைய கரத்தை வை. மற்றவர்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒருவர் மற்றவர் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். ஓ தேவனே, இயேசுவே மரித்தோரிலிருந்து எழுப்பினவரே. இங்கேயிருக்கிற ஒவ்வொரு பிசாசையும் நீர் கடிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். சாத்தானே, வெளியே வா. தேவனுடைய இராஜ்யம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக.